08/08/2014

பெண்களின் முகம் அழகாக வைத்துக்கொள்ள இதைப்படிங்க...!


* முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

* ஒரேஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.

* இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.

* அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைப்போல் ஆனதும்

* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

மூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்?

* நன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்திற்கு பூசலாம் மேலும் பழங்களான ஃபேஸ் பாக் போடலாம்.வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம் முழுவதும் தேய்த்து காயவைத்து கழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய் போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம்.

முகப்பொலிவிற்கு

* உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

* தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

* மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

* ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். மற்றது எண்ணெய் வடியும் சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.

உதடு உலர்ந்து விட்டதா..?

* உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும் இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.

கண்ணில் கருவளையம் மறைய...!

* சில பெண்களுக்கு கண்களைச் சுற்றிகருப்பு வளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

காது அழகை பராமரிப்பது எப்படி..?

* உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும், 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும். முகத்திற்கு பூசும் பேஸ்- பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது.
+

மஞ்சளை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள் - இதோ உங்களுக்காக...!


இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு மசாலா பொருள் தான் மஞ்சள். இத்தகைய மஞ்சளானது உணவிற்கு நிறத்தை மட்டும் கொடுப்பதில்லை. மாறாக பல்வேறு நன்மைகளையும் வழங்குகிறது.

இத்தகைய மஞ்சளானது அக்காலத்தில் இருந்து இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வுகள் பலவற்றில், மஞ்சளில் உள்ள நோயெதிப்பு அழற்சி தன்மையினால், மஞ்சளானது காயங்களை சரிசெய்ய உதவுவதுடன், புற்றுநோய் முதல் அல்சைமர் வரை பல உடல்நல பிரச்சனைகளையும் குணப்படுத்த பெரிதும் உதவியாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.

ஆகவே அத்தகைய பொருளை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் என்று அனைவரும் நிச்சயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து இனிமேல் தவறாமல் மஞ்சளை உணவில் சேர்த்து வாருங்கள்.

கல்லீரலை சுத்தப்படுத்தும்:-மஞ்சளை உணவில் சேர்த்துக் கொண்டால், கல்லீரலில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, கல்லீரலானது சுத்தமாக இருக்கும்.

அல்சைமர் நோயைத் தடுக்கும்:-மஞ்சள் தூளில் உள்ள மற்றொரு நன்மை என்னவென்றால், அதனை உணவில் சேர்த்து வந்தால், மூளையில் அமிலாய்டு என்னும் பிளேக் உருவாவது தடுக்கப்பட்டு, இதனால் மறதி நோயான அல்சைமர் நோய் ஏற்படுவது தடுக்கப்படும்

புற்றுநோயை தடுக்கும்:-மஞ்சளை உணவில் சேர்க்கும் போது, அது உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, பல வகையான புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

நாள்பட்ட மூட்டு வலி:-மஞ்சளில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மையினால், நாள்பட்ட மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் தான் ஆயுர்வேத மருத்துவத்தில் மூட்டு வலியைக் குணப்படுத்த மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர்.

எடை கட்டுப்பாடு:-மஞ்சளானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மன இறுக்க நிவாரணி:-சீன மருத்துவத்தில் மஞ்சளை மன இறுக்கத்தை சரிசெய்யும் சிகிச்சைக்கு பயன்படுத்துகின்றனர். எனவே இந்த பொருளை உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், அது மன இறுக்கத்தில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும்.

கீல்வாதம்:-மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மையானது இருப்பதால், இது கீல்வாதம் ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே கீல்வாதம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், மஞ்சளை உணவில் சேர்த்து வாருங்கள்.

எலும்புப்புரை:-மஞ்சளை உணவில் சேர்க்கும் போது, பிற்காலத்தில் எலும்புப்புரை போன்ற முதுகு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.
+

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட உடம்பு இளைக்குமா..! - மேலும் பல....

உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.

அதனால்தான், அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள்.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு.

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
+

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை - அட உண்மையதாங்க...!


சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம்.
சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது.

இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.

ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது;

கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

மகளீரின் கருப்பை வலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது.

உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி.

பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாகத் தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, 'பைப்ரினோலிடிக்' செயற்பாடு குன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.

இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.

இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.

இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.

மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தித் தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.

தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும்.

எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.
+

பீட்ரூட்டை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் - ஏன் தெரியுமா..?


வேரிலிருந்து கிடைக்கும் காய்கறிகளுள் மிக முக்கியமான பீட்ரூட்டின் மகிமையைப் பற்றி நம் அம்மாக்களும், பாட்டிகளும் வாய் ஓயாமல் பேசுவதை நாம் கேட்டிருப்போம். வேரிலிருந்து கிடைக்கும் இந்த கருஞ்சிவப்பு வண்ண காயானது, பெரும்பாலான இந்திய வீடுகளில் இரத்தசோகைக்கு உகந்த, பிரசித்தி பெற்ற மாற்று மருந்தாகத் திகழ்கிறது.

ரோமானியர்கள் தங்கள் இல்லற நலத்தை பேண இதனை நம்பி இருப்பது தொடங்கி, இந்தியர்கள் இதனை இரத்த சோகை மற்றும் உடல் அயர்ச்சி போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு உபயோகிப்பது வரையிலான பல்வேறு நலன்களைக் கொண்டதாக அறியப்படுகிறது பீட்ரூட். மக்களுள் ஒரு சாரார் இதனை மிகவும் விரும்புபவராகவும், மற்றொரு சாரார் இதனை அறவே வெறுப்பவராகவும் காணப்படுகின்றனர்.

இதற்கு காரணம், அதன் முக்கியத்துவம் மற்றும் நன்மைகளைப் பற்றி தெரியாமல் இருப்பதே ஆகும். உண்மையில் இதன் நன்மைகளை நன்கு தெரிந்திருந்தால், நிச்சயம் இதனை உணவில் சேர்ப்பார்கள். எனவே நீங்கள் பீட்ரூட் அபிமானியாக இருந்தாலும் சரி, இல்லை அதன் மகிமையைப் பற்றி அறிந்திடாதவராக இருந்தாலும் சரி, இதனை உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டியதற்கான காரணங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

இதைப் படித்து தெரிந்து, இனிமேலாவது பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நைட்ரேட்டுகளின் தலைசிறந்த மூலாதாரமாக விளங்கும் பீட்ரூட், வயிற்றுக்குள் சென்ற பின் நைட்ரைட்டுகள் மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு என்றழைக்கப்படும் வாயுவாக மாற்றப்படுகிறது. இவ்விரண்டு கூறுகளும் இரத்த நாளங்களை விரிவடையச் செய்வதோடு, இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன. தினமும் 500 கிராம் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஒருவரின் இரத்த அழுத்தத்தை சுமார் 6 மணி நேரத்திலேயே குறைத்து விடலாம் என்றும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பீட்ரூட்டின் மற்றொரு முக்கியமான நன்மை யாதெனில், ஒரு நபரின் இரத்த அழுத்தம் எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு அது குறைவதற்கு உதவும் என்பதேயாகும்.

பீட்ரூட், கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டாஸையனின் ஆகியவற்றை அபரிமிதமான அளவுகளில் கொண்டிருப்பதாக அறியப்படுவதாகும். பீட்டாஸையனின் என்ற கூறு, பீட்ரூட்டுக்கு அதன் கருஞ்சிவப்பு நிறத்தைக் கொடுப்பதோடு, சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது. இது எல்டிஎல் கொழுப்பின் ஆக்ஸிடேஷனுக்கு உதவுவதோடு, இரத்த நாளங்களின் சுவர்களில் அது படியாமல் தடுக்கவும் செய்கிறது. இதனால் இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளில் இருந்து இதயத்தை பாதுகாத்து, மருத்துவ சிகிச்சைக்கான தேவையைக் குறைக்கவும் உதவுகிறது.

பீட்ரூட்டின் மற்றொரு வியத்தகு அம்சம், ஃபோலிக் ஆசிட்டின் அமோக விநியோகம் ஆகும். ஃபோலிக் ஆசிட், கருவிலிருக்கும் குழந்தையின் தண்டுவடம் ஒழுங்காக உருவாவதற்கு உதவுவதோடு, ஸ்பைனா பிஃபிடா (பிறவியிலேயே குழந்தையின் தண்டுவடம் முழுமையாக உருவாகாமல், பெரும்பாலும் அடிப்பகுதியில் இரண்டாக பிளவுபட்டது போல் தோற்றமளிக்கக்கூடிய ஒரு நிலை) போன்ற குறைபாடுகளில் இருந்து அக்குழந்தையைப் பாதுகாக்க வல்லது. அதனால் ஃபோலிக் ஆசிட் கர்ப்பிணி தாய்க்கும், கருவிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் அவசியம். மேலும் பீட்ரூட், தாயாகப் போகும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் போது தேவைப்படும் கூடுதல் சக்தியையும் வழங்கவல்லதாகும்.

பீட்ரூட்டில் நிரம்பியுள்ள சிலிகா, உடல் தனக்குத் தேவையான கால்சியம் சத்தை சிறப்பாக உபயோகித்துக் கொள்ள உதவும் மிக அவசியமான ஒரு தாதுப்பொருளாகும். பொதுவாக எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியமானது. எனவே, தினந்தோறும் ஒரு டம்ளர் பீட்ரூட் சாற்றை பருகி வந்தால், எலும்புருக்கி மற்றும் எலும்புச் சிதைவு நோய்களை அண்ட விடாமல் தடுக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் அனைவரும், தங்களின் இனிப்பு சாப்பிடும் வேட்கையை, சிறிது பீட்ரூட்டை உட்கொள்வதன் மூலம் தணித்துக் கொள்ளலாம். இது கொழுப்புச்சத்து அற்றதாக, குறைவான மாவுச்சத்துடன் கூடியதாக, நடுத்தரமான க்ளைகோமிக் இன்டெக்ஸைக் கொண்டதாக இருப்பினும், இதில் சர்க்கரை சத்து இருப்பதனால், மருத்துவர்கள் இதனை குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ளும் படி பரிந்துரைக்கிறார்கள். நடுத்தரமான க்ளைகோமிக் இன்டெக்ஸ் என்றால், அது சர்க்கரைச் சத்தை மிக மெதுவாகவே இரத்தத்திற்குள் விடுவிக்கும் என்று அர்த்தம். பீட்ரூட்டின் இந்த அம்சமானது, ஒருவரின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைவாக வைத்திருக்க உதவுவதோடு, அவரது இனிப்பு சாப்பிடும் வேட்கையையும் தணித்துக் கொள்ள உதவுகிறது.

பீட்ரூட் கருஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதால், அது இழந்த இரத்தத்தை மீட்க உதவும்; அதனால் இது இரத்தசோகைக்கு மிகவும் நல்லது என்றொரு மூட நம்பிக்கை உலவி வருகிறது. பலருக்கு இது நகைப்புக்குரிய விஷயமாகத் தோன்றினாலும், இந்த மூட நம்பிக்கையில் ஒரு பாதி உண்மையே உள்ளது. பீட்ரூட்டில் அபரிமிதமான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இரும்புச்சத்து, பிராண வாயு மற்றும் ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் எடுத்துச் செல்ல உதவக்கூடியதான ஹீமோக்ளூட்டினின் என்ற திரவத்தின் உருவாக்கத்துக்கு உதவக்கூடியதாகும். இரத்தசோகையை குணமாக்க உதவுவது பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து தானேயொழிய அதன் நிறமல்ல.

அமெரிக்க சர்க்கரை நோயாளிகள் சங்கத்தின் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், பீட்ரூட் ஒருவரின் ஆற்றலை அதிகரிக்க உதவக்கூடியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் நைட்ரேட் உட்பொருள், ஒருவரின் இரத்த நாளங்களை விரிவாக்கி, பிராணவாயு உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் சீரான முறையில் சென்றடைய உதவி புரிந்து, அவரது ஆற்றலை அதிகரிக்கச் செய்கின்றது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பீட்ரூட்டில் இரும்புச் சத்து செறிந்திருப்பதால், அது ஒருவரின் சகிக்கும் தன்மையை மேம்படுத்துவதாக மற்றொரு ஆய்வு கூறுகிறது. மூலம் எதுவாக இருப்பினும், வேலைப்பளுவினால் சோர்வடைந்த ஒரு நாளின் முடிவில், அதனை போக்கக்கூடிய உணவே ஒருவரின் தேவையாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

"இயற்கையான வயாக்ரா" என்றும் அழைக்கப்படும் பீட்ரூட், பாலியல் நலனை மேம்படுத்தும் நோக்கிலான பழங்கால சம்பிரதாயங்கள் பலவற்றில் சர்வ சாதாரணமாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது. பீட்ரூட் நைட்ரேட்களின் செறிவான மூலாதாரமாக விளங்குவதால், இது நைட்ரிக் ஆக்ஸைடை உடலுக்குள் செலுத்தி, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இனப்பெருக்க உறுப்புக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதே செயல்பாட்டைத் தான் வயாக்ரா போன்ற மருந்துகள் நகலெடுத்துள்ளன. மனித உடலில் பாலியலைத் தூண்டும் ஹார்மோனின் சுரப்புக்கு மிக முக்கியமானதான போரான் என்ற வேதியியல் கூறு, பீட்ரூட்டில் ஏராளமாக உள்ளது என்பது மற்றொரு அறிவியல் உண்மையாகும். எனவே அடுத்த முறை, நீல நிற மாத்திரைகளை தூக்கி எறிந்து விட்டு, அதற்கு பதிலாக கொஞ்சம் பீட்ரூட் சாற்றைப் பருகுங்கள்.

பீட்ரூட்டின் பீட்டாஸையனின் உட்பொருள் மற்றொரு முக்கியமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. வாஷிங்டன் டிசியில் உள்ள ஹேவார்டு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் புற்று செல்லின் வளர்ச்சியை, பீட்டாஸையனின் சுமார் 12.5 சதவீதம் வரை மட்டுப்படுத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது புற்றுநோய்களை தடுப்பதற்கும், அவற்றின் சிகிச்சைக்கும் உதவுவதோடல்லாமல், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தோர் புற்றுநோயினால் மீண்டும் பாதிப்படையாத வண்ணம் நீண்ட நாட்கள் நலமோடு வாழ்வதற்கும் உதவி செய்கிறது.

பீட்ரூட், எளிதில் கரையும் தன்மையாலான நார்ச்சத்துடன் கூடிய உட்பொருளைக் கொண்டிருப்பதனால், இது மிகச்சிறந்த மலமிளக்கி மருந்தாகவும் செயல்படுகிறது. அதிலும் இது பெருங்குடலை சுத்தமாக்கி, வயிற்றில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி, மலங்கழிப்பை சீராக்கும்.

யு.கே.வில் உள்ள எக்ஸீடர் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், நைட்ரேட் உட்பொருள் அதிக அளவில் இருக்கக்கூடிய பீட்ரூட் சாற்றை பருகுபவரின் சகிக்கும் தன்மையானது சுமார் 16 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. உடல் உள்ளிழுத்துக் கொள்ளும் பிராணவாயுவை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்ததாக அறியப்படும் பீட்ரூட், இந்த ஒரு அம்சத்தைக் கொண்டே மூளையின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதோடு, மறதி நோயையும் குணமாக்கக் கூடியதாகும். நைட்ரேட், நைட்ரைட்டாக மாற்றப்படும் போது, அது நரம்புகளில் ஏற்படக்கூடிய அலைகளைத் தூண்டி, அவற்றை சீரான முறையில் பரப்புவதன் மூலம் மூளையை மேலும் சிறப்பாக செயல்பட வைக்கும்.
+