16/08/2014

தயிர் சாதமா..? பிரியாணியா..? - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!

உலகம் முழுவதும் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு நோய்களின் தன்மைக்கேற்ப சில உணவுக் கட்டுப்பாடுகளை அறிவுறுத்திவருகின்றனர்.

இந்த உணவுக் கட்டுப்பாடுகளில் மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுப் பொருட்கள் நமக்குச் சுவையிலோ அல்லது வேறு வகையிலோ பிடிக்காமல் போய்விட்டால், அதற்கு இணையான அல்லது சம அளவு சத்துக்களைக் கொண்ட, நமக்குப் பிடித்த மாற்று உணவு ஏதும் இருக்காதா என்ற ஏக்கத்துடன் பிற உணவுப் பொருட்களைத் தேடத் தொடங்குகிறோம்.

உதாரணத்துக்கு மருத்துவர் தயிர் சாதம் சாப்பிடச் சொன்னால், மனது பிரியாணியின் பின்னால் செல்லும். மருத்துவர் பரிந்துரைத்த உணவுப் பொருளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன - நமக்குப் பிடித்த உணவுப் பொருளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்று ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறோம். நம் தேடலை எளிதாக்குகிறது ஓர் இணையதளம்.

ஒப்பிட்டு அறியலாம்

இந்த இணையதளத்தில் இரண்டு காலிப் பெட்டிகள் இருக்கின்றன. ஒரு காலிப் பெட்டியில் மருத்துவர் பரிந்துரைத்த உணவுப் பொருளின் பெயரை உள்ளீடு செய்துகொள்ளலாம். அடுத்த காலிப் பெட்டியில் நமக்குப் பிடித்தமான உணவுப் பொருளை உள்ளீடு செய்யலாம்.

அதன் பிறகு கீழுள்ள ஒப்பிடு (Compare) என்னும் பெட்டியை க்ளிக் செய்தால், புதிய பக்கம் ஒன்று பார்வைக்குக் கிடைக்கிறது. இப்பக்கத்தில் நாம் உள்ளீடு செய்த இரண்டு உணவுப் பொருட்களின் சத்துப் பொருட்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் பரிமாறப்படும் அளவு (Serving) மற்றும் அந்த அளவுக்கேற்ப உணவுப் பொருளிலுள்ள கலோரிகள் (Calories), மாவுச் சத்து (Carbohydrates), கொழுப்புச் சத்து (Fat), புரதச் சத்து (Protein) போன்ற அளவுகள் நமக்குக் கிடைக்கும்.

இதன் கீழ்ப்பகுதியில் குறிப்பிட்ட உணவுப் பொருளின் வேறு சில வகைகளும் அவற்றின் கலோரி அளவும் கொடுக்கப்பட்டிருக்கும்.

உங்களுக்குப் பிடித்த இரண்டு உணவுப் பொருட்களின் சத்துக்களை ஒப்பிட்டு அறிந்துகொள்ள விரும்பினால் http://www.twofoods.com/ என்னும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.
+

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் மைதா சீடை செய்முறை - இதோ உங்களுக்காக...!

கிருஷ்ணனுக்கு சீடையும் மிகவும் இஷ்டம். எனவே பலர் கிருஷ்ண ஜெயந்தி அன்று சீடை செய்வார்கள். உங்களுக்கு சீடையை பக்குவமாக செய்யத் தெரியாதெனில், தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ள மைதா சீடை ரெசிபியை படித்து செய்து பாருங்கள். நிச்சயம் இது எளிமையான செய்முறையைக் கொண்டிருப்பதுடன், சுவையாகவும் இருக்கும்.

சரி, இப்போது அந்த மைதா சீடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா...!

தேவையான பொருட்கள்:-

  • மைதா - 1 
  • கப் பொட்டுக்கடலை - 2 
  • டேபிள் ஸ்பூன் வெண்ணெய் - 3 
  • டீஸ்பூன் எள் - 1 
  • டீஸ்பூன் சீரகம் - 1/4 
  • டீஸ்பூன் பேக்கிங் சோடா - 1/4 
  • டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு 
  • எண்ணெய் - தேவையான அளவு 
  • தண்ணீர் - தேவையான அளவு 

செய்முறை:-

முதலில் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் மைதா மாவை போட்டு கட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 15 நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும்.

பின்னர் அதனை இறக்கி, ஒரு தட்டில் போட்டு கையால் உதிர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை சல்லடை கொண்டு ஒரு முறை சலித்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் பொட்டுக்கடலை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

 அதனையும் சலித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா, பொட்டுக்கடலை மாவு, உருக வைத்த வெண்ணெய், சீரகம், எள், உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து, பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின் அதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள சீடைகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மைதா சீடை ரெடி...!
+

முகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் முட்டை..!

* உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

* தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

* மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
+

தலைமுடிக்கு நல்ல கண்டிஷனர் தரும் துளசி

* கூந்தல் வறண்டுபோய் வேதனை அளிக்கிறதா? 50 கிராம் துளசி இலை, 10 கிராம் மிளகு இவற்றை கால் கிலோ நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வாரம் 2 முறை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் (அ) பயத்தமாவு போட்டு அலசுங்கள், கூந்தல் மிருதுவாகும்.

பொடுகும் வராது. புருவம், கண் இமைகளில் முடி இல்லாதவர்கள், இந்த எண்ணெயை அந்த இடங்களில் தடவினால், புசுபுசு வென முடி வளரும். பனிக்காலத்தில் ரொம்பவும் முடி கொட்டுமே.. என்ன செய்யலாம் என்கிறீர்களா?

தாமரை இலைச்சாறு, துளசிச் சாறு இரண்டையும் சம அளவு கலந்து, அடுப்பில் வைத்து, மிதமான தீயில் காய்ச்சி வடிகட்டுங்கள். இந்தச் சாறுடன் இரண்டு மடங்கு நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள்.

இப்படி தயாரான எண்ணெயை தினமும் லேசாக சூடு செய்து தலையில் தடவி வர, முடிகொட்டுவது முற்றிலும் நீங்குவதுடன் இளமைப் பிராயத்திலேயே ஏற்படும் வழுக்கையும் மறையும்.

* தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராகவும் இருக்கிறது துளசி. துளசி, செம்பருத்தி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அதனுடன் சுத்தம் செய்த புங்கங்காய் தோல் - 4 கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, இந்த விழுதைத் தேய்த்து அலசுங்கள், கூந்தலுக்கு அருமையான கண்டிஷனர் இந்த சிகிச்சை.

* கரடு முரடான சருமத்தை மிருதுவாக்குகிறது துளசி. பால் பவுடர், துளசி பவுடர் இரண்டும் தலா அரை டீஸ்பூன் எடுத்து இதனுடன் சந்தனப் பவுடர், கஸ்தூரி மஞ்சள் தலா கால் டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள்.

இந்தப் பவுடருடன் பாலை சேர்த்து (வெயில் காலத்தில் தயிரை சேர்க்கவும்) நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டை தினமும் முகம், கை, கால்களில் தேய்த்துக் குளிக்க. தோல் மிருதுவாகும். சருமத்துக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும் இந்த பேஸ்ட்.

* கண்ணுக்குக் கீழே கருவளையம் தோன்றி கருமை படர்கிறதா? கவலையை விடுங்கள். 5 துளசி இலையுடன், பத்து கிராம் வெள்ளரி விதை, சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்து அரைத்து, கண்களைச் சுற்றிலும் பூசிக் கழுவுங்கள், தோல் மிருதுவாகி கருமை காணாமல் போய்விடும்
+

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....! - இதோ உங்களுக்காக

* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!

* பித்தத்தைப் போக்கும்......!

* உடலுக்குத் தென்பூட்டும்......!

* இதயத்திற்கு நல்லது......!

* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......!

* கல்லீரலுக்கும் ஏற்றது......!

* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்......!

* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.....!

* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.....!

* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்......!

*இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்......!

* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது......!

* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....!

* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......!

* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது......!

* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......!

* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது......!

* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்......!

* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்......!

* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது......!

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......!

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......!

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை....

+

அடிக்கடி மலச்சிக்கலா..? அலட்சியப்படுத்த வேண்டாம் - எச்சரிக்கை

நாம் சாப்பிடும் உணவு உடலுக்குள் எங்கெங்கு பயணப்படுகிறது, என்னென்ன மாற்றங்களை உடலுக்குள் சந்திக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

- அது ஒரு நீண்ட பயணம்..! 

வாய் வழியாக சாப்பிடும் உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. அங்கிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. அங்கு ஜீரண செயல்பாடுகள் நடந்து, தேவையான சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது. தேவையற்றவை அனைத்தும் மலமாக பெருங்குடலை வந்தடைகிறது.

சுமார் ஒன்றரை மீட்டர் நீளத்தில், அகன்ற கேள்விக்குறிபோல் தோன்றும் பெருங்குடல், மலத்தில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி அதை இறுகவைத்து, மலக்குடலுக்குள் தள்ளும். அங்கிருக்கும் மெல்லிய தசை நாளங்கள் உடனே, மூளைக்கு ‘மலம் வந்திருக்கிறது‘ என்ற தகவலை உணர்த்தும்.

அப்போதுதான் மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு நமக்கு ஏற்படும். மலத்தை வெளியேற்றுவ தில் மலக்குடல், ஆசனவாய் போன்றவைகளின் பங்கு முக்கியமானது. இவை இரண்டும் 15 செ.மீ. நீளம் கொண்டவை.

நேரத்திற்கு சாப்பிட்டால், அளவோடு சாப்பிட்டால், பழம், காய்கறிகளைகொண்ட சமச்சீரான பாரம்பரிய சத்துணவுகளை சாப்பிட்டால், வாழ்வியல் முறைகளை நன்றாக அமைத்துக்கொண்டால் மேலே சொன்ன அந்த நீ..ண்..ட.. உணவுப் பயணம் சரியாக நிகழும்.

முறையாக, முழுமையாக ஜீரண மாகி மலமும் நன்றாக வெளியேறும். இவை சரியாக நடக்கும் வரை நமக்கு எந்த சிக்கலும் இல்லை. வயிற்றில் எந்த விதமான அசவுகரியமும் ஏற்படாமல் நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று வாழ்க்கை பயணம் இனிதே தொடர்ந்து கொண்டிருக்கும்.

மாறாக மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிட்டால், நமது ஆரோக்கியத்திலேயே சிக்கல் ஏற்பட்டுவிடும். உலகில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேரும், இந்தியாவில் சுமார் 45 சதவீதம் பேரும், சென்னையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேரும் இந்த மலச்சிக்கலோடு வாழ்ந்து, நொந்து கொண்டிருக்கிறார்கள். உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு இது அடிப்படை காரணமாக அமைகிறது.

பொதுவாக மலச்சிக்கல் என்று நாம் எப்போது குறிப்பிடுகிறோம்..? 

பெரும்பாலும் பலரும் ஒரு நாள் ஒரு தடவை, அதுவும் காலை நேரத்தில் காலைக்கடன் கழிக்கிறார்கள். சிலர் இரு நாட்களுக்கு ஒருமுறை கழிப்பதும் உண்டு.

நாளுக்கு ஒரு முறையோ, இருநாளுக்கு ஒரு முறையோ அது இயல்பாக நெருக்கடி இன்றி வெளியேறாமல் முக்க வைப்பதும், ரொம்ப இறுக்கமாகி வெளியேற அவஸ்தை படுத்துவதும் மலச்சிக்கலாகும். அடிக்கடி மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதும், ஒரே நேரத்தில் வெளியேறாமல் மீண்டும் தங்கியிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதும் மலச்சிக்கல்தான்.
+

சரும பளபளப்புக்கு சப்போட்டா... - பயனுள்ள தகவல்..!

நமது சருமத்தை மிருதுவாக்கி, அழகுக்கு சப்போர்ட் செய்வதில் முதன்மையானது சப்போட்டா. அதிக ஈரப்பதத்தைத் தன்னுள் கொண்ட சப்போட்டா பழத்தின் அழகு மற்றும் ஆரோக்கிய பலன்களைப் பார்க்கலாம்.

ஒல்லியாக இருப்பவர்களுக்கு, புறங்கை மற்றும் முழங்கையில் நரம்பு புடைத்து கொண்டு, முண்டு முண்டாகத் தெரியும். இதற்கு தீர்வு தருகிறது சப்போட்டா. தோல் மற்றும் கொட்டை நீக்கிய சப்போட்டா பழத்துடன் 4 டீஸ்பூன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த விழுதில் இரண்டு டீஸ்பூன் எடுத்து, அதில் ஒரு டிஸ்பூன் வெள்ளரி விதை பவுடர் கலந்து, குளிப்பதற்கு முன் கை, முழங்கை, விரல்களில் நன்றாகப் பூசுங்கள், சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம், கைகளை பொலிவாக்குவதுடன் பூசினாற்போலவும் காட்டும்.

ஒட்டிய கன்னங்கள், மொழுமொழுவென பிரகாசிக்க வேண்டுமா? சிறிது சப்போட்டா சதையுடன் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர், அரை டீஸ்பூன் சந்தனப் பவுடர் கலந்து கிரீம்போல குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகம் முதல் கழுத்து வரை பூசுங்கள்.

தடவிக் கொண்டிருக்கும் போதே இந்தப் பேஸ்ட் உலர்ந்து விடும். அதனால் லேசாக தண்ணீரைத் தொட்டு 5 முதல் 6 முறை தேய்த்து விடுங்கள். பிறகு சூடான நீரில் முகத்தைக் கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் பளபளவென மின்னுமே கன்னம்!

எனக்கு ஆப்பிள் கன்னம் தான். ஆனாலும் பளபளப்பு இல்லையே… என்று குறைப்பட்டுக் கொள்வோர், ஒரு டீஸ்பூன் கனிந்த சப்போட்டா பழ விழுதுடன் தலா ஒரு டீஸ்பூன் பால் மற்றும் கடலைமாவு கலந்த முகத்தில் பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்தால் ப்ளீச் செய்தது போல முகம் பளிக்சென்று இருக்கும்.

ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்களில் தடவி குளியுங்கள், தோலின் வறட்சி நீங்கி, மெழுகுபோல மிளிரும் பாதங்கள்!
+