05/08/2014

காலையில் முட்டை சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்....! ட்ரை பண்லாமே...!

முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையும் குறையும் என்பது தெரியவந்துள்ளது.

உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடத்தியது.

இதில் தெரியவந்த தகவல்கள், காலை உணவில் முட்டையை சேர்த்துக் கொண்டால் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைக்கிறது.

 இது உடலில் ஆற்றலை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும்.

அதன்மூலம் மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்த அதிக உணவுகளை சாப்பிட வேண்டியிருக்காது. அதனால் உடலில் கலோரிகள் குறையும்.

இவ்வாறு உணவுகளின் அளவு மற்றும் கலோரி குறைவதால் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று தெரியவந்துள்ளது.
+

வயதானாலும் முகம் ஜொலிக்க வேண்டுமா..? - இதைப்படிங்க...!

கண்களில் உள்ள மேக்கப்பை, அது சாதாரண மையாக இருந்தாலுமே, நீக்காமல் தூங்கச் செல்லக் கூடாது. மேக்கப் ரிமூவர் வைத்து, முறையாக  அகற்ற வேண்டும்.

அகற்றாமல் விட்டால், கண்களுக்கடியில் கருவளையங்கள் உருவாகலாம். இரவில் கண்களுக்கான நைட் கிரீம் தடவலாம்.

அது  கண்களின் களைப்பை நீக்கும். கண்களுக்கடியிலான சுருக்கங்கள், கருவளையங்கள், கோடுகளையும் நீக்கும்.

காலையிலும் இரவிலும் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்துக் கொண்டு 10 நிமிடங்கள் ஓய்வெடுத்தால், கண்களுக்கடியில்  வீக்கம் வடியும்.

கருமை மறையும். கருவளையங்கள் அதிகமாக இருந்தால், அதற்கான முறையான சிகிச்சை அவசியம். பார்லர்களில் அதற்கென்றே  பிரத்யேக மசாஜ் செய்யப்படுகிறது.

தொடர்ந்து செய்து கொண்டால், முற்றிலும் மறையாவிட்டாலும், ஓரளவு மாற்றம் தெரியும். சிலருக்கு ஸ்ட்ரெஸ்சின்  காரணமாக கருவளையங்கள் வரும்.

பன்னீரில் நனைத்துப் பிழிந்த பஞ்சை கண்களின் மேல் வைத்து எடுக்கலாம்.

புருவங்களின் மேல் விளக்கெண்ணெய் தடவி வந்தால், அவை  அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும். சிலர், இளமை வயதுகளைத் தாண்டிய பிறகும் கம்பீரமாய் காட்சியளிப்பார்கள். சிலரோ இளம் வயதிலேயே முதுமை தட்டிப்போய் தோன்றுவார்கள்.  இவர்கள் மட்டும் எப்படி அன்று பார்த்தது மாதிரியே இன்றும் இருக்கிறார்கள்? என்று சிலரைப் பார்க்கும்போதுதான் தோன்றுகிறது. நமது வயதை  முதலில் வெளிப்படுத்துவது சருமம்தான். அதை ஒழுங்காக, சீராகப் பராமரித்தாலே நமது இளமை நீடித்திருக்கும். எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை  உட்கொள்வதாலும் சருமத்தில் முதுமைத் தோற்றம் தெரிகிறது.

இதைத் தடுக்க, முகத்தைப் பாதுகாக்கும் வகையில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சரி, எப்படி இளமையைத்  தக்கவைத்துக்கொள்வது என்று பார்ப்போம்

தண்ணீர் நல்லது :- இளமையைத் தக்கவைப்பதில் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. சருமத்தை மென்மையாக்குவதற்கும், பாதுகாப்பதற்கும்  தினமும் குறைந்தபட்சம் 1 லிட்டர் தண்ணீர் பருகுவது நல்லது என்கிறார்கள் சரும நிபுணர்கள்.

இளமை காக்கும் உணவுகள்:- என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த உடற்பயிற்சியும், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், இறைச்சி, மீன்  போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வதும் அவசியம். உடல் திசுக்களைப் புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டி ஆக்சிடென்ட் குணம் நிறைந்த  உணவுகளை உட்கொள்வதால் முகம் சுருக்கம் இல்லாமலும், மென்மையாகவும் தோன்றும். மேலும், பசலைக்கீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி,  கிரீன் டீ போன்றவற்றையும் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.

ஆழ்ந்த உறக்கம் அவசியம்:- சரியான உறக்கம் இல்லாததாலும் உடல் அழகு பாதிக்கப்படும் என்பதை பலர் அறிவதில்லை. சரியான தூக்கமின்மை,  சோர்வை ஏற்படுத்தும், இளமையையும் பாதிக்கும். இரவில் குறைந்தது 6, 7 மணி நேர உறக்கம் அவசியம். அதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால்,  மனதில் புத்துணர்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்திலும், சருமத்திலும் பொலிவு ஏற்படும்.

கவலை கூடாது:- ஏதாவது ஒரு கவலையை இழுத்துப் போட்டுக் கொண்டு அதில் மூழ்குவது பலருக்கும் பழக்கமாக இருக்கிறது. கவலை உடல்  நலத்தையும், அழகையும் பாதிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே கவலையை விட்டொழியுங்கள். மகிழ்ச்சியுணர்வை  வளர்த்துக்கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள், உங்கள் முகம் ஜொலிக்கும்!

கண்களின் அழகு எடுப்பாகத் தெரிய வேண்டுமென்றால் புருவங்களை ஷேப் செய்ய வேண்டியது மிக  முக்கியம். 
+

மலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க எளிய வழிகள்...!


இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள்.

ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

* காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் குல்கந்து இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும்.

இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

* பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும்.

பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.

* சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.
மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும்.

பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும்.

48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்
+

50 வயதுக்கு மேல் நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ இதோ டிப்ஸ்...!

“வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ” 50 வயதுக்கு மேல் போய்விட்டாலே எப்பேற்பட்டவராக இருந்தாலும் இந்த பாடல் ஞாபகத்திற்கு வந்துவிடும். காரணம் நம் நோய்வாய் பட்டால் நம்மை கவனிப்பது யார்? என்ற பயம்.

உடல் நலனை பேணி பாதுகாத்துக் கொள்ளுதல் என்பது வாழ்க்கை முழுவதும் தேவைப்படும் மிக முக்கியமான ஒரு பழக்கமாகும். அதிலும் வயது அதிகம் ஆக, ஆக இந்தப் பழக்கம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், இளமை வயதைக் காட்டிலும், முதுமை வயதில் உடலுக்கு அதிகமான பராமரிப்பு தேவைப்படும்.
இந்த பராமரிப்பு, உடல் நலம் மட்டுமல்லாது, மன நலத்தையும், உணர்வுப்பூர்வமான நலத்தையும் வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும். வயது கூடும்போது, பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகலாம். எனவே 50 வயதுக்கு மேற்பட்டோர் எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று திகைக்காதீர்.

ஆரோக்கியம் என்பது பெரும்பாலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவையும், செய்யும் உடற்பயிற்சியையும், பழக்கவழக்கங்களையும் பொறுத்தே அமைகின்றது. கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுவது கடினமாக இருந்தாலும், முதுமை பருவத்தில் ஆரோக்கியத்துக்கான உத்தரவாதமாக இருப்பதனால், எப்பாடுபட்டேனும் பழக்கப்படுத்திக் கொள்ளவும்.

இப்போது சில அடிப்படையான விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் எல்லா விதத்திலும் ஆரோக்கியமாக இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கை முறையை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. அதை முடிந்தவரை பின்பற்றி பாருங்கள்.

உணவுப் பழக்கம்......... அன்றாடம் உண்ணும் காய்கறிகளோடு, பழங்கள், புரத உணவுகள், முழு தானியங்கள் மற்றும் அதிக அளவிலான தண்ணீர் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். முக்கியமாக, ஆரோக்கியமான தேர்வை எளிதான தேர்வாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

உதாரணமாக, ஒரு நாளின் தொடக்கத்தில் தண்ணீரை ஒரு பாட்டிலில் நிரப்பிக் கொண்டு, அதனை கண் எதிரில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், உணவு அட்டவணையில் இல்லாத உணவை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனை சாப்பிட நேர்ந்தால், சரியான அளவில் உண்ணுதல் நலம்.

நடைப்பயிற்சி........ வாழ்வின் பரபரப்புகளுக்கிடையே எளிதாக மேற் கொள்ளக்கூடிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சியே ஆகும். செல்ல நாயை நடைபழகக் கூட்டிச் செல்வதோ அல்லது பேரக் குழந்தைகளோடு பேசிக் கொண்டே நடந்து செல்வதோ, எதுவாயினும், குறிக்கோள் என்பது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதாக இருக்கட்டும். இப்பயிற்சி உடலை உறுதி அடைவதற்கான பயிற்சியளித்து, இதயத்தை சீரான முறையில் இயங்க வைக்கும்.

தூக்கம்......... நல்ல தூக்கம், ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கியபங்கு வகிக்கிறது. இது உடலுக்கு ஓய்வளித்து களைப்பை அகற்றி, மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. கனவு கலையாமல் உறங்க வேண்டுமெனில் போன்கள், டேப்லெட்கள், லேப்டாப் போன்ற சாதனங்களை வேறு ஒரு அறையில் வைத்து விட வேண்டும்.

இதன் மூலம், படுக்கச் செல்லும் முன்பு கடைசியாகவோ அல்லது காலை எழுந்தவுடன் முதன் முதலாகவோ இச்சாதனங்களை பார்க்கக் கூடிய வாய்ப்பைத் தவிர்க்கலாம். மேலும், இவற்றிலிருந்து பளிச்சிடும் ஒளியோ அல்லது அதிர்வலைகளோ தொந்தரவு செய்யாமல் இருக்கும்.

உடல் பரிசோதனை........ வழக்கமான பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கலாம். குறிப்பாக கொழுப்புச் சத்து, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் எலும்புருக்கி நோய் ஆகியவற்றுக்கான மருத்துவ பரிசோதனைகளை முறையாக மேற்கொள்வது அதிமுக்கியமாகும்.

மேலும் ஃப்ளூ காய்ச்சல், நிமோனியா, பெர்டுஸ்ஸிஸ், டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் ஆகிய நோய்கள் தாக்காமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்த தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதை பற்றி மருத்துவருடன் கலந்து ஆலோசிக்கவும்.

மதுபானம்...... உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், மதுபானம் அருந்துவதை குறைத்து கொள்ள வேண்டும். இப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே குறைவாக அருந்துவது சிறந்த யோசனையாகும். மேலும், சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இதில் எந்த வகை அல்லது எத்தனை முறை எடுத்துக் கொள்கிறோம் என்பதெல்லாம் பொருட்டல்ல. இதனை முற்றிலுமாக தவிர்ப்பது நலம்.

நண்பர்கள்......... நல்ல சமூகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் மனதளவில் சிறப்பான நலம் கிடைக்கும். எங்கேனும் ஒன்றாகக் கூடி சமைத்தோ அல்லது திரைப்படத்திற்கோ சென்று, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பொழுதை இனிமையாகக் கழிக்க வேண்டும்.

அதற்காக எப்போதும் கூட்டத்தின் மத்தியில் சிறகடிக்கும் சமூக பட்டாம்பூச்சியாக இருக்க வேண்டியதில்லை. மனதுக்குப் பிடித்த சில நண்பர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களோடு அடிக்கடி தொடர்பு கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

மூளையின் ஆற்றலை மேம்படுத்தவும்......... மூளைத் திறனை மேம்படுத்துவதன் மூலம் இன்னும் பல வருடங்கள் ஆரோக்கியமாக வாழலாம். மூளையை திறம்படுத்த, அறிவையும், ஞாபக சக்தியையும் கூர்மையாக்கக் கூடிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

புத்தகம் படித்தல், திரைப்படம் பார்த்தல், மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய விளையாட்டுக்களான செஸ் மற்றும் ஸ்க்ராபிள் ஆகியவற்றில் ஈடுபடுதல், புதிர் விளையாட்டுக்களான குறுக்கெழுத்து மற்றும் சுடோகு போன்றவற்றை நிரப்புதல் போன்றவை அறிவை கூர்மையாக்கக் கூடிய சில வழிகளாகும்.

வெளியுலகம்.......... சுத்தமான வெளிக்காற்றை சுவாசிப்பதும், சூரிய ஒளியில் செல்வதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வித்திடக்கூடியனவாகும். ஒவ்வொரு நாளும் வெறும் 15 முதல் 20 நிமிடங்கள் மட்டும் சூரிய ஒளியில் நின்றாலே, உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைத்துவிடும். அதிலும் காலைச் சூரியனின் ஒளி, மனநிலையை ஊக்கப் படுத்தக்கூடிய செரோட்டோனின் என்ற சுரப்பை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்ததாகும்.

படுக்கையறை........ ஆரோக்கியமான தாம்பத்திய உறவு நலமான வாழ்க்கை முறையைப் பேணுவதற்கு உதவுகின்றது. பாலியல் தேவைகள் அனைவருக்கும் பொதுவானவை. முதுமையடையும் பருவத்தின் அத்தியாவசிய மற்றும் ஆரோக்கியமான பகுதியாகும்.

ஆதலால் ஆரோக்கியமான பாலுறவு வாழ்க்கையின் அங்கமாகத் தொடர்வது அவசியம். சொல்லப்போனால், ஆரோக்கியமான தாம்பத்திய உறவு, உடல்நலம், மனநலம் மற்றும் உணர்வுகளின் மேம்பாடு ஆகியவற்றை அளித்து, ஆரோக்கியத்தின் அனைத்து கூறுகளுக்கும் நலம் பயக்கக்கூடியதாகும்.

மனப்பான்மை........ சிறந்த மனப்பான்மையுடன் இருப்பது நம்மை பற்றி உயர்வாக நினைப்பதற்கு வழிவகுக்கும். அதற்கு எப்போதும் நல்லதே நடக்கும் என்று நம்ப வேண்டும். அனைத்தையும் உயர்வான நல்ல எண்ணத்தோடு நோக்குவது மனப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தன்னிறைவு கொள்ள வைக்கும்.

அதிலும் மனரீதியாகவும், உணர்வுரீதியாகவும் நன்றாக உணர்ந்தால், நல்ல உடல் நலத்தைப் பெறுவதற்கான செயல்களில் நம்மால் மிக எளிதாக ஈடுபட முடியும். 50-ல் வரும் முதுமை நிச்சயம் ஒரு சுமையல்ல, இதனை பிள்ளைகளும் உணர வேண்டும்.
+

ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்...!


சமையலில் முக்கியமாக இனிப்புப் வகைகள், கேக், போன்றவற்றிற்கு வாசனை, சுவை அளிக்க கூடிய ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’(Queen of the spices) என்று சிறப்புப் பெயர் - செல்லப் பெயர் கொண்ட ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

* சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன் மென்று தின்றால், அஜீரணம் அகலும். பசி ருசி உண்டாகும்.

* ஏலப்பொடியுடன், மிளகுப்பொடி சேர்த்து, சிறிது துளசிச்சாறில் சேர்த்துக் குடித்தால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.

* ஏலக்காய் தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும்.

* தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புகள் நன்கு இயங்கும். வலிமை அடையும்.

* ஏலக்காயுடன், கறிவேப்பிலை வைத்து மைய்யாக அரைத்து எருமைத் தயிரில் சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

* ஏலக்காய் விதைகளை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கிவர, வாய்நாற்றம் மாறும்.

* நான்கு மிளகு, சிறிது ஏலக்காய், சுக்கு இவைகளுடன் பால் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்றிட தலை வலிதானே போகும்.

* ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, தனியா இந்த ஐந்தையும் சேர்த்து கஷாயம் செய்து பருகிவர குற்றிருமல் குணமாகும்.

* வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து சிறிது ஏலக்காய்ச் சேர்த்து மென்று தின்றால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

* சிறிது ஏலக்காயுடன் வேப்பிலை மஞ்சள் வைத்து அரைத்து பித்த வெடிப்பு மீது பூசிவர, விரைவில் வெடிப்பு குணமாகும்.

* ஏலக்காயுடன், அதிமதுரம், மிளகு போட்டு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி பருகினால், வாந்தி, குமட்டல் உடனே நிற்கும்.

* அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்தூள் சேர்த்து பருகிவர, மூத்திரக் கோளாறுகள் குணமாகும். நீர்கடுப்பு நீங்கும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்களுக்கு, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

* சுக்கு, ஏலக்காய், கிராம்பு இவைகளுடன் சிறிது நீர் தெளித்து மைய அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளின் மீது பூசி வர, மூட்டுவலி குணமாகும். ஆரம்பநிலை வாதம் நீங்கும்.

* ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி பொடித்திட்டு கலந்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை தின்றுவர, பித்த கிறுகிறுப்பு மாறும்.

* திராட்சைச்சாறுடன், ஏலக்காய்த்தூள் கலந்து சாப்பிட்டுவர, நரம்புத்தளர்ச்சி நீங்கும். நரம்புகள் வலுப்பெறும்.

* ஏலக்காய்தூள், சுக்குப்பொடி, மிளகுப்பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டுவர, தசைபிடிப்புகள் நீங்கும்.

* செவ்வாழைப்பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.

* வெல்லத்தைப் பொடித்து நீரில் கலந்து, அத்துடன், எலுமிச்சைச்சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி ஏற்படும்.

* ஏலக்காயின் முக்கியமான பயன் என்னவென்றால். சூரிய வெப்பத்தால், உடலில் வெப்பம் அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் பக்கவாதம் வராது. அதிலும் வெளியே செல்லும் போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால், வெப்ப அலைகள் உடலை தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.

* ஆயுர்வேத கொள்கையின் படி, ஏலக்காய் உடலில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றிற்கு சிறந்தது. இவை உடலில் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்து, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே இதனை உண்டால் நன்கு ஆரோக்கியமாக வாழலாம். மேலும் அதனை உண்பதால், நல்ல குரல் வளத்தையும் பெறலாம்.

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள்.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

* பாலுணர்வு தூண்டும் பொருளாகவும் உள்ளது.
+

அழிந்து வரும் சரிவிகித உணவு கலாச்சாரம்..!

அறிவியல், கணிதம், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் உலகிற்கு முன்னோடியாக விளங்கிய இனம் தமிழினம். செய்யும் வேலைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சரிவிகித உணவு வகைகளையே நம்மவர்கள் உட்கொண்டு வந்தனர்.

சரிவிகித உணவிற்கு எடுத்துக்காட்டாய் சாதம், பருப்பு, ரசம், காய்கறிகளின் கூட்டு, பொறியலை துவக்கப்பள்ளி பாடங்களில் படித்தது நினைவில் இருக்க கூடும். சாதத்தில் கார்போஹைட்ரேட்டும், பருப்பில் புரோட்டீனும், காய்கறிகளில் வைட்டமின், மினரல், பைபர் உள்ளிட்ட சத்துகளும் அடங்கியிருந்தாலேயே இது சரிவிகித உணவு என கூறப்பட்டது. இந்த சரிவிகித உணவு முறையுடனான தமிழனின் உறவு தற்போது முறியும் தருவாயில் இருக்கிறது. முன்னதாக ராகி, கம்பு, சோள வகை உணவுகளுடனான தமிழனின் உறவு முறிந்து பல வருடங்கள் கடந்து விட்டன.

தற்போது பெருகி வரும் பீட்சா, பர்கர் போன்ற மேலை நாட்டு உணவு கலாச்சாரத்தால் கவரப்பட்ட தமிழ் இனம் மெல்ல மெல்ல அதன் சுவைக்கு அடிமையாகி கொண்டிருக்கிறது. ருசிக்கு சாப்பிடும் எண்ணமும், சோம்பேறித்தனமும் மேல்நாட்டு உணவு வகைகள் இங்கு காலூன்ற காரணமாகி விட்டன. இதன் விளைவாக வீதிக்கு வீதி தமிழன் பாஸ்ட் புட், தமிழன் பீட்சா கார்னர் போன்ற பெருமை மிகு பெயர்களை தாங்கிய உணவு விடுதிகள் இங்கு பெருகி விட்டன. பெருகியும் வருகின்றன.

இந்த நூற்றாண்டின் பிரபல நோய்களாக விளங்கும் சுகர், பிபி உள்ளிட்ட அனைத்து வியாதிகளுக்கும் அடிப்படையே இந்த மேலை நாட்டு உணவு கலாச்சாரம் தான். அதனால் ஏற்படக்கூடிய நோய்களில் இருந்து பாதுகாத்து தப்பி பிழைப்பதற்காக, பாரம்பரிய உணவு முறைகளுடனான உறவை புதுப்பித்து கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழினம் வந்திருக்கிறது.

மேலைநாட்டு உணவு முறைகளினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உணவு முறையியலாளர்கள் கூறுகையில், கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்ஸ், புரோட்டீன்ஸ், பைபர் போன்ற அனைத்து சத்துகளும் அடங்கிய சரிவிகித உணவே ஒருவரது வாழ்நாளை தீர்மானிக்கும். மேற்கத்திய உணவு வகைகளின் மூலம் மேற்கண்ட சத்துகள் எதுவும் நமது உடலுக்கு கிடைக்காது.

இதன் சுவைக்கு அடிமையாகி தொடர்ச்சியாக இந்த உணவுகளை உண்ணும் போது, ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் ஏற்படும். உதாரணமாக விட்டமின்-ஏ குறைபாட்டால், கண் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். செய்யும் வேலைகளுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதினால் உடல்பருமனும் ஏற்படும். உடல்பருமனே 25 முதல் 30 வயதிற்குள்ளாக சர்க்கரை வியாதி, மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட காரணம்.

இந்த உணவு முறை மாற்றத்தால் பெண்கள் பூப்பெய்தும் வயதில் கூட மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதனால் பெண்கள் சராசரியாக பூப்பெய்த வேண்டிய 14 வயதிற்கு முன்னதாக, அதவாது 11-12 வயதிலேயே பூப்பெய்தி விடுகின்றனர். மேல்நாட்டு உணவு வகைகளை உண்பதால் ஏற்படும் மிதமிஞ்சிய வளர்ச்சியால், ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்ந்து, இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மேலும் கூடுதல் சுவை மற்றும் நிறத்திற்காகவும், நூடுல்ஸ் வகைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் ரசாயன பொருட்களாலும் அல்சர், குடல் புற்றுநோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். பீட்சா தயாராகும் மைதாவில் நார்ச்சத்து இல்லாததால், மேற்கண்ட நோய்களுடன் இலவச இணைப்பாக மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் கிடைக்கும். இதை எல்லாம் தவிர்க்க கலோரி, கொழுப்பு சத்துகள் குறைவாகவும், புரதம், இரும்பு, நார்ச்சத்துகள் அதிகமாவும் உள்ள நமது பாரம்பரிய உணவு முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ராகி, கம்பு, சோளம் ஆகியவற்றில் மேற்கண்ட சத்துகள் முழுமையாக உள்ளன. இதனுடன் தினந்தோறும் பழங்கள், காய்கறிகள், கீரைகளை சாப்பிடுவதன் மூலமும் ஆரோக்கிய வாழ்வு வாழலாம் என்றனர்.

மருத்துவதுறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால், எந்த பாதிப்புகள் ஏற்பட்டாலும், அதை நிவர்த்தி செய்து கொண்டு, வாழ்ந்து வருகிறோம். ஆனால் நலமுடன் வாழ்கிறோமா?
+

சைனஸ் என்னும் சைலன்ட் கில்லர் - பிரச்சனையை தவிர்க்க என்ன‌ செய்ய‌லாம்..?


சைனஸ் என்பது நம் முகத்தில் மூக்கின் உட்புறத்தில் உள்ள காற்றறை ஆகும். நமது மூக்கிற்கு இரண்டு பக்கமும் ஒரு ஜோடி சைனஸ் அறைகளும், நடு நெற்றிக்கருகினில் ஒரு ஜோடி சைனஸ் காற்றறைகளும் இருக்கின்றன.

நாசி துவாரத்தின் உள்ளே மேடு பள்ளங்களும் காணப்படுகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றினில் உள்ள கிருமிகளை இந்த பகுதியில் உள்ள செல்கள் தடுத்து விடுகிறது.

இதன் உட்பகுதியில் உள்ள காற்றிடமே சைனஸ். இதில் அலர்ஜி அல்லது நோய் தாக்குதல் ஏற்பட்டு நீர் கோர்த்துக் கொள்வதால் சைனஸ் என்கின்ற காற்றறைகளில் பாதிப்பு வருகின்றது. இந்த பாதிப்பிற்கு த்தான் சைனஸைடிஸ் என்று பெயராகும்.

காரணங்கள்: நச்சு காற்றை தொடர்ந்து சுவாசிப்பதால் அலர்ஜி ஏற்பட்டு இந்த சைன ஸைடிஸ் நோய் பாதிப்பு உண்டாகிறது. பாக்டீரியா போன்ற கிருமி தாக்குதலாலும் சைனஸைடிஸ் பாதிப்பு ஏற்படுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சு தன்மையாலும் இது ஏற்படுகிறது.

அறிகுறிகள் : அளவுக்கதிகமான தொடர்ச்சியான தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கினில் அரிப்பு, நாசி துவாரங்கள் அடைத்து கொள்ளுதல் ஏற்படும். அடிக்கடி தலைவலி ஏற்படும்.

முக வீக்கம், கண்களை சுற்றி வலி, தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகள் எல்லாம் சைனஸ் பாதிப்பினால் ஏற்படுவதை வைத்து எளிதில் இது சைனஸைடிஸ் பாதிப்பு என்று நாம் கண்டு பிடித்துவிடலாம்.

தவிர்க்க வேண்டியவை : குளிர்பானங்கள், மற்றும் குளிர்ச்சி தரும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஆறு, குளம், கடல் போன்ற வற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். தலைக்கு குளித்தவுடன் தலையில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அடிக்கடி ஜலதோஷம் பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கூடுமான வரை இவர்கள் குளிர்ந்த நீரை தவிர்த்து விட்டு வெந்நீர் குடித்து வரலாம்.

மேலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை தவிர்க்கலாம். சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள் எல்லாம் தொடர்ந்து பிராணாயாமம் என்கின்ற மூச்சு பயிற்சியும், மற்றும் சில தேவையான உடற்பயிற்சி களையும் மேற்கொள்ள வேண்டும்.

சைனஸ் பிரச்சினையை 2 வகையாகப் பிரிக்கலாம். ஒன்று திடீர் திடீரென வந்து போகும், அதிக வலியை தரும் சைனஸ். இன்னொன்று நிரந்தரமான ஆனால் குறைவான வலியைத் தரும் சைனஸ். முதல் வகையை நாசில்ஸ் ஸ்பிரே, நோய் எதிர்ப்பு மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.

மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை வரை போக வேண்டியதிருக்கும். சைனஸ் பிரச்சினையை பொருட்படுத்தாமல் விடுவதால் வரும் 2-வது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்தி விட முடியாது.

வலியை வேண்டுமானால் கட்டுப்படுத்த இயலும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக்களையும் நீக்கினால்தான் முழு நிவாரணம் கிடைக்கும். தற்போதைய நவீன சிகிச்சை முறையில் திசுக்களை நீக்க வேண்டியதில்லை. `என்டோஸ்கோப்பிக்’ சைனஸ் அறுவை சிகிச்சை முறையில் அதை குணப்படுத்த முடிகிறது.

குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை. மூடப்பட்ட சைனஸ் அறை கதவை திறந்து உள்ளே இருக்கும் சீழ் வெளியேற்றப்படும் வகையில் தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால் எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அவற்றில் இருப்பது சளியா அல்லது சீழா என்பதையும் மிகத் துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதனால் அறுவை சிகிச்சை எளிதாகி விட்டது.
+

உடலிலுள்ள கொழுப்பை வெளியேற்ற உதவும் 10 உணவுகள் - உங்களுக்காக...!

உடல் எடையைக் குறைக்க விரும்பினால் ஆரோக்கியமற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிறசி இயந்திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டாலும் பலன் கிடைக்காது. உடல் எடையினை குறைத்து காட்டுகிறேன் பார் என்று கூறி அதிநவீன எந்திரங்கள் மூலம் உடல் நலத்தை கெடுத்துக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய்யாமல் உடல் எடையைக் குறைக்கும் குறிக்கோளை அடைய இயலாது. சந்தையில் பல்வேறு எடை குறைப்பு வாக்குறுதிகள் நிலவி வந்தாலும் அவை பெரும்பாலும் உண்மைக்குப் புறம்பானவையாகவும் உடலுக்கு ஆபத்தானவைகளாகவும் உள்ளன.

ஆனால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப் பாட்டுடன் எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதாகும். இதற்கு உடனடி சிறந்த வழி, கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான உணவில் சேர்த்துக் கொள்வதாகும்.

இங்கு எடை குறைப்பு திட்டத்தை எளிமையாகவும் பலனுள்ளதாகவும் மாற்ற கொழுப்பை குறைக்கும் உணவு வகைகளை கீழே கொடுத்துள்ளோம்.

1. கல்சியம் : கல்சியம் எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவூட்டும் என்று பலர் சொல்வதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் அவை பசியை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

பால் பொருட்கள் மற்றும் கல்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கும் போது கல்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

2. ஆப்பிள்கள் : தினசரி ஆப்பிள் உட்கொள்ளுதல் மருத்துவரை அணுகுவதை குறைக்கும். அதேவேளையில். கொழுப்புச் செல்களை குறைக்கவும் உதவுகிறது என்பது தெரியுமா ஆம். ஆப்பிளின் தோல் எடை குறைப்பு குறிக்கோளை பூர்த்தி செய்யும் பல விந்தைகளை உள்ளடக்கியது. இதில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.

3. வால்நட் : வால்நட்களில் ஒமேகா - 3, ஆல்பா லினோலினிக் மற்றும் தன்னிறைவற்ற கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது. இந்த தன்னிறைவற்ற கொழும்புச் சத்தானது பெரிய அளவில் நம் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வால்நட்கனை உட்கொள்ளுங்கள்.

4. பீன்ஸ் : பீன்ஸ் ஒரு குறைந்த கொழுப்பையும் க்ளைசீமிக் குறியீடு எனப்படும் மெதுவாக சக்தி வெளியிடும் தன்மையும் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச் சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச் சத்து தரும் உணவு. அத்துடன் இது கொழுப்பை வெளியேற்றி உடலுக்கு நல்ல வளர்சிதை சுழலை வழங்குவதால் இது நல்ல முறையில் கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.

5. இஞ்சி : இஞ்சியில் பல ஆச்சரியப்படத்தக்க குணங்கள் உள்ளன. இது அஜீரணத்தை குறைக்கவும். வயிற்று எரிச்சலை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் தசை மீட்புக்கும் உதவுகிறது. மேலும் இது சக்தியையும், கொழுப்பை கரைக்கும் செயல்களையும் ஊக்குவிப்பதனால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவராயின் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

6. ஓட்ஸ் : காலை உடற்பயிற்சிக்குப் பின்னர் அல்லது காலை நடைப் பயிற்சிக்குப் பின்னர் ஓட்ஸ் உணவு சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து விரைவுப் படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக செரிமானமாகும் தன்மையினால் எடையைக் குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும்.

7. க்ரீன் டீ : க்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழும்புக்களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை கொணடவை. ஆகவே நாள்தோறும் 12 டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

8. மிளகு : மிளகை உபயோகிப்பதனால் உணவு உண்ட பின்னும்கூட சக்தி மற்றும் கொழுப்பு உடனடியாக வெளியேற்றப்பட்டு உடலின் வளர்சிதை மாற்றம் குறைந்த நேரத்திற்குள் விரைவுபடுத்தப்படுகிறது. மேலும் இதில் உள்ள காப்சைசின் என்ற மூலப்பொருள் உடலின் அழுத்த அமிலங்களை விடுவித்து உடம்பிற்கு ஒரு தற்காலிக ஊக்கத்தை தருகிறது.

இந்த முறையினால் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி சக்தியையும், கொழுப்பையும் கரைக்க உதவுகிறது.

9. தண்ணீர் : இது ஒரு உணவாக கருதப்படாவிட்டாலும், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். உடலில் தண்ணீர் ஒரு இன்றியமையாத ஒரு பாகமாகும். தேவையான தண்ணீர் குடிக்கவில்லையெனில் சில நிமிடங்களுக்குள் உடல் வறட்சியை உணரக்கூடும். சில சமயங்களில் தாக உணர்வினை பசி உணர்வு என்று தவறாக புரிந்து கொண்டு தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக உண்ணத் தொடங்குகிறோம். எனவே கொழுப்பு கரைப்பிற்கு தண்ணீர் உதவுவதால் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது.

10. முட்டை : முட்டை சிறப்பாக கொழுப்பை கரைக்கும் உணவுகளில் ஒன்று. இதன் மஞ்சள் கரு சக்தியையும், கொழுப்பையும் கரைக்க முக்கியமான தாகும். இதிலுள்ள கொழுப்புச் சத்து மிக சிறிய அளவில் தான் இரத்த கொழுப்பு அளவினை பாதிக்கிறது. மேலும், முட்டை உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களையும். புரதத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள தால், கொழுப்பை குறைக்க ஒரு நல்ல பொருத்தமான உணவுப் பொருளாக நிச்சயமாக கருத வேண்டியுள்ளது.
+

உடல் கொழுப்பை குறைக்க வேண்டுமா..? இதுதாங்க ஈசியான மருந்து...!

அதிகமான கொழுப்பு உடம்பில் சேர்ந்துவிட்டதா? இதை குறைப்பதற்கான வழிகளை மேற்கொண்டுள்ளீர்களா?

இதனுடன் சேர்த்து உணவையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் இந்த பகுதியில் பார்ப்போம். கொழுப்பை கரைக்கும் செயலில் உதவும் உணவுகள் கடைகளில் எளிதாக கிடைக்கின்றன.

14 முதல் படியாக உடல் எடையை குறைக்க உதவுவது ஓட்ஸ்.

இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஒரு கப் ஓட்ஸை காலை உணவாக சாப்பிடலாம் அல்லது ஓட்ஸ் கலந்த பயிர் வகைகளை காலை உணவாக சாப்பிடலாம். மேலும் அத்துடன் வாழைப்பழம் அல்லது ஸ்ட்ராபெர்ரிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

ஓட்ஸ் இரண்டு கிராமாக இருந்தால் பழங்களை சேர்த்தால் கூடுதல் அரை கிராம் ஆகிவிடும்.

தற்போதைய அறிவியல் கணிப்புகளின் படி ஏறத்தாழ ஒரு நாளைக்கு 15 முதல் 30 கிராம் வரை நார்ச்சத்தை சாப்பிட வேண்டும் என்றும், குறிப்பாக அதில் 10 முதல் 15 கிராம் கரையும் நார்ச்சத்து இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது.

+

தைராய்டு பிரச்சனை - நோய் அறிகுறியும் & சிகிச்சையும் - உங்களுக்காக...!

தைராய்டு பிரச்சனை- நோய் அறிகுறியும் சிகிச்சையும்:-
என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் சகஜமான ஒரு நோயாகும். பயப்படவோ அச்சப்படவோ தேவையில்லை. அதாவது நம் உடல் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்வதே தைராய்டு நோயாகும்.

உலகம் முழுதும் 200மில்லியன் பேர்களுக்கு தைராய்டு நோய் உள்ளது. கடந்த மே மாதம் 25ஆம் தேதி உலக தைராய்டு தினமாக அனுசரிக்கப்பட்டது.

அறிகுறிகள்:

கழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டின் பிரதான அறிகுறிகள்.

மேலும், நல்ல பசியிருந்தும் உடல் எடை குறைதல், இருதயத் துடிப்பு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, அதிக வியர்வை, மாதவிடாய் சட்டு சட்டென வருதல், குடல் இயக்கம் அதிகரித்தல், கை நடுக்கம். ஆகியவையும் தைராய்ட் அறிகுறிகளாகும்.

உடல் எடைக்குறைப்பிற்கான அனைத்து வேலைகளைச் செய்தும் உடல் எடை குறையாமல் இருப்பது அல்லது உடல் எடை அதிகரிப்பது, சோம்பல், இருதய துடிப்பு இருக்கவேண்டிய அளவை விட குறைதல், கைகள் மறத்துப் போதல், வறண்ட சருமம், மாதவிடாயில் வெளியேற்றம் கடுமையாக இருத்தல். மலச்சிக்கல் ஆகியவையும் தைராய்டு அறிகுறிகளாகும்.

சிகிச்சை:

தைராய்டிற்கு சிகிச்சை என்பது தைராய்ட் கிளாண்டை முழுமையாகவோ அல்லது பாதியோ வெட்டி எடுத்தல் இதனுடன் கதிர்வீச்சு அயோடின் சிகிச்சையும் செய்யப்படுகிறது.

தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். எனவே அயோடைஸ்டு உப்பை பயன்படுத்துவது நல்லது. அதேபோல் கடல் உணவுவகைகளும் நல்லது. பசலைக் கீரை, எள், பூண்டு ஆகியவை மிகச்சிறந்தது.

செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளில் இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம்.

மனக்கவலை, அழுத்தமும் தைராய்ட் சுரப்பி சரியாக வேலை செய்யாததின் ஒரு அறிகுறியே. எனவே மனதை இலகாக்குவது அவசியம்.

சிலருக்கு தைராய்டு சுரப்பியிலிருந்து ஹார்மோன்கள் தேவைக்குக் குறைவாக சுரக்கும். இது ஹைபோ தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மருத்துவரின் ஆலோசனையின் படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். 
+