01/08/2014

செரிமானப் பிரச்சனைக்கு அஞ்சறை பெட்டி மருந்து இருக்குங்க..!


ஜீரணம் ஆகாமல் அவதி படுவோர்கள் வீட்டிலேயே மருந்து தயாரித்து பருகலாம். வீட்டில் இருக்கும் சுண்டைக்காய், பெருங்காயம், பூண்டு, ஓமம், சீரகம் என அஞ்சறை பெட்டியில் உள்ள அனைத்து பொருட்களும் உடல் நலத்தை காப்பதற்கு மிகவும் உதவுகிறது.

 சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து, நீர் மோர் ஒரு டம்ளர் எடுத்து அதில் ஒரு சுண்டைக்காய் அளவு பெருங்காயத்தைப் பொடித்துப் போட்டு கலக்கி, 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகளை நீக்கும்.

ஓமம் 200 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 100 கிராம், கருஞ்சீரகம் 100 கிராம், பூண்டு 50 கிராம், கறிவேப்பிலை 100 கிராம், தோல் நீக்கிய சுக்கு 200 கிராம் இவற்றை லேசாக நல்லெண்ணையில் வறுத்துப் பொடி செய்து தினசரி பகல் உணவில் 2 ஸ்பூன் 1 பிடி சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர சொரிமானம் ஆகி வயிற்றுக் கோளாறுகள் இன்றி இருக்கலாம்.

விசேஷ நாட்களில் பலகாரம் சாப்பிட்டால் அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம், உடல் வலி, அசதி முதலியவைகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கும் சுக்கு தண்ணீர் மிகவும் நல்லது.

 2 பெரிய துண்டு சுக்கு, 2 ஏலக்காய் இவற்றை நசுக்கிக் கொண்டு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து, முக்கால் டம்ளராக வற்றியதும் கருப்பட்டி (பனை வெல்லம்) அல்லது சாதாரண வெல்லத்துடன் கலநது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  குடித்து வந்தால் அனைவருக்கும் நல்லது. உடம்பு சுறுசுறுப்பாக இருக்கும்.

மேலும் இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை மூன்றையும் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்தால், ஜீரணமாகும். சுக்குப் பொடியுடன் சுடுநீரைச் சேர்த்துக் குடிக்கக்வேண்டும். குடித்து முடித்த பின், சுமார் 15 நிமிடங்கள் இடது பக்கமாக சாய்ந்து படுத்துக் கொள்ளுங்கள்.

ஜீரணம் ஆவதில் சிக்கல் இருக்காது. ஒரு கைப்பிடி துவரம்பருப்பு ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், பெரிய துண்டு பெருங்காயம், 2 கைப்பிடி அரிசி, ருசிக்கு உப்பு, பத்து மிளகாய் வற்றல் இவற்றை சிறு தீயில் எண்ணை விடாமல் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

 3 கைப்பிடி பொட்டுக் கடலை சேர்த்துப் பொடி செய்து பாடடிலில் நிரப்பிக் கொள்ளவும். சூடான சாதத்தில் எண்ணை அல்லது நெய் சேர்த்து சாப்பிட அஜீரணம் போகும். பசி எடுக்காமல் அவதி படுவோர்க்கு பசி எடுக்கும். 
+

ஆயுர்வேதத்தின் படி உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்...!

ஆயுர்வேதம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. அதை யாராலும் மறுக்க முடியாது. ஆம் இந்தியாவின், பிறப்பிடம் தான் ஆயுர்வேதம். பல நோய்களை குணப்படுத்த ஆயுர்வேதம் பெரிதும் உதவுவதை நாம் அனைவரும் அறிவோம். இது மட்டுமல்லாமல் அதில் எண்ணிலடங்கா பயன்கள் உள்ளது.

ஆயுர்வேதம் என்றால் நீண்ட காலம் வாழ்வதற்கான அறிவியல் என்பது நிதர்சனமான உண்மை. ஆயுர்வேத சிகிச்சைகள் உங்களை இயற்கைக்கு மிக அருகில் கொண்டு செல்லும். மேலும் ஆரோக்கியமான எளிய வாழ்க்கையையும் ஏற்படுத்தி கொடுக்கும்.

உடல் பருமன் என்பது வாழ்க்கை முறை நோயாக ஆயுர்வேதத்தில் கருதப்படுகிறது. ஆயுர்வேதத்தில் எந்த ஒரு குறுக்கு வழியும் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள். நல்ல அழகான வாழ்க்கை முறையில் வாழ்ந்திட கீழ்கூறிய ஆயுர்வேத டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

வாழ்வதற்காகவே உண்ண வேண்டும் என்ற தொடர் மொழியை இங்கே வலியுறுத்த விரும்புகிறோம். எளிமையான உணவுகள், குறைந்த எண்ணெயில் சமைத்த நற்பதமான உணவுகள் போன்றவைகளை உண்ண மக்களை அறிவுறுத்த வேண்டும். எந்த ஒரு டையட்டிலும் உண்ணக்கூடிய உணவின் அளவை தான் முதலில் மாற்ற வேண்டி வரும். டையட்டை மேற்கொள்பவர்கள் மனரீதியான கட்டுப்பாடுடன் இருந்தால் ஆரோக்கியமற்ற உணவை கண்டிப்பாக அவர்களால் கைவிட முடியும். அதனால் கஞ்சி, வேகவைத்த காய்கறிகள், காய்கறி சூப்கள் மற்றும் கோதுமையால் செய்த உணவுகளை உண்ண வேண்டும்.

வறுத்த, எண்ணெய் சத்துள்ள உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கேரளாவின் பாரம்பரிய அவித்த வாழைப்பழத்தை உங்கள் நொறுக்கு தீனிகளில் சேர்த்துக் கொள்ளலாம். அப்பளங்களை பொறித்து எடுக்காமல் லேசாக வறுத்தாலே போதுமானது.

வரகு சாதம் அல்லது அவித்த காய்கறிகளுடனான அதிக நார்ச்சத்துள்ள பார்லியை உண்ணலாம். இவைகளை அதிகமாக உட்கொண்டாலும் கூட தெவிட்டாது. இவைகளை உங்களின் மதிய உணவில் அல்லது இரவு உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் ஓட்ஸ் மற்றும் உடைத்த கடலையை சேர்த்துக் கொள்ளுங்கள். சந்தையில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கண்டிப்பாக உண்ணாதீர்கள்.

டீயில் சேர்க்கப்படும் சர்க்கரையை தவிர வேறு இனிப்புகளுக்கு இடம் கிடையாது. ஆனாலும் சர்க்கரையை இழந்த உணர்வை நீங்கள் பெற மாட்டீர்கள். எனவே கேழ்வரகை உணவில் சேர்த்து வந்தால், அவை உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை நிலையாக வைத்து இனிப்பின் மேல் இருக்கும் ஆர்வத்தை கட்டுப்படுத்தும்.

சோயா, பலவித பருப்புகள், கொண்டைக்கடலை, கொள்ளு மற்றும் பச்சை பயிறு போன்ற உணவுகளில் இருந்து புரதச்சத்தை பெற்றிடுங்கள். அசைவ உணவு வகைகளுக்கு ஆயுர்வேதம் தடை போடுவதில்லை. ஆனால் ஹார்மோனால் உருவாக்கப்படும் மாமிச இனங்கள் என்றால் கண்டிப்பாக கூடாது. மீன் சேர்த்துக் கொள்ளலாம் - ஆனால் குழம்பில் வைத்த மீனே தவிர பொரித்த மீன் அல்ல.

அடர்த்தியான தயிருக்கு பதிலாக மோரை பருகுங்கள். டீ மற்றும் காபி கூட பருகலாம். தினமும் 1500 மி.லி. அளவிலாவது இளஞ்சூடான தண்ணீரை பருகினால், உங்களை நீர்ச்சத்துடன் வைக்க உதவுவதோடு மட்டுமல்லாது, பசி வருவதையும் தாமதப்படுத்தும். வெதுவெதுப்பான நீர் நீண்ட நேரம் வயிற்றில் இருப்பதால் பசி உண்டாவதை தாமதப்படுத்தும்.

நீங்கள் சாதம் சாப்பிடுபவராக இருந்தால், மதிய உணவின் போது கோதுமை தோசை அல்லது சப்பாத்திக்கு மாறுங்கள். அதனால் உண்ணும் அளவு குறையும். இதனை மாற்றி பின்பற்றினாலும் கூட அதுவும் உதவி புரியும்.

கலோரிகளை எண்ணுவது மட்டும் முக்கியம் அல்ல. உண்ணும் உணவிலும் வாழ்க்கையிலும் நெறிமுறையை கடைப்பிடிப்பது அவசியம். உண்ணுவதில் மாறிய உணவு பழக்கங்களும், அணுகுமுறையும், உடல் எடையை குறைக்கவும், பராமரிக்கவும் பெரிதும் உதவும்.

சூரிய உதயத்திற்கு முன் காலையில் வேகமாக எழுந்திருப்பது, பகலில் தூங்காமல் இருப்பது அல்லது இரவு நீண்ட நேரம் தொலைகாட்சி பார்க்காமல் இருப்பது போன்ற இதர வாழ்க்கை முறை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த கொள்கைகளை ஒரு மாத காலம் கடைப்பிடித்தால், உடல் நல எடை குறைப்பிற்கு அது ஒரு பாதை வகிக்கும். மேலும் எளிய உணவுகள் மற்றும் உடல ரீதியான சுறுசுறுப்பான வாழ்க்கை முறை போன்றவைகளே ஆரோக்கியமாக இருப்பதற்கான ரகசியங்கள்.

+

அல்சர் - அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்..! - உங்களுக்காக..



சிறு குழந்தைகளுக்கும் 'அசிடிட்டி’ ஏற்படுவது அதிர்ச்சியான விஷயம். அல்சர், அசிடிட்டி போன்ற வயிறு மற்றும் இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், என்ன சாப்பிடலாம் என்பதை விளக்குகிறார், சென்னை ஹெயின்ஸ் நியூட்ரிலைஃப் கிளினிக்கின் உணவு ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன்.

''பெப்டிக் அல்சர் என்று அழைக்கப்படும் வயிற்றுப் புண்ணுக்கும் 'அசிடிட்டி’ என்ற வயிற்றில் சுரக்கும் அமிலப் பிரச்னைக்கும் மூல காரணம், 'ஸ்ட்ரெஸ்’. அடுத்தது, முறையற்ற உணவுப் பழக்கம். சரியான நேரத்துக்கு  சாப்பிடாமல் இருப்பது, உணவைத் தள்ளிப்போடுவது, அதிகமான இடைவெளிவிட்டுச் சாப்பிடுவது போன்ற சீரற்ற உணவுப் பழக்கங்களால் அல்சர் வரலாம்.

இப்போது அல்சர், அசிடிட்டியை விட, அதிகமான அளவில் மக்களைப் பாதித்து வரும் பிரச்னை, 'நெஞ்சைக் கரித்தல்’ அல்லது 'எதுக்களித்தல்’தான். உணவைச் செரிப்பதற்காக வயிற்றில் சுரக்கும் அமிலம் மேலேறி வருவதுதான், 'நெஞ்சைக் கரித்தல்’ என்கிறோம். இதற்கு முக்கியமான காரணங்கள், ஏதேனும் ஒருவேளை உணவைச் சாப்பிடாமல் விடுவது மற்றும் டென்ஷன்தான்.

அல்சர் வந்துவிட்டால், உடனடியாக உணவுப் பழக்கத்தைச் சீராக்க வேண்டும். அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் இருப்பவர்கள், நேரத்துக்குச் சாப்பிடுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு, காரம் மற்றும் மசாலா இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்வதும்'' என்றார்.
தாரிணி கிருஷ்ணனின் வழிகாட்டுதலின்படி, அல்சருக்கான சில உணவுகளை இங்கே செய்து காட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்.

பூசணி  உலர் திராட்சை ராய்த்தா...
தேவையானவை: பூசணித் துருவல் - 2 கப், உலர் திராட்சை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, விருப்பப்பட்டால் தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், புளிக்காத தயிர் - ஒரு கப்.

செய்முறை: பூசணித் துருவலில் உள்ள தண்ணீரை, நன்றாகப் பிழிந்துவிடவும். தயிரில் தண்ணீர் இருந்தால், அதை வடிகட்டிவிட்டு, பூசணித் துருவல் மற்றும் கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் தயிரில் சேர்த்துக் கலக்கவும். குளிரவைத்துச் சாப்பிட்டால், சுவை கூடும்.  

 
மணத்தக்காளிக் கீரை மண்டி...
தேவையானவை: மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 6, கெட்டியான முதல் தேங்காய்ப் பால், இரண்டாம் பால், அரிசி கழுவிய தண்ணீர் (மண்டி)- தலா அரை கப், உப்பு - ருசிக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, வெந்தயம் - அரை டீஸ்பூன்.

செய்முறை: கீரையைச் சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும். குக்கரில், எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளாமல் போட்டு, தோல் உரித்து இரண்டாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும், இரண்டாம் பால், அரிசி மண்டியைச் சேர்த்து, உப்பு போட்டு, நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் கீரையைப் போட்டு, மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கி, முதல் பாலைச் சேர்க்கவும்.

குறிப்பு: இந்த மண்டியை, சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண்ணுக்கும் இது நல்லது.

 
வாழைத்தண்டு மோர்...
தேவையானவை: புளிக்காத மோர் - ஒரு டம்ளர், நறுக்கிய வாழைத்தண்டு - கால் கப், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - ருசிக்கேற்ப, பூண்டு - பாதி, சின்ன வெங்காயம் - 1.

செய்முறை: எல்லாப் பொருட்களையும் மோர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பயன்படுத்தவும்.

குறிப்பு: பூண்டு வாசம் பிடிக்காதவர்கள், தவிர்த்துவிடலாம்.

                       
                                             
                                                               ஒரு நாள் உணவுப் பட்டியல்:
காலையில் எழுந்ததும் பால் அல்லது 'லைட்’ காபி/டீ.
காலை: இட்லி / இடியாப்பம் / குறைந்த எண்ணெயில் செய்த தோசை அல்லது ஏதாவது பழங்கள். தொட்டுக்கொள்ள, காரம் அதிகம் இல்லாத தேங்காய் சட்னி, தேங்காய் பால். (வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.)

11 மணி: புளிக்காத மோர்.

மதிய உணவு: நிறையக் காய்களுடன் சேர்த்த அரிசி சாதம். கூடவே சப்பாத்தி, பருப்புக் கூட்டு, சப்ஜி, மோர். அசைவப் பிரியர்கள், பருப்புக்குப் பதில் சிக்கன் அல்லது மீன் கிரேவி.

மாலை 4 மணி: பால், அதிக டிகாக்ஷன் இல்லாத காபி/டீ. அரை மணி நேரம் கழித்து அந்தந்த சீஸனில் ஏதாவது பழங்கள்.

இரவு:  இரண்டு இட்லி, தோசை, சப்பாத்தி இவற்றில் ஏதேனும் ஒன்றை 2 அல்லது 3 அளவில் பருப்பு, மோருடன் சாப்பிடலாம். கொஞ்சம் சாதம், காய்கறிகள் சேர்க்கப்பட்ட சாலட், தயிர்ப் பச்சடி, நீர்த்த சூப், தேங்காய்ப் பால் சேர்த்த ஸ்ட்யூ வகைகள் சேர்க்கலாம்.

சேர்க்க வேண்டியவை: 

மோர் அதிகம் அருந்துவது மிகவும் நல்லது.

கீரை, பீன்ஸ், கேரட் மற்றும் அனைத்து நீர்க் காய்கள்.

காரத்துக்கு மிளகு, சீரகம் சேர்த்துச் சாப்பிடலாம்.

தயிர்ப் பச்சடியில் காய்கள் அதிகமாகவும் தயிர் குறைவாகவும் சேர்க்கவேண்டும்.

நெஞ்செரிச்சல் பிரச்னை உள்ளவர்கள், இரவு படுக்கைக்குச் செல்வதற்கு, 2 மணி நேரம் முன்பாகச் சாப்பிட்டுவிட வேண்டும்.

எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை, காலை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.  இரு வேளை உணவுகளுக்கு இடைப்பட்ட வேளையில் சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை: 

வறுத்த, பொரித்த உணவுகள், கடின உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

பருப்பு உசிலி, சென்னா மசாலா, வறுத்த மீன், கடலைமாவில் செய்த பஜ்ஜி, பக்கோடா, மிக்சர் மற்றும் அதிகச் செரிவான சாக்லேட்டுகள், 'ஸ்ட்ராங்’ காபி, கருப்புக் காபி தவிர்க்கலாம்.

ஃப்ரூட் சாலட் செய்யும்போது, க்ரீம் போன்ற செரிக்கக் கடினமான பொருட்களைச் சேர்க்க வேண்டாம்.

வெஜ் அண்ட் ஃப்ரூட் சாலட்....
தேவையானவை: வெள்ளரிக்காய், ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா - தலா 1, விதை இல்லாத திராட்சை - 100 கிராம், மாதுளை முத்துக்கள் - அரை கப், எலுமிச்சம் பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கொத்து.

செய்முறை: வெள்ளரிக்காயைக் கழுவி, தோல் சீவி (பிஞ்சு எனில் தோல் சீவத் தேவை இல்லை), மெல்லிய அரை வட்டத் துண்டுகளாக நறுக்கவும். கொய்யாப் பழத்தின்  விதைகள் நீக்கி, அதே வடிவில் நறுக்கவும். ஆப்பிளைத் தோல் சீவி நறுக்கவும். ஆரஞ்சுச் சுளைகளை விதை, நார் நீக்கி எடுத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்துக் கலந்து, நறுக்கிய காய், பழத் துண்டுகளைச் சேர்க்கவும். இதில் கொத்தமல்லி, புதினாவைப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.

பீர்க்கங்காய் இளங்கூட்டு
தேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், பீர்க்கங்காய் - 150 கிராம், சின்ன வெங்காயம் - 5, தக்காளி - 1, மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. தாளிக்க: எண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: பீர்க்கங்காயைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை முக்கால் பதமாக வேகவிட்டு, வெந்ததும், பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளி சேர்த்து, அதிலேயே மிளகாய்த் தூள், உப்பு போட்டு வேகவைக்கவும். காய் வெந்ததும் இறக்கவும். கடுகு தாளித்துச் சேர்த்து, தேங்காய்த் துருவல் போட்டுக் கலக்கவும்.  

குறிப்பு: மிளகாய்த் தூளுக்குப் பதிலாக, இரண்டு காய்ந்த மிளகாயைப் போட்டுத் தாளிக்கலாம். சிறிது கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தால், நன்றாக இருக்கும். சப்பாத்திக்கு நல்ல சைடு டிஷ்.
+

புதினா ஒரு மருத்துவ மூலிகை... - அறியத்தகவல்கள்...!

புதினா Mentha spicata ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்.

புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.

புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.

ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது.

புதினாக் கீரையை வீட்டுத் தோட்டத்திலும், தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம். புதினாக் கீரை வாங்கும்போது இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை மண்ணில் ஊன்றி வைத்தால் அவை தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது. புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். புதினாக்கீரையைக் கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம். இந்தப் பற்பொடியை உபயோகித்து வந்தால் பல்லீரல் வேக்காடு, பல்லீரலில் இரத்தம் வருதல், பல் சொத்தை, பல் அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க இந்தப் பற்பொடி நன்கு பயன்படும்.

இந்தப் பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார். எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவிற்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.

சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும். தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.
+

ஆப்பிள் பழங்கள் - எவ்வளவு பலன் உண்டு தெரியுமா..?

நம் ஊரில் விளையக்கூடிய பழம் இல்லை என்றாலும் நம் வாழ்வில் இடம்பெறும் பழங்களுள் ஒன்றாகவே மாறிவிட்டது ஆப்பிள். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டுவந்தால், டாக்டரிடம் செல்லவேண்டிய அவசியமே இருக்காது என்பார்கள்.

சுவை தரும் ஆப்பிள் பழத்தில் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. இது மனிதனின் இயல்பான வளர்ச்சி, ஆரோக்கியமான வாழ்வுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். 100 கிராம் பழத்தில் 50 கலோரியே உள்ளது. நுரையீரல் உள்ளிட்ட சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கும். பித்தப்பை கல்லைக் கரைத்து வெளியேற்றும். ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்பைக் குறைத்து ஆரோக்கியம் தரும்.

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, மிகச் சிறந்த உணவாக ஆப்பிள் கருதப்படுகிறது. சர்க்கரை நோய், மெட்டபாலிக் சிண்ட்ரோம், இதய நோய்கள், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை வராமல் தடுக்கவும் ஆப்பிள் உதவுகிறது.

ஆப்பிள் கொட்டையில் சிறிதளவு நச்சுத் தன்மை இருப்பதால், கொட்டையை அகற்றிவிட்டு சாப்பிடவேண்டும். இதனால் சிலருக்கு ஏற்படும் ஒவ்வாமையைத் தடுக்கலாம்.

குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என அனைவருக்கும் ஏற்றது.
+

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி.. - இதோ உங்களுக்காக...!

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.

நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில்

ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.

நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி அதில் 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.

காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.

இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள்.

தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.

உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும்.

செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.
+

கீரைகளும் அதில் உள்ள சத்துக்களையும் பற்றி உங்களுக்கு தெரியுமா...?


வெந்தயக் கீரை : கால்ஷியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93மி.கி. உள்ளன. பார்வைக் கோளாறு ரத்த சோகையைப் போக்கும். (கீரைகளை நன்கு கழுவவும்)
புளிச்ச கீரை : இரும்புச் சத்து 2.28 மி.கி. வைட்டமின் ஏ 2898 மைக்ரோ கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ்வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். (கீரைகள் சமைத்த நீரை கீழே ஊற்றாமல் சாம்பார், சூப் அல்லது மாவு பிசையப் பயன்படுத்தவும்)
முட்டைகோஸ் : வைட்டமின் சி 124 மி.கி. வைட்டமின் ஏ, ·போலிக் அமிலம், வைட்டமின் பி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை சிறிதளவு உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்துக்கு உதவும்.
முருங்கைக் கீரை : வைட்டமின் ஏ 6780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்ஷியம் 440மி.கி. பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி ஆகியவை உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மற்றும் மாலைக்கண் நோய் ஏற்படும். எனவே முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
கறிவேப்பிலை : வைட்டமின்ஏ 75000 மைக்ரோகிராம் கால்ஷியம் 830 மி.கி. ·போலிக் அமிலம் 93.9 மைக்ரோ கிராம் மற்றும் வைட்டமின் பி. சி. சிறிதளவு உள்ளன. முருங்கைக் கீரையைப் போன்று கறிவேப்பிலையிலும் வைட்டமின் ஏ அதிகம். பார்வைக் கோளாறுகளைக் தடுக்கும்.
புதினா கீரை : போலிக் அமிலம் 114 மைக்ரோ கிராம், கால்ஷியம் 200மி.கி. இரும்புச் சத்து 15.6 மி.கி. வைட்டமின்கள் ஏ.பி.சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்க வல்லது.
கொத்தமல்லி : கால்ஷியம் 184 மி.கி. இரும்பு 1042 மி.கி, வைட்டமின் ஏ 8918 மைக்ரோகிராம் உள்ளன. பாஸ்பரஸ், வைட்டமின் பி.சி, உள்ளன. பார்வைக்கோளாறு, ரத்த சோகை ஆகியவற்றைப் போக்க வல்லது.
மணத்தக்காளி : இரும்புச் சத்து 20.5 மி.கி., கால்ஷியம் 410 மி.கி., வைட்டமின் பி.சி உள்ளன. வாய்ப்புண் ஏற்படுவதைக் தடுக்கும்.
+