14/08/2014

சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!


"மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்"
-தேரையர்.

நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.

இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால், முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும்தான்.முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்

மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்

பொருள்:-முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர். அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.

நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை:-முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.

நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.

நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.

சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர்.

மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.

100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:

நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

வாய்ப்புண் தீர:-நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

பித்தம் குறைய:-15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

இரத்த கொதிப்பு நீங்க:-நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.

கண் நோய்கள் தீர:-நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.
+

வாழைப்பழம் தரும் சரும பலன்கள் - இதோ உங்களுக்காக...!

வாழைப்பழம் என்றாலே அது மஞ்சள் பழத்தைதான் குறிக்கும். இது போக, பச்சை, மலை, கற்புரவல்லி, ரஸ்தாளி, மொந்தன், நேந்திரம்... என இதன் வகைகளோ ஏராளம். அது தரும் சருமப் பலன்களோ தாராளம்!

வயோதிகத்தைத் தள்ளி வைத்து, வாலிப அழகைக் கூட்டி, உடல் வனப்பை ஏற்படுத்தும் வாழைப்பழத்தின் அழகு பலன்களை அறிந்து கொள்ளோம்.

* வெயிலின் உக்கிரத்தால் சருமத்தில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது ‘வாழைப்பழ பேஸ்ட்’.

ஒரு வாழைப்பழத்துடன் சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், வெயிலாலும் தூசியாலும் சருமத்தில் ஏறிய கருமை நீங்கும். பாலுக்கு பதில் தயிர் சேர்க்க, முகம் குளிர்ச்சி பெறும்.

இந்த வாழை – வெள்ளரிக் கலவையில் பால் அல்லது தயிருக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பூசினால், சருமம் மிருதுவாகும். எலுமிச்சைச் சாறு சேர்த்தால், பிளீச்சிங் செய்தது போல் முகம் பளிச்சிடும்.

* வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி, இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவிவிடுங்கள். தோலின் கருமை மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையமும் காணாமல் போகும்.

* ஒரு சிறிய வாழைப்பழத்தைக் கூழாக்கி, இரண்டு டேபிள்ஸ்பூன் பாலேடு அல்லது ஏடு படிந்த கெட்டித் தயிர், ஒரு டேபிள்ஸ்பூன் தேன். ஒரு டேபிள்ஸ்பூன் ஓட்ஸ்மாவு ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை வாரத்தில் மூன்று முறை குளிப்பதற்கு முன் முகம், கை, கழுத்துப் பகுதிகளில் தடவி, 15 முதல் 20 நிமிடம் வரை வைத்திருந்து, காய்ந்ததும் குளிக்கவும், சருமத்தின் வறட்சி, சுருக்கங்கள் நீங்கி பொலிவு கூடும்.

* ஒரு டீஸ்பூன் பால் மற்றும் இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவை ஒரு வாழைப்பழத்துடன் கலந்து நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். முகத்தில் இந்த பேஸ்ட்டை தடவி பத்து நிமிடங்கள் ஊறவிடுங்கள்.

அதன் பின், உங்களுக்கு நார்மல் சருமமாக இருப்பின், ஒரு காட்டன் துணியில் பாலை தோய்த்து முகத்தில் ஒற்றி எடுக்கலாம். எண்ணெய் சருமம் என்றால் மிதமான வெந்நீரில் கழுவி விடலாம். இதனால், சருமத்திலன் மெருகு கூடி பளபளப்பாகும்.

* கொத்து கொத்தாக முடி கையோட வருகிறதா? அதற்கும் இருக்கிறது வாழைப்பழ கண்டிஷனர்!

கனிந்த வாழைப்பழம் ஒன்றை மிக்ஸியில் அரைக்க, அடர்த்தி குறைந்து நீர்த்து விடும். அதனுடன் இரண்டு முதல் மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், ஒரு எலுமிச்சப்பழத்தைப் பிழிந்து எடுத்த சாறு, 2 டீஸ்பூன் வெந்தயப் பவுடர், ரெண்டு டீஸ்பூன் புங்கங்காய் பவுடர் கலந்து தலையில் ‘பேக்’ போடவும்.

பத்து நிமிடங்களுக்குப் பின் நன்றாக அலசவும். ஓரிரு வாரத்தில் முடி உதிர்வது தடைபடுவதுடன், நுனி பிளவும் நீங்கி கூந்தல் பளபளவென மின்னும்.
+

ஆரோக்கியமான குழந்தைக்கு சில உணவு பழக்கங்கள்….!

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்றுமகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது.

இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பினிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. இதனால் ரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்கவேண்டும். உற்சாகத்தை அதிகரிக்கும்: இது மனதிற்கு உற்சாகம் தரும் காய்கறி. சற்றே சோம்பலாகவோ, மன அழுத்தம் ஏற்படுவதுபோல உணர்ந்தாலோ பீட்ரூட் ஜூஸ் சாப்பிடலாம்.

இது மனதை உற்சாகப்படுத்தும், மகிழ்ச்சி ஏற்படும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களை பாதுகாக்கும். குழந்தைகளுக்கு கண்நோய் ஏற்படாமல் தடுக்கும். கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே கர்ப்பிணிகளுக்கு சாலட், ஜூஸ், சூப் போன்றவைகளை செய்தும் கொடுக்கலாம்.
+

சத்துக்கள் நிறைந்த பச்சை வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ- யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.

மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும். முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது. நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.

நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும்.

சத்துக்கள்:-எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழத்தில் இல்லாத சத்துக்களே கிடையாது. இதில் கர்போஹைடிரேட், புரதம், சிறிய அளவில் கொழுப்பு குளூக்கோஸ், நார்ச்சத்தும் ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் கால்சியம், , சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, சிறிய அளவில் செம்புச்சத்தும் மற்றும் வைட்டமின் பொட்டாசியம் 400 மில்லி கிராம், திஷீறீஷீநீவீஸீ 20 மைக்ரோ கிராம், விட்டமின், ரிபோஃபிளேவின், தயாமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம். முதலான உணவுச் சத்துக்களும் கி, ஙி, சி வைட்டமின்களும் சத்துக்கள் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.

மருத்துவக் குணங்கள் :-வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை.
+

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்..! - தெரியுமா உங்களுக்கு...?

மீன் பிரியரா நீங்கள் அப்போ உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, மீன் சாப்பிடும் நபர்களுக்கு வாய் புற்றுநோய், சருமபுற்றுநோய் வர வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதற்கு காரணம் மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த கொழுப்பு அமிலங்கள் இறந்த செல்களை புதுப்பிக்கின்றனவாம். சருமம் பொலிவடைகிறது என்கின்றனர் நிபுணர்கள் லண்டன் பல்கலைக்கழகம், குயின் மேரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதனை பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபித்துள்ளனர்

ஒமேகா 3 அமிலம்:-மீன் உணவில் , கெட்ட கொழுப்பு அறவே இல்லை. புரதச் சத்து அதிகமாக உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த அமிலம் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது.

சருமப்புற்றுநோய்:-பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. சருமப்புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு தருகிறது

மார்பகப்புற்றுநோய்:-மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

இதயத்துக்கு பாதுகாப்பு:-கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எந்தவித இதயக்கோளாறுகளும் ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள்.

குழந்தைகளுக்கு மீன்:-மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது

மூளை சுறுசுறுப்பாகும்:-மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது. அதனால் , வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது என்கின்றனர் நிபுணர்கள்
+