23/08/2014

'ஹாஃப் பாயில்' முட்டை ஆரோக்கியமானதா..?

நினைவு தெரிந்த நாள் முதல் காலை உணவில் முட்டையை சேர்த்து கொள்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள அதிமுக்கிய புரதம், ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம். சுவாரஸ்யமாக இந்த பழக்கத்தை முன்னதாக கொண்டு வந்தது ரோமானியர்கள் ஆகும். ஊட்டச்சத்து நிறைந்த மற்ற உணவுகளை விட முட்டைகளையே அவர்கள் விரும்பினார்கள். ஆனாலும் கூட, முட்டைகளை தினமும் உட்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்ற பயத்தில் இந்த வளமையான சக்தி வாய்ந்த உணவை உண்ண பலரும் பயம் கொள்கிறார்கள். இருப்பினும் இதனை தினமும் உட்கொண்டு வந்தால் கொழுப்புகள் குறையும் என்பதே உண்மையாகும்.

முட்டையின் மஞ்சள் கருவில் லசித்தின் என்ற வெண்கருக்கொழுப்பு உள்ளது நிரூபிக்கப்பட்ட தகவலாகும். இது கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால், திசு தடிமனாதலுக்கு எதிராக சிறப்பாக செயல்படும். ஒரு முட்டையில் 186 மில்லிகிராம் அளவிலான கொலஸ்ட்ரால் இருக்கக்கூடும். ஆனாலும் கூட அதனை தினசரி அடிப்படையில் உண்ணுவதை எண்ணி வருத்தப்பட தேவையில்லை. உங்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முட்டை அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் என்ற பயமின்றி தினமும் ஒரு முட்டையை கண்டிப்பாக உண்ணலாம்.

நம் மன வளர்ச்சிக்கு தேவையான கொலஸ்ட்ராலை முட்டையின் மஞ்சள் கரு வழங்கிய போதிலும், மூளை வளர்ச்சிக்கு அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பமிலங்கள் அடங்கிய சல்பர் அவசியம். மறுபுறம், முட்டையின் மஞ்சள் கருவில் பையோஃபிளேவோனாயிடுகள் மற்றும் பாஸ்ஃபேட்டிதில் கோலின் மற்றும் சல்பர் போன்ற மூளை கொழுப்புகள் அடங்கியுள்ளது.

பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு (ஹாஃப் பாயில்) முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும். அதற்கு காரணம் அரை வேக்காடு முட்டையிலிருந்து நம் உடலுக்கு தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் நீங்குவதில்லை. முட்டையை உங்கள் உணவில் இருந்து முழுவதுமாக நீக்குவதற்கு பதில் அதனை புத்திசாலித்தனமாக உட்கொண்டால் ஆரோக்கியத்தை அளிக்கும்.

முட்டை என்பது வளமையான அளவிலான புரதத்தை கொண்டுள்ளது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே போல் அதிகமாக சமைப்பதால் ஊட்டச்சத்து அதற்கேற்ப நீங்கிவிடும். அதனால் முட்டையை அரை வேக்காட்டில் உண்ணுவது சிறந்த வழியாகும். சரி, அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா? வாங்க பார்க்கலாம்!

அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா? முட்டையின் மஞ்சள் கரு அரை வேக்காட்டுடன் இருப்பதால் அரை வேக்காடு முட்டை நல்ல ஆரோக்கியத்தை தரும். முட்டையின் மஞ்சள் கருவை அப்படியே பச்சையாக உட்கொண்டால் அதிக பயனை அளிப்பதால் சிலர் அதை விரும்புவார்கள். ஆனாலும் கூட உணவு நச்சு அல்லது சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவால் உடல் நலம் பாதிப்படையாமல் இருக்க முட்டையை அரை வேக்காட்டுடன் சமைத்துக் கொள்வது நல்லது. மேலும் அதனை போதுமான அளவில் சமைத்து உட்கொண்டால், அவை போதிய ஊட்டச்சத்துக்களை உங்களுக்கு வழங்கிவிடும். அதற்கு அதனை சிறிது நேரத்திக்கு வேக வைத்தாலே போதும், அடம் பிடிக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து விடும். முழுவதுமாக வேக வைத்த முட்டையை போல் அல்லாமல் அரை வேக்காடு முட்டையில் நீல-பச்சை சல்பர் பிரிக்கப்படமாட்டாது.

குறைந்த அளவிலான கலோரிகள் கொண்ட நொறுக்குத் தீனி வேண்டுமா? அப்படியானால் அரை வேக்காடு முட்டையே சிறந்தது. அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை உங்கள் கலோரிகளை அதிகரிப்பதில்லை. பொறித்த முட்டை போன்ற இதர முட்டை வகைகளுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டையில் கலோரிகளின் அளவு குறைவே. அரை வேக்காடு முட்டையில் 78 கலோரிகளும், 5.3 கிராம் கொழுப்புகளும் மட்டுமே அடங்கியுள்ளது. இதில் 1.6 கிராம் சாச்சுரேட் ஆகிவிடும். நீங்கள் தினசரி உண்ணும் இதர உணவுகளுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டையில் கலோரிகள் குறைவே. எண்ணெய் அல்லது வெண்ணெயில் சமைத்த முட்டையுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக விளங்குகிறது. பொறித்த முட்டையில் பொதுவாக, 90 கலோரிகளும், 6.83 கிராம் கொழுப்பும் (இதில் 2 கிராம் சாச்சுரேட் ஆகிவிடும்) அடங்கியுள்ளது.

அனைத்து வித அதிமுக்கிய அமினோ அமிலங்கள் அடங்கிய வெகு சில உணவுகளில் முட்டையும் ஒன்றாகும். அதனால் அரை வேக்காடு முட்டை உங்களை ஆரோக்கியத்துடன் வைத்திடும். முட்டையில் கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அடங்கியுள்ளது. அரை வேக்காடு முட்டை இந்த அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை அழிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

பெண்களுக்கு தினமும் 700 மைக்ரோ கிராம் அளவிலான வைட்டமின் தேவைப்படுகிறது. இதுவே ஆண்களுக்கு என்றால் 900 மைக்ரோ கிராம் ஆகும். ஒரு அரை வேக்காடு முட்டை உண்ணுவதால் கிட்டத்தட்ட 74 மைக்ரோ கிராம் கிடைத்துவிடுகிறது. இதனால் உங்கள் இலக்கையும் சுலபமாக அடைந்து விடுகிறீர்கள். இந்த ஊட்டச்சத்தினால் உங்கள் கண்கள் திறம்பட செயல்படும். இனி காலை உணவிற்கு பொறித்த முட்டை என்ற சம்பிரதாயத்தை மாற்றி, ஆரோக்கியமான வாழ்விற்கு அரை வேக்காடு முட்டையை உண்ணுங்கள். அரை வேக்காடு முட்டை ஆரோக்கியத்தை தருகிறதா? ஆம், அதில் அதிமுக்கிய வைட்டமின் ஏ ஊட்டச்சத்து உள்ளதால் சருமம், பற்கள் மற்றும் எலும்புகளை பராமரிக்கும்.

ஒரு பெரிய அரை வேக்காடு முட்டை கிட்டத்தட்ட 0.56 மைக்ரோ கிராம் வழங்குகிறது. அதில் 2.4 மைக்ரோகிராம் அளவிலான வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின்கள் ஆரோக்கியமான மெட்டபாலிசத்திற்கு தேவையானதாகும். உங்கள் உடலில் உள்ள கலோரிகளை ஆற்றல் திறனாக மாற்ற இந்த ஊட்டச்சத்துக்கள் உதவுவதால், அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதாக விளங்குகிறது. நம் நரம்பியல் அமைப்பு சரியாக செயல்படவும் வைட்டமின் பி12 உதவுகிறது.

அரை வேக்காடு முட்டையில் வெள்ளை கரு நன்றாக வெந்திருக்கும். ஆனால் மஞ்சள் கருவோ அரை வேக்காட்டுடன் வழிந்து ஓடுகிற நிலையில் இருக்கும். வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்களுக்கு அரை வேக்காடு முட்டை பரிந்துரைக்கப்படுவதில்லை. அதனால் வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனை தவிர்க்க வேண்டும். வலுவான உடல்நலத்தை கொண்டுள்ளவர்களுக்கு தான் அரை வேக்காடு முட்டை ஆரோக்கியத்தை அளிக்கும். பொறித்த முட்டையுடன் ஒப்பிடுகையில் கண்டிப்பாக அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதே.

+

நீரிழிவினால் ஆறாத புண்களை ஆற்றும் சிகிச்சை முறைகள்..!

ஒவ்வொரு 20 நொடிகளுக்கு ஒருவர் தன் காலில் ஒன்றை நீரிழிவின் பாதிப்பினால் இழக்கிறார் என்பது புள்ளி விவரங்கள் தெரிவிக்கிற கசப்பான உண்மை.

இந்தியாவில் மட்டும் 2030 -ம் ஆண்டிற்குள் 10 கோடி பேர் நீரிழிவினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் அதில் 15% பேர்களுக்கு கால்களில் பிரச்சினை ஏற்படலாம் என்பதும் அதிலும் ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் பேர் கால்களை இழக்கலாம் என்பதும் எதிர்பார்க்கப்படும் விளைவுகளாகும் நம் பாதங்கள் 29 மூட்டுக்களும், 26 எலும்புகளும் 42 தசைகளும் கொண்டு இயங்கும் கடவுளின் சிறப்பான பொறியியல் படைப்பாகும்.

நீரிழிவினால் பாதங்களுக்கு ஏற்படும் முதல் பாதிப்பு நியூரோபதி என்ற நரம்புகளின் செயற்பாட்டுக் குறை. இதனால் பாதத்தில் உணர்வு குறைந்து பாதத்திற்கு ஏற்படும் காயமோ, வலியோ நோயாளிகளுக்கு தெரியாமல் போகிறது. கிருமி தொற்றினால் புண் பெரிதாகி, புரையோடி பாதத்தின் தசைகளில் செல்கள் இறந்து விடுகின்றன.

இந்நிலையில் நன்றாக இருக்கும் பகுதிகளை காப்பாற்ற பாதிக்கப்பட்ட பகுதியை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் விரல் அளவிலோ, முழு பாதம் அளவிலோ அல்லது கெண்டைக்கால் வரையிலோ கூட அறுவை சிகிச்சையில் அகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால் இவ்விளைவுகளை முறையான பாதுகாப்பு மருத்துவ முறைகள் மூலம் தடுக்கலாம்.

கால்களில் உணர்வு குறைதல்:-கால்களில் உள்ள நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்களில் செயற் குறைபாடு ஏற்படும்போது கால்களில் உணர்வு குறைகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு தான் பெரும்பாலும் ஏற்படுகிறது.

சரியான செருப்பு அணியாமல் இருந்தாலோ அல்லது வேறு சில காரணங்களாலோ காயம் ஏற்படும்போது உணர்வு இல்லாமையால் அவர்களுக்கு உடனடியாக அது தெரிவதில்லை. தெரிந்த பின்பும் ரத்த சர்க்கரை அளவு, கிருமி தொற்று போன்றவற்றினாலும் புண் ஆறாமல் இருந்து விடுகிறது.

ஹைகேர் மையத்தின் சிறப்பு என்னவென்றால் ஆறாத புண்களை நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் குணப்படுத்துவதும், உணர்வற்ற கால்களுக்கு மீண்டும் உணர்வை கொண்டு வருவதும் என்பது குறிப்பிடத்தக்கது. கால்களில் உணர்வு குறைந்து விட்டால் அதை சரி செய்ய முடியாது என்ற நிலையை முழுவதுமாய் மாற்றியமைக்கும் சிறப்பான சிகிச்சை இங்கு அளிக்கப்படுகிறது.

கால்களில் இரத்த ஓட்டத்தை துல்லியமாக அளப்பதற்கு ‘‘வேஸ்குலார் டாப்லர் ரெக்கார்டர்’ என்ற கருவியும், நரம்புகளின் செயல்பாட்டை அறிந்து கொள்ள ‘பைப்ரோதர்ம்’ என்ற கருவியும் உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் ஆறாத புண் உள்ள செல்களில் ஆக்சிஜன் அளவு குறைந்திருந்தாலும் புண் ஆறாமல் இருக்கும் என்பதால் புண் உள்ள இடத்தில் தோலின் ஆக்சிஜன் அளவை அளக்க கருவி உபயோகப்படுத்தப்படுகிறது.

இப்பரிசோதனைகளுக்குப்பின் அதற்கேற்ற முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. கால்களில் வலி போன்றவற்றை குணப்படுத்த அனோடைன் தெரபியும், கால் புண் உள்ள தோல்களுக்கு ஆக்சிஜன் அளவை கூட்ட ‘ஹைப்பர் பேரிக் ஆக்சிஜன் தெரபி (ஹெச்.பி.ஓ.டி.) என்ற சிகிச்சை முறையும் அளிக்கப்படுகிறது.

ஹெச்பிஓடி என்ற இம்முறையில் நோயாளி பிரத்யேகமான ஒரு சேம்பரில் வசதியாய் படுத்துக்கொண்டு சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்கிறார். இதனால் உடலின் எல்லா செல்களுக்கும் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மூலம் மட்டுமின்றி ரத்தத்தின் பெரும்பகுதியான பிளாஸ்மா மூலமும் செறிவான அளவில் ஆக்சிஜன் செல்களை சென்றடைகிறது.

இதனால் செல்களின் செயல்பாட்டுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதுடன், புண்களில் வளர்ந்து தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கவும் உதவுகிறது. நியூரோபதி உள்ள நோயாளிகள் நடைப்பயிற்சி செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். எப்பொழுது நடக்கலாம், எவ்வளவு நடக்கலாம், எப்பொழுது நடக்கக்கூடாது என்பதை இங்குள்ள மருத்துவர்கள் முறையாக பரிந்துரைக்கிறார்கள்.

நடைப்பயிற்சி நல்லது என்றாலும் சில நேரங்களில் நடப்பதே கால்களுக்கு மட்டுமின்றி உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

* ஆறாத புண்கள் குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படுவதை சரி செய்வது

* திசுக்கள் காயங்களினால் கூழாகி விடும் நிலையை சரி செய்வது

* கிருமி தொற்றுகளினால் பாதிக்கப்பட்ட விட்ட திசுக்கள் மற்றும் தசைகள் ஆறுவதற்கு உதவுவது.

* காயங்களில் தொற்று உண்டாக்கும் சிலவகை பாக்டீரியா வெளிப்படுத்தும் நச்சு பொருட்கள், திசுக்கள் மற்றும் சிறுநீரகத்தை பாதிப்பதை தடுப்பது

* உணர்வற்ற பாதங்கள் மற்றும் கால்களுக்கு உணர்வு நிலையை திரும்ப கிடைக்க செய்வது நியூரோபதி நரம்பு சிகிச்சை

- பாதங்களில் ஏற்படும் எலும்புகளின் சேதங்களை சரி செய்வது என சிறப்பான சேவைகளை மருத்துவர்கள் செய்து வருகின்றனர்.
+

பேபி கார்ன் பெப்பர் ஃபிரை - ஆரோக்கிய சமையல்

தேவையான பொருட்கள்: 

  • பேபி கார்ன் – 10  பெரிய 
  • வெங்காயம் – ஒன்று, 
  • பூண்டு – 8 பல், 
  • பச்சை மிளகாய் – ஒன்று, 
  • வெங்காயத்தாள் – 4, 
  • ஆலிவ் ஆயில் – சிறிதளவு, 
  • மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை, 
  • உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: 

• பேபி கார்னை வட்ட வடிவமாக வெட்டி வைக்கவும்.

• வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும்.

• வாணலியில் சிறிதளவு ஆலிவ் ஆயில் விட்டு, நறுக்கிய பூண்டு, வெங்காயம், நறுக்கிய பேபி கார்ன், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.

• வெந்தவுடன் வெங்காயத்தாள், மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

• இது மிகவும் சுவையாக இருக்கும்.
+

வாயில் தோன்றும் பொதுவான பிரச்சினைகள் - தெரிந்துகொள்வோம்..!

* உதடுகளில் தோன்றும் நீர் நிறைந்த சிறு கட்டிகள் இவை ஒரே தட்டில் உணவை பகிர்ந்து உண்பது, ஒரு ஸ்பூனில் இருவர் சாப்பிடுவது, முத்தம், பாதிப்பு உடையவரின் மிக அருகாமையில் இருப்பது போன்வற்றின் காரணமாக அடுத்தவருக்கும் பரவும். எளிதில் சில நாட்களில் மறைந்து விடும். `கிரீம் மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை உபயோகித்தும் நிவாரணம் பெறலாம். இது அடிக்கடி தோன்றுமாயின் மருத்துவ ஆலோசனை தேவை.

* `கன்டிடாயீஸ்ட்' மூலமாக நாக்கில் ஏற்படும் `த்ரஷ்' எனப்படும் இந்த பாதிப்பு குழந்தைகள், முதியோர், சர்க்கரை நோயாளிகள், சில வகை மருந்துகளால் ஏற்படுவது நாக்கில் பட்டை பட்டையாக வெள்ளையாகத் தெரியும். இதற்கு மருத்துவ சிகிச்சை தேவை.

* நாக்கில் கறுப்பாக சிறு சிறு முடிகள் போன்று இருக்கும். வலி இருக்காது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. புகை பிடித்தல், வாய் வழி மூச்சு விடுதல், மருந்து, வாய் சுத்தமின்மை, வாயில் தேவையான அளவு எச்சில் இன்மை போன்றவையும் காரணமாகும். நாக்கினை சுத்தம் செய்வதே இதன் தீர்வு சில நேரங்களில் மருத்துவ உதவி தேவைப்படும்.

* லியுகோப்ளேகியா எனப்படும் இந்த பாதிப்பு குத்தும் பல், பொய் பல் சரியின்மை, அதிக புகை பிடித்தல், அதிக வெய்யில் இவற்றில் வாயினுள் சற்று வெள்ளையான திட்டுக்கள் தெரியும். வலி இருக்காது. காரணத்தினை சரி செய்யும் போது வெள்ளை திட்டு மறையும். ஆனால் புற்று நோய், ப்ளேக் பாதிப்பு இருக்கின்றதா? என்பதனை அறிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

* சிகப்பும், வெள்ளையுமாக கன்னம் மற்றும் நாக்கில் ஏற்படும் வீக்கங்களின் பெயர் `லைகன் ப்ளனஸ்' இதுவும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவது. இதில் வாய் புற்று நோய் பற்றிய கவனம் தேவை.

* நாக்கில் தேச வரை படம் போல் காணப்படும் பாதிப்பின் பெயர் `ஜியாக்ரபிக் டங்க்'. சற்று மேடும் பள்ளமுமாக நாக்கு காணப்படும். அவ்வப்போது இதன் தோற்றம் மாறும். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஒரு வேளை வலி இருந்தால் சாதாரண வலி மாத்திரைகளே போதும்.

* வாய் புற்று நோய்: பல வாரங்களாக போகாத புண் முகம், நாக்கு, வாய், கழுத்து இதில் ஏதேனும் சற்று மரத்தது போல் இருத்தல், உணவு மெல்லுவதில், விழுங்குவதில் கடினம் போன்றவை புற்று நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். அதிக புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை போன்ற சில வஸ்துக்களை பயன்படுத்தல் போன்றவை வாய் புற்று நோய்க்கான அடிப்படை காரணங்கள். உடனடி சிகிச்சை அவசியம்.

* கீழ் தாடை மூட்டில் வலி, காது, முகம், கழுத்தில் வலி எனக் காணப்படுவது பெரிதாய் வாய் திறந்து கொட்டாவி விடும்போது அடிக்கடி பல்லு கடிப்பது போன்றவற்றால் ஏற்படும் தாடை மூட்டு வலி. இதற்கு கொஞ்சம் ஓய்வு, மருந்து போதும். என்றாலும் ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படுகின்றது.

* உடைந்த பல், பல் அடைப்பில் வைக்கும் ஓட்டுப் பொருளாலும் வாயில் பாதிப்பு ஏற்படலாம்.

* ஈறுகளின் பாதிப்பு பல்லை விழ வைத்து விடும். முறையான பல், ஈறு பராமரிப்பே இதனைத் தவிர்க்கும் வழி இத்துடன் ஈறுகளில் பல வகையான பாதிப்புகள் சுகாதார மின்மையின் காரணமாக ஏற்படலாம். பல் மருத்துவரை அணுகவும்.

* பல் வலிக்கு சிலர் வாயில் வலி மாத்திரையினை அடக்கிக் கொள்வர். இது சுற்றுப்புற பகுதிகளை எரித்து விடும்.

* பல்லில் ஓட்டை, சொத்தை, நிறம் மாறுதல், ஈறு பகுதிகளில் கட்டி போன்ற பாதிப்புகள் சுகாதாரமின்மை பாதிப்பினாலேயே ஏற்படுகின்றன. மருத்துவ உதவி அவசியம்.

* வாய் நாற்றம் : இதன் காரணம் வாயில் கிருமிகள், வாயால் மூச்சு விடுதல், வறண்ட வாய், ஈறுகளின் பாதிப்பு, சர்க்கரை நோய் போன்ற காரணங்களினால் ஏற்படுகின்றது. மருத்துவ சிகிச்சையும், வாய் சுகாதாரமும் இதற்கு அவசியம்.
+

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்..!

ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான். இப்படி சிரிக்கும் போது, பற்களானது மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை பார்ப்போரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங்களை உருவாக்கும். அதுமட்டுமின்றி, பற்கள் மஞ்சளாக மிகுந்த கறையுடன் இருந்தால், ஆசையாக முத்தம் கொடுக்க வரும் துணை கூட கொடுப்பதற்கு தயங்குவார்கள். சரி, இப்படி பற்கள் மஞ்சளாக இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பரம்பரை காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிக அளவில் டீ மற்றும் காபி குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவைகளே காரணங்களாகும். இதனால் பலர் தங்கள் பற்களை வெண்மையாக வெளிக்காட்ட, பல் மருத்துவமனைக்கு சென்று பணம் செலவழித்து ப்ளீச்சிங் செய்து வெள்ளையாக்குவார்கள். இப்படி செய்வதால், பற்கள் வெண்மையடையும் ஆனால் அதன் ஆரோக்கியம் குறைந்துவிடும்.

எனவே உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை ஆரோக்கியமான வழிகளில் நீக்க சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதன்படி செய்து பற்களை வெண்மையுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

பற்களை வெண்மையாக்குவதில் பேக்கிங் சோடா பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1/2 கப் குளிர்ந்த நீரில் கலந்து, தினமும் மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.


எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து பற்களை தேய்க்கலாம் அல்லது எலுமிச்சையின் தோலைக் கொண்டு பற்களை தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்கலாம். இதன் மூலமும் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளும் நீங்கிவிடும். ஏனெனில் அதில் இயற்கையாக உள்ள அசிட்டிக் தன்மையானது, பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கிவிடும்.

அனைத்தையும் விட மிகவும் விலை மலிவில் கிடைக்கும் ஒரு பொருள் தான் உப்பு. இந்த உப்பைக் கொண்டு பற்களை தினமும் தேய்த்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் அகன்றுவிடும். அதே சமயம் உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அளவுக்கு அதிகமாக உப்பை பயன்படுத்தினால், அவை ஈறுகளையும், எனாமலையும் பாதித்துவிடும்.


தினமும் பற்களை துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் சிறிது சாம்பல் சேர்த்து, பின் பற்களை துலக்கினால், பற்களை வெண்மையாகும். அதிலும் இதனை தினமும் இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் பற்களில் உள்ள கறைகள் அகலும்.

இரவில் படுக்கும் போது, ஆரஞ்சு தோலைக் கொண்டு பற்களை நன்கு தேய்த்துவிட்டு, வாயை அலசாமல் இரவு முழுவதும் ஊற வையுங்கள். இதனை அதில் உள்ள வைட்டமின் சி சத்தானது, வாயில் உள்ள கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளை அழித்து, பற்களை வலுவாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்.
+

மாரடைப்பைத் தடுக்கும் நார்ச்சத்து உணவுகள்..!

இன்று மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. இதற்கு, வாழ்க்கை முறை மாற்றம், உணவுமுறை மாற்றம் போன்ற பல விஷயங்களை மருத்துவர்கள் காரணமாகக் கூறுகின்றனர். அதிலும் மாரடைப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள், அதுகுறித்த அச்சத்துடனே காலத்தைத் தள்ள வேண்டியுள்ளது.

இந்நிலையில், மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரப் பிரிவு ஆய்வு நடத்தியது.

அதில், மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9 வருடங்களுக்கு பிறகும் ஆரோக்கியமாக உயிர் வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உணவுப்பழக்கம், பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட நபர்களின் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய, உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. நார்ச்சத்து, பெரும்பாலும் பழங்களிலும் காய்கறிகளிலும், முழுத் தானியங்களிலும் காணப்படுகிறது என்பதும்,

அது குடலுக்கு மிகவும் நல்லது என்பதும் ஏற்கனவே எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். எனினும் பல நாடுகளில் உள்ள மக்கள் அதனை போதுமான அளவு உட்கொள்வதில்லை என்பதே உண்மை. 
+

நினைவாற்றலை அதிகரிக்கும் புடலங்காய்..!

புடலங்காய் இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. இது  சுவை மிகுந்த காயாகும்.  இதனை தென்னிந்தியாவில் உணவில் அதிகம் சேர்க்கின்றனர்.

புடலையின் உட்பகுதியில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். புடலங்காயில் நன்கு முற்றியதையே உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள புடலங்காயை பயன் படுத்த வேண்டும்

• ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டது. காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு

• தேகம் மெலிந்து இருபவர்கள் அடிக்கடி புடங்கையே உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும்.

• அஜீரண கோளாரை எளிதில் சீராக்கி நல்ல பசியை உண்டாக்கும்.

• குடல் புண்ணை ஆற்றும். தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்

• இதில் நார்சத்து அதிகம் இருப்பதால் மலசிக்கலை போக்கும் தன்மை உடையது.

• மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.

• நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து நியாபக சக்தியை அதிகரிகிறது.

• பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைப்படுதலை குணபடுத்தும். கருப்பைக் கோளாறையும் குணபடுத்தும். கண் பார்வையை அதிகரிக்க செய்யும்.

• இதில் அதிகம் நீர்ச்சத்து இருப்பதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

• வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.
+