25/08/2014

டீ - யில் இத்தனை வகையா...? டீ பிரியர்களே உங்களுக்காக...!



சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் சுறுசுறுப்பும், புத்துணர்வும், உற்சாகமும் அளிக்கவல்ல ஒரு சுவையான பானம் தேநீர். சுவையான தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். ஒரு கப் தேநீர் தயாரிக்க 1/2 கப் நீரில் 1/2பால் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அருந்தவும். சில வித்தியாசமான சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளை பார்ப்போம்.

மசாலா டீ:

ஏலக்காய் 6, கிராம்பு-6, சோம்பு 1 டீஸ்பூன், தனியா 1/2 ஸ்பூன் ஜாதிக்காய் சிறு துண்டு சுக்கு சிறு துண்டு, பட்டை சிறிது இவற்றை நைஸாக பொடி செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்தும் இந்த பொடியையும் தேயிலையுடன் சேர்த்துப் போட்டு கொதித்ததும் சீனி, பால், சேர்த்து வடிகட்டி அருந்தவும். இது குளிர்காலத்திற்கு சூடு கொடுக்கும் அருமையான தேநீர்.

ரோஸ் டீ:

தேநீர் கொதிக்கும் போது புத்தம் புது ரோஜா இதழ்கள் சிலவற்றை போட்டு தேநீர் தயாரிக்கவும். ரோஜா பூ இதழ்களை ஒரு டப்பாவில் போட்டு வைத்தும் தேவையான போது உபயோகிக்கலாம்.

கோகோ டீ:

 குழந்தைகள் சாக்லேட் மணம் கொண்ட கோகோ டீயை மிக விரும்புவர். டீ தயாரிக்கும் போது தேவையான கோகோ பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு பரிமாறவும்.

இஞ்சி டீ:  அஜீரணம் வயிற்று கோளாறுகளை நீக்க வல்லது இஞ்சி டீ. இஞ்சியை தோலை சீவி விட்டு நன்கு நசுக்கி டீ கொதிக்கும் போது சேர்த்து தேநீர் தயாரிக்கவும்.

ஏலக்காய் டீ:

ஏலக்காய்களை தோலுடன் பொடி செய்து தேநீரில் சேர்த்து கொதிக்க விடவும். இனிப்புகள் செய்ய ஏலப்பொடி செய்யும் போது ஏலக்காய் தோலை எரியாமல் சேகரித்து வைத்த உபயோகப்படுத்தலாம்.

எலுமிச்சை டீ:

நீரை கொதிக்கவிட்டு தேயிலைப்போட்டு நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டவும். ஆறியதும் அதில் தேவையான எலுமிச்சை சாறு பிழியவும். தேவையான சர்க்கரை சேர்த்து சில ஐஸ்கட்டிகளைப் போட்டு பால் இல்லாமல் குடிக்கவும்.

புதினா டீ:

சில புதினா இலைகள், துளசி இலைகள், இவற்றுடன் சிறுதுண்டு இஞ்சியை நசுக்கி போட்டு 4,5 மிளகைப்பொடி செய்து போட்டு நீரில் கொதித்ததும் தேயிலை, சீனி, பால், கலந்து வடிகட்டி அருந்தவும்.. இது ஜலதோஷம் இருமல் இவற்றிற்கு உடனடி நிவாரணம் அளிக்கும்.

தேநீர் நம் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலமளிக்கும் டானிக். நரம்பு, தசை, மண்டலங்களை சுறுசுறுப்பாக்கி புத்துணர்வு தருகிறது. காபி அருந்துவதைவிட தேநீர் அருந்துவது நல்லதே! அளவோடு அருந்த வேண்டும். அளவுக்கு மீறினால் நரம்புகளையும் வயிற்றையும்  பாதிக்கும். மிக சூடாக அருந்தும் தேநீர் வயிற்றின் உட்சுவர்களை புண்ணாக்கும்.
+

பிஸ்கெட் சாப்பிடுகிறிர்களா..? - எச்சரிக்கை..!

குழந்தைகள் சாப்பிடும் முக்கிய உணவு வகைகளில் பாலுக்கு அடுத்தபடியாக பிஸ்கெட் முக்கிய இடத்தை பிடிக்கிறது. மேலும் பெரியவர்களும் சாப்பாட்டுக்கு மாற்று உணவாக பிஸ்கெட்டுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். பிஸ்கெட் சாப்பிட்டால் உடல் நலத்துக்கு நல்லது. குழந்தைகள் உயரமாக வளருவார்கள் என விளம்பரப்படுத்தப்படுகிறது.

அது உண்மை இல்லை. பிஸ்கெட்டில் உடல் நலத்துக்கான கேடுகள் மறைந்து இருப்பதாக புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘கான்சர்ட்’ என்ற நிறுவனம் சமீபத்தில் 34 பிரபல நிறுவனங்களின் பிஸ்கெட்டுகள் மற்றும் 25 நிறுவனங்கள் தயாரிக்கும் ஊறுகாய் போன்றவற்றை சேகரித்து ஆய்வு நடத்தியது. அவற்றில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் விதிகளின்படி பிஸ்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதா? இந்திய தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ள கொழுப்பு, புரோட்டீன், சர்க்கரை மற்றும் அமில அளவு சரியான அளவில் உள்ளதா? என ஆய்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு, ஆந்திரபிர தேசம், கேரளா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடந்த 7 மாதங்களாக பிஸ்கெட்டுகள் பரிசோதனை செய்யப்பட்டன.

இந்த ஆய்வு குறித்து கான்சர்ட் நிறுவனத்தின் இயக்குனர் சந்தனராஜன் கூறியதாவது:–

கிழங்குமாவு, கிரீம், உப்பு, பால் மற்றும் பேக்கரியில் இருந்து தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இவற்றில் பெரும்பாலான அளவு சர்க்கரை உள்ளது. மேலும் அவை பல மாதங்கள் கெட்டுப் போகாமல் இருக்க உடலுக்கு தீமை விளைவிக்கும் ரசாயன கலவைகள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால் பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுகளில் ரசாயன கலவை குறைவாக உள்ளது. எனவே, பிஸ்கெட்டுகள் சாப்பிடுவதன் மூலம் உடலில் சக்தி, தெம்பு ஏற்படலாம்.

மாறாக உடலில் சத்துகள் உருவாகாது. பெரும்பாலான பிஸ்கெட்டுகளில் நார்ச்சத்து, தேன், கால்சியம் போன்றவை இல்லை. ஆனால், பிஸ்கெட் உணவுக்கு மாற்றானது. சுறுசுறுப்பு கொடுக்க கூடியது. பால், தேன் கலந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்கின்றன.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகின்றனர். புகையிலை பொருட்களை பயன் படுத்துவதால் மட்டும் புற்று நோய் வராது. நாம் சாப்பிடும் உணவு பொருட்களாலும் 30 சதவீதம் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

‘‘எலுமிச்சை, மாங்காய், காய்கறி கலவை மற்றும் மீன்’’ ஊறுகாய் வகைகள் பரிசோதனை செய்யப்பட்டன. பெரும்பாலான ஊறுகாய்களில் சோடியம் அதிக அளவில் உள்ளது. பென்ஷோயிக் அமிலமும் அதிக அளவில் சேர்க்கப் பட்டுள்ளது.

இனிப்பு வகை ஊறுகாய்களில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. இது நுகர்வோருக்கு இருதய நோய்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும். அதிக உப்பு சத்து சேர்ப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்த தகவலை இந்திய நுகர்வோர் சங்க தலைவர் ராஜன் தெரிவித்துள்ளார்.
+

தேவையற்ற முடியை பிடிங்குவது நல்லதா... கெட்டதா...?



தேவையற்ற ரோமத்தை பிடுங்கி எடுப்பதற்கு உதவும் கருவி தான் டிவீசர். இதை கொண்டு முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை பிடிங்கி விடுவார்கள். பொதுவாக புருவம், கன்னம், மேல் உதடு, தாடை ஆகிய இடங்களில் உள்ள தேவையற்ற முடியை பெண்கள் இதை கொண்டு பிடுங்குவார்கள்.

இவை முடிகளை ஆழத்திலிருந்து பிடுங்கி விடும். இதை பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு கேள்வி உண்டு. இதை பயன்படுத்துவது சரியா அல்லது தவறா? நாம் ரோமங்களை நீக்குவதற்காக எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. இதற்கும் நன்மை தீமை என்று இரண்டு பக்கங்கள் உண்டு. இந்த கருத்துக்களை குறித்து நாம் இப்போது பார்ப்போம்.

ஒரு வேளை இதற்கு நீங்கள் புதிதாக இருந்தாலோ அல்லது இப்போது தான் இதை கற்றுக் கொள்ள முயற்சி செய்தாலோ இதன் நன்மை மற்றும் தீமைகள் பற்றி அறிந்துக்கொண்டு பின்னர் பயன்படுத்துங்கள். இதனால் உங்களுக்கு உள்ள சந்தேகங்களும் தீர்ந்துவிடும்.

நன்மைகள்:

 எளிய முறை: இந்த முறையில் தேவையற்ற ரோமங்களை எளிதில் நீக்க முடியும். இதை பயன்படுத்துவதற்கு நாம் கலை நிபுணராக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. தற்காலிகமாக முடியை எடுக்கும் முயற்சியில் இவைகளை பயன்படுத்தி திருப்தி அடையலாம்.

 விலை குறைவு:

டிவீசரை ஒரு முறை வாங்கினால் போதும், பார்லருக்கு சென்று புருவம் மற்றும் மேல் உதடு முடிகளை எடுக்கும் செலவு மீதமாகிறது. இதை பயன்படுத்துவதில் நீங்கள் சிறந்தவர்களாகிவிட்டால் அது இன்னும் சிறந்த கருவியாகிவிடும். உங்களுக்கு ஏற்ற நேரத்தில் இதை இலவசமாக செய்து கொள்ளலாம்.

குறைந்த வலி:

நூல் மூலம் எடுக்கும் வலி இதில் இருக்காது. ஓவ்வொரு முடியாக பிடுங்கும் போது வலி குறைவாக இருக்கும். நமது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் தேவையற்றது என்று எண்ணும் இடங்களில் உள்ள முடிகளை எளிதாக எடுத்து விட முடியும். நிபுணராக இருக்கத் தேவையில்லை: இதை நீங்கள் உங்களுக்கு செய்வதற்கு ஒரு அழகு கலை நிபுணராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நீங்கள் திரும்பத் திரும்ப செய்து பார்த்து நன்கு கற்ற பின்னர் உங்களை விட சிறந்த முறையில் இதை செய்வதற்கு வேறு எவரும் தேவைப்பட மாட்டார்கள். நாளடைவில் இது உங்களுக்கு சிறந்த கலையாகவே மாறி விடுகிறது.

தீமைகள்:

 தடியான ரோமங்கள்:

மிகத் தடியான அல்லது ஆழ்ந்த வேர் கொண்ட ரோமங்களை பிடுங்குவது நல்லதன்று. இவை உள் வளர்ந்த முடிகளை வளரச் செய்கின்றன. இதனால் வீக்கம், எரிச்சல், தழும்பு ஆகியவை ஏற்படலாம். சதையை தவறாக இழுப்பது: முடி என்று நினைத்து சதையை தவறாக இழுப்பதால் காயம் ஏற்படலாம். ஆகையால் இதை செய்யும் போது கவனத்துடன் செய்ய வேண்டும். ஆனால் திரும்பத் திரும்ப செய்து பழகும் போது இது எளிதாகும்.

நேரம்:

முடியை எடுக்க பயன்படும் மற்ற வகைகளை விட, இந்த முறை அதிக நேரத்தை விழுங்கும். முடியின் தன்மை மற்றும் எவ்வளவு முடி ஆகியவற்றைப் பொறுத்து பயன்பாட்டின் நேரம் அதிகமாகும். ஒவ்வொரு முடியாக பிடுங்குவதால் நேரம் அதிகமாகும். இது அவ்வப்போது மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டிய தற்காலிக முறை தான்.

கற்றுக் கொள்வதற்கு முன் கடினமானது:

 அதிக முடியுள்ள இடங்களில் இதை பயன்படுத்துவது கடினமாக இருக்கிறது. புதிதாக பயன்படுத்துபவர்கள் இக்கலையை நன்கு கற்ற பிறகு மட்டுமே நிறைய முடியை நீக்க முயற்சிக்கலாம். ஆனால் அதற்காக சற்றே கடினமாக பயிற்சி செய்ய வேண்டியிருக்கும்.

+

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்...!



1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய
தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா
அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்.

மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு

மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும். தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.
என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது.
இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில்
படைத்துள்ளது.


ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே
தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!
+

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் அல்லி மலர்...!



நீரில் பூக்கும் அல்லிச்செடிகளை விட அதன் மலர்களுக்குத்தான் மருத்துவ குணம் அதிகம். இதில் வெள்ளை அல்லி, சிவப்பு அல்லி ஆகிய இரண்டுமே பயன் தரக்கூடியது தான். அல்லி பூவை சாறெடுத்து சிறிதளவு செந்தூரம் கலந்து இருபது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்னைகள் தீர்ந்து விடும்.

வெள்ளை அல்லி பூவையும், ஆவாரம் பூவையும் சமஅளவில் எடுத்து போதிய அளவு சர்க்கரை சேர்த்து நீரில் காய்ச்ச வேண்டும். கூழ்போல கொதித்த பின் இறக்கி ஆறவைத்து காலையிலும், மாலையிலும் பசுவின் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தொடர்பான நோய்கள் குணமாகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து 40 நாட்கள் இதை சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும்.

கண் சிவப்பு, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்ற கண் சம்பந்தமான பிரச்னைகளுக்கு அல்லி இலையை கண்களின் மீது தினமும் ஒரு மணி நேரம் வைத்து வந்தால் நோய் குணமாகும்.

அல்லி இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து பால் மற்றும் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவை தடுக்கலாம். கோடை காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு சூடு கட்டி வரும். அல்லி இலையையும், அவுரி இலையையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்து குணமடையும்.

அவுரி இலைக்கு பதில் ஆவாரை கொழுந்தை சேர்த்து அரைத்து பூச அக்கி கொப்பளம் வராது. சிவப்பு அல்லி இதழ்களுடன், செம்பருத்தி பூ இதழையும் சேர்த்து காய்ச்சி கசாயம் செய்து குடித்து வந்தால் இதயம் பலமடையும். இதய பட படப்பு வராது. உடலில் ரத்தம் பெருகும்.

 அல்லி விதையுடன் ஆவாரம் விதையை சேர்த்து பொடியாக்கி சிறிதளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை நோய் குணமாகும். ஆண்மை பெருகும். அல்லி விதையை சேகரித்து தூளாக்கி பாலுடன் கலந்து குடித்து வந்தால் தாது விருத்தி உண்டாகும். கல்லீரல் மற்றும் மண்ணீரல் பலமடையும்.
+

பாதாம் பருப்பை பயப்படமால் சாப்பிடுங்க...!



பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும்.

ல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!

இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். அதெப்படி? பாதிக்கும் மேல் கொழுப்பு உள்ளது என்கிறார்கள்… இதயத்துக்கும் நல்லது என்கிறார்கள்? என்பதுதானே உங்கள் சந்தேகம்? ஏற்கனவே சொன்ன மாதிரி அதிலுள்ள நல்ல கொழுப்புதான் காரணம்.

எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.

இன்னும் சொல்லப் போனால், பாதாம் எடுக்காதவர்களைவிட, பாதாம் எடுப்பவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது.

சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடைக் குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கிறது பாதாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினமுமேகூட 5 பாதாம் எடுத்துக் கொள்ளலாம். அதை ஊற வைத்தோ, அப்படியேவோ சாப்பிடலாம்.

பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது.

வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இளவயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும்.

நினைவுக்கூர்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால்தான், படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கச் சொல்கிறோம். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

வேறு எந்த தானியங்களிலும் இல்லாத அளவுக்கு பாதாமில் அதிகளவு பாஸ்பரஸ் சத்து உள்ளது. அது பல், முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது.

 அழகை மேம்படுத்துவதிலும் பாதாமுக்கு முக்கிய இடமுண்டு. பாதாமில் உள்ள வைட்ட மின் இ சத்தானது, சருமத்துக்கும் கூந்தலுக்கும் மிக நல்லது. சரும நிறத்தை மேம்படுத்தும்.

 சருமத்தைப் பளபளப்பாக வைக்கும். ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். வயோதிகத்தைத் தள்ளிப்போடும். கண்களுக்குக் கீழே கருவளையங்களை விரட்டும்.

பாதாமில் உள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்பானது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, கூந்தலுக்கு போஷாக்கு தரும். பாதாம் ஆயிலை வெதுவெதுப்பாக சூடாக்கி, இரவில் தலையில் தடவிக் கொண்டு, மசாஜ் செய்துவிட்டு, காலையில் தலையை அலசி விடவும். சமையலுக்குக் கூட பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம். அதை மற்ற எண்ணெய்களைப் போல கொதிக்க வைக்கவோ, தாளிக்கவோ, பொரிக்கவோ பயன்படுத்த முடியாது. ஆலிவ் ஆயிலை போல சாலட்டுக்கு ஊற்ற மட்டுமே பயன்படுத்தலாம்.
+

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் உணவுகள்...!



உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.

இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.

இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான். இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர்.


ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக் குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.


அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும். இப்போது அப்படி, உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து, ஆரோக்கியமாக வாழுங்கள்.
பார்லி : தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.
கத்திரிக்காய் : கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.

மீன் :

மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.

ஆப்பிள் :

ஆப்பிள்களில் வைட்டமின் `சி’ மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.

நட்ஸ் :

நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

டீ :

அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

வெங்காயம் :

வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஓட்ஸ் : ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.

முழு தானியங்கள் :

முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

சிட்ரஸ் பழங்கள் :

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

பசலைக் கீரை :

 பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை.

ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.


சோயா பொருட்கள் : சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது.

பூண்டு :

பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.

வெண்டைக்காய் :

கத்திரிக்காயைப் போன்றே வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.


ரெட் ஒயின் :

ரெட் ஒயினானது அதிகப்படியாக நார்ச்சத்து நிறைந்த திராட்சைகளால் செய்யப்படுவதால், இதனை உட்கொண்டால், இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதனால் தான் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.


சாக்லெட் :

சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.

பீன்ஸ் :

அனைத்து காய்கறிகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லா விட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.

மிளகாய் :

மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. சொல்லப்போனால், மிளகாயும் பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் மிளகாயிலும் அல்லியம் என்னும் பொருள் உள்ளது.

மார்கரைன் :

 இது வெண்ணைக்கு நல்ல மாற்றாக இருந்தாலும், இதில் ஸ்டெரால்ஸ் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது.

அவகேடோ :

இதுவரை அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான் நினைத் திருக்கிறோம்.

ஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.
+

தேங்காய் நல்லதா..? கெட்டதா..? - தெரிஞ்சிக்கனுமா இதைப்படிங்க...!



தேங்காய் நல்லதா, கெட்டதா என்பதில் பலருக்கும் பலவிதக் கருத்துகளும் கேள்விகளும் உண்டு. கேரளா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கும்  இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தேங்காய் இல்லாமல் சமையல் ருசிப்பதே இல்லை. சாம்பாரோ, ரசமோ, கூட்டோ, பொரியலோ, வேறு  எந்த உணவோ... அதில் பிரதானமாக இடம் பெறுவது தேங்காய். அவர்களுடன் ஒப்பிடும் போது, நம்மூரில் தேங்காயின் உபயோகம் சற்று  குறைவுதான். அதிக தேங்காய் ஆபத்தானது என்று அதைத் தவிர்ப்பவர்கள் ஒரு பக்கம்...

‘கேரளாலயும் இலங்கைலயும் தேங்காய் சாப்பிடறவங்க எல்லாம் வியாதிக்காரங்களாகவா இருக்காங்க? அதெல்லாம் ஒண்ணும் செய்யாது’ என்று  அதைச் சேர்த்துக் கொள்கிறவர்கள் இன்னொரு பக்கம்... உண்மையில் தேங்காய் நல்லதா? கெட்டதா?

தேங்காயில் என்ன இருக்கிறது?

(100 கிராமில்)    புரதம்  (கிராம்)    கொழுப்பு (கிராம்)    ஆற்றல் (கிலோ கலோரி)

வழுக்கை                         0.9                           1.4                                41
கொப்பரை                         7.1                           64.4                              672
தேங்காய்                         20.9                           13.3                              360
டெசிக்கேட்டட் தேங்காய்
(பதப்படுத்தப்பட்டது )        6.3                           57.4                               618
இளநீர்                        0.14                           0.13                                19
தேங்காய்ப் பால்        0.8                            7.2                                76

தேங்காயை சமையலில் உபயோகிப்பதில் தவறே இல்லை. அதை எப்படி உபயோகிக்கிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது. தினசரி 30 முதல்  40 கிராம் தேங்காயை உபயோகிக்கலாம். அதை அப்படியே பச்சையாக சேர்த்துக் கொள்கிற வரை பிரச்னையில்லை. துருவி, பால் எடுத்துக் கொதிக்க  வைக்கிற போதுதான் அதில் கொழுப்பு அதிகரிக்கிறது. அதே மாதிரிதான் கொப்பரையும். சில வகை உணவுகள் கொப்பரை சேர்ப்பதால் கூடுதலாக  ருசிப்பதுண்டு.

அந்தக் கொப்பரைதான் கெடுதலே. தேங்காய் முற்றி கொப்பரையாகும் போது, அதிலுள்ள நல்ல தன்மைகள் மாறி, கொழுப்பு கூடுகிறது. கூடிய வரை  கொப்பரையை சமையலில் சேர்க்காமலிருப்பதே நலம். மற்றபடி சமைக்காத தேங்காயானது எல்லோருக்குமே நல்லதுதான். கொலஸ்ட்ரால்  அதிகமுள்ளவர்கள் மட்டும் தேங்காயைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. தேங்காயை பால் எடுத்து உபயோகிக்கிற போது, அதிலுள்ள நார்ச்சத்தை எடுத்து  விடுகிறோம்.

வெறும் கொழுப்பு மட்டுமே மிஞ்சியிருக்கும். தேங்காய்க்கு வயிற்றுப்புண்களை ஆற்றும் சக்தி உண்டு. அதனால்தான் வாயில் புண் வந்தால்கூட,  தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடச் சொல்வார்கள். அதன் பால் புண்ணில் பட்டால், சீக்கிரமே ஆறும். அல்சர் நோயாளிகளுக்கும் தேங்காய் பால்  சேர்த்த உணவுகளை அதிகம் பரிந்துரைப்பதன் பின்னணியும் இதுதான்.

தேங்காய் ஏன் கூடாது?

சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் எனப்படுகிற கெட்ட கொழுப்பு அதில் அதிகம் என்பதே காரணம். கொப்பரை மற்றும் சமைத்த தேங்காயில் இது அதிகம்.  மற்றபடி குழந்தைகளுக்கு புரதம் மற்றும் கொழுப்பின் அளவை அதிகரிக்க வேண்டும் என்கிற நிலையில், தேங்காய் சேர்த்த பர்பி, தேங்காயும்  வெல்லமும் சேர்த்த இனிப்புகளும் அதிகம் தரலாம்.

எடை குறைவான குழந்தைகளுக்கு கொப்பரையில் உள்ள புரதம், கொழுப்பு மற்றும் கலோரி உதவும். அவர்களுக்கு கொப்பரையில் செய்த பொடி,  கொப்பரை மிக்சர் போன்றவற்றை அடிக்கடி கொடுக்கலாம். கொப்பரைத் துருவல், காய்ந்த மிளகாய், உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம்  எல்லாவற்றையும் வெறும் கடாயில் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடிக்கவும். எடை குறைவான குழந்தைகளுக்கு சூடான சாதத்தில் இந்தப் பொடி  சேர்த்துப் பிசைந்து கொடுத்தால், உடல் பூசின வாகு பெறும்.

தேங்காயே சேர்க்கக் கூடாது என்பவர்களுக்குக்கூட மருத்துவர்களும் உணவு ஆலோசகர்களும் இளநீர் எடுத்துக் கொள்ளச் சொல்வதுண்டு. இளநீர் அத்தனை இதமான ஒரு உணவு. வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, உடலிலுள்ள நீர் சத்தெல்லாம் வறண்டு, மருத்துவமனையில் சேர்கிற அளவுக்கு  மோசமான உடல்நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு இளநீர் கொடுத்தால் போதும்... இன்ஸ்டன்ட் எனர்ஜி வந்து ஒட்டிக் கொள்ளும்.

இளநீரில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவு வேறெந்த உணவிலும் இல்லாத அளவுக்கு அபரிமிதமானது. இதய நோயாளிகளுக்கு இளநீர்  பரிந்துரைக்கப்படும். அவர்களுக்குத் தேவையான சுத்தமான பொட்டாசியம் இளநீரில் மட்டும்தான் கிடைக்கும். அதுவே அவர்களுக்கு சிறுநீரகக்  கோளாறு இருந்தால், இளநீர் கொடுக்கக் கூடாது. அப்படி மீறிக் கொடுத்தால், அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

காலையில் இளநீர்?

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் நல்லது என்கிற தவறான அபிப்ராயம் நிறைய பேருக்கு உண்டு. அதைத் தவிர்த்து,  காலை உணவுக்கும், மதிய உணவுக்குமான இடைவெளியில் இளநீர் குடிப்பதே சிறந்தது. வெறும் வயிற்றில் குடிப்பதால், அதில் உள்ள சிறிதளவு  கார்போஹைட்ரேட்கூட, நமது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தலாம். இளநீர் குடிப்பதால் உடல் சூடு தணியும். அதிலுள்ள  கனிமங்கள் உடலுக்கு நல்லது.

விளையாட்டு வீரர்கள், தீவிர உடற்பயிற்சியாளர்கள் போன்றோர், விளையாடி முடித்ததும், பயிற்சி முடித்ததும் உடனே இளநீர் குடித்தால்,  இன்ஸ்டன்ட்டாக சக்தியைப் பெறுவார்கள். டயட் செய்கிறவர்கள், எப்போதும் களைப்பாகவே உணர்கிறவர்களுக்கும் இளநீர் அருமையான உணவு. தினம்  ஒரு இளநீர் குடிக்கிறவர்கள் என்றும் இளமையாகவே காட்சியளிப்பார்கள். வெளியில் செல்கிற போது, தாகத்துக்கு ஏரியேட்டட் குளிர்பானங்களைக்  குடிப்பதைத் தவிர்த்து, இளநீர் குடிக்கிற பழக்கத்துக்கு மாறலாம்.

தேங்காய் ஸ்பெஷல் ரெசிபி

உருளைக்கிழங்கு ரெய்தா

என்னென்ன தேவை?

வேகவைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு - 100 கிராம், பச்சை மிளகாய் -2, வெங்காயம் -1, தேங்காய்த் துருவல் - 50 கிராம், தயிர் - 100 மி.லி.,  கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிப்பதற்கு, எண்ணெய் - 1 டீஸ்பூன், கொழுப்பு நீக்கிய தயிர் - 100 மி.லி., உப்பு - தேவைக்கேற்ப,
கொத்தமல்லி - அலங்கரிக்க.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய  வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதை மசித்து  வைத்துள்ள உருளைக்கிழங்கில் சேர்த்து, தயிரும் உப்பும் சேர்த்துக் கலந்து,  கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

இளநீர் காக்டெயில்

என்னென்ன தேவை?
வழுக்கை இல்லாத இளநீர் - 1, எலுமிச்சை - அரை மூடி, புதினா - 10 கிராம், இஞ்சி - 5 கிராம், உப்பு - 1 சிட்டிகை, சோடா - 100 மி.லி.

எப்படிச் செய்வது?

புதினா, இஞ்சி, இளநீர், உப்பு எல்லாவற்றையும் மிக்சியில் சேர்த்து ஒன்றாக அடித்து, வடிகட்டவும். அத்துடன் எலுமிச்சைச் சாறும், குளிர்ந்த சோடாவும்  சேர்த்துப் பரிமாறவும்.

நியூட்ரி பால்ஸ்

என்னென்ன தேவை?

உடைத்த முந்திரி, உடைத்த பாதாம், பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம், அத்திப்பழம், ஆப்ரிகாட் (உலர்ந்த, பதப்படுத்தப்பட்ட பேரிக்காய். பெரிய  கடைகளில் கிடைக்கும்)  கலவை - 1 கப், தேன் - 1 டேபிள்ஸ்பூன், பதப்படுத்தப்பட்ட உலர்ந்த தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

முந்திரி முதல் ஆப்ரிகாட் வரை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். தேன் சேர்த்து சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிக்கவும். தேங்காய்த்  துருவலில் புரட்டி, ஃப்ரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும்.
+

கருவளையம் போக்கும் கைமருந்து உங்களுக்கு தெரியுமா..?

கண்களில் உள்ள மேக்கப்பை, அது சாதாரண மையாக இருந்தாலுமே, நீக்காமல் தூங்கச் செல்லக் கூடாது. மேக்கப் ரிமூவர் வைத்து, முறையாக  அகற்ற வேண்டும்.

அகற்றாமல் விட்டால், கண்களுக்கடியில் கருவளையங்கள் உருவாகலாம். இரவில் கண்களுக்கான நைட் கிரீம் தடவலாம்.

அது  கண்களின் களைப்பை நீக்கும். கண்களுக்கடியிலான சுருக்கங்கள், கருவளையங்கள், கோடுகளையும் நீக்கும்.

காலையிலும் இரவிலும் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்துக் கொண்டு 10 நிமிடங்கள் ஓய்வெடுத்தால், கண்களுக்கடியில்  வீக்கம் வடியும்.

கருமை மறையும். கருவளையங்கள் அதிகமாக இருந்தால், அதற்கான முறையான சிகிச்சை அவசியம். பார்லர்களில் அதற்கென்றே  பிரத்யேக மசாஜ் செய்யப்படுகிறது.

தொடர்ந்து செய்து கொண்டால், முற்றிலும் மறையாவிட்டாலும், ஓரளவு மாற்றம் தெரியும். சிலருக்கு ஸ்ட்ரெஸ்சின்  காரணமாக கருவளையங்கள் வரும்.

பன்னீரில் நனைத்துப் பிழிந்த பஞ்சை கண்களின் மேல் வைத்து எடுக்கலாம்.

புருவங்களின் மேல் விளக்கெண்ணெய் தடவி வந்தால், அவை  அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.

கண்களின் அழகு எடுப்பாகத் தெரிய வேண்டுமென்றால் புருவங்களை ஷேப் செய்ய வேண்டியது மிக  முக்கியம். 
+

நாட்டு மருந்துகளும் நோய் நிவாரணமும்... - உங்களுக்காக...!


அகத்தி – வலி, கபம், சோகை, குன்மம்

அதிமதுரம்- பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி

அரளி - அரிப்பு, கண் நோய், கிருமி

அருகம்புல் - கபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய்

ஆடாதோடை - இரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி

ஆவாரை - நீரிழிவு, ரத்த பித்தம்

இஞ்சி - அஜீரணம், காய்ச்சல், இருமல், வாந்தி, வயிறு உப்புசம்

எலுமிச்சை - பிரட்டல், வாந்தி, நாவறட்சி, ருசியின்மை, கிருமி நோய்

ஓமம் - கண்நோய், கபம், விக்கல்

கடுக்காய் - இருமல், நீரழிவு, மூலம், பெருவயிறு, அக்கி, விஷக் காய்ச்சல்,

இதய வலி, காமாலை, நீர்க்கடுப்பு

கண்டங்கத்திரி - இருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாட்பட்ட சளி

கரிசலாங்கண்ணி - பகம், வாதம், கிருமி நோய், இருமல், கண்நோய்,

தலைவலி

கருவேப்பிலை - இரத்த பித்தம்

கருவேலம் - பல்வலி, இரத்த தோஷம், கபம், அரிப்பு, கிருமி நோய், விரணம்

கீழாநெல்லி - காமாலை, பித்தம், இருமல்

குங்குலியம் – பாண்டு நோய், காதுவலி

கொடிவேலி - கிரஹணி, வீக்கம்

கொத்தமல்லி - காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு

சதகுப்பை - இருமல், யோனி நோய்கள்

சீரகம் - வயிறு உப்புசம், காய்ச்சல்,வாந்தி

தும்பை - நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக் கல், நாவறட்சி, இரத்த தோஷம்.

திப்பிலி - இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை

தும்பை - கபம், அஜீரணம், வீக்கம்

நன்னாரி - ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்

நாயுருவி - கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி

நாவல் - பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்

நிலவாரை- கபம், பித்தம், நீரழிவு

பூசணி - புத்தம், ரத்த தோஷம், மனநோய்

பூண்டு - இதய நோய், இருமல்

பூவரசு - நஞ்சு, நீரழிவு, விரணம்

பெருங்காயம் - வயிற்றுவலி, உப்புசம்

பேரீச்சை - கஷயம், வாதம், வாந்தி, காய்ச்சல், நாவறட்சி

மணத்தக்காளி - இருமல், ரத்த தோஷம், அஜீரணம், பித்தம்

மிளகு - வயிற்று உப்புசம், பல்வலி

முள்ளங்கி – காய்ச்சல், இழுப்பு , கண் மூக்கு தொண்டை நோய்கள்

வசம்பு - மலபந்தம், வயிறுஉப்புசம், கைகால் வலி, நீர்பெருக்கு, கிருமி நோய்

வல்லாரை – சோகை, நீரழிவு, வீக்கம்

வாகை - வீக்கம், அக்கி, இருமல்

வால்மிளகு - வாய்நாற்றம், இதய நோய், பார்வைக்குறைவு

வில்வம் - வாதம், கபம்

விளாமிச்சம் வேர் – நாவறட்சி, எரிச்சல்

வெற்றிலை - கபம், வாய்நாற்றம், சோர்வு

ஜாதிக்காய் - சுவையின்மை, இருமல்

+

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால்...?


சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது

+

பாசிப்பயறின் மருத்துவக் குணங்கள் உங்களுக்கு தெரியுமா..?

பாசிப்பயறு சத்தான பயறு வகைகளில் ஒன்றாகும். பண்டைய காலம் முதலே இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்த இந்த வகை பயறுகள், பின் தெற்கு சீனா, இந்தோ சீனா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைவிக்கப்பட்டது. இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது: கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.

சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

காய்ச்சல் குணமாகும்:

சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

நினைவுத்திறன் கூடும்:

 மணத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அழகுசாதனப் பொருள்:

குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
+

ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்...!


பெரும்பாலான மக்கள் தமது சருமம், தலைமுடி மற்றும் நகங்களைப் பராமரிப்பது குறித்து அறிந்திருப்பார்கள். ஆனால், அழகுக் கலையுலகத்தைப் பொறுத்தவரையில், அறிந்திருப்பது என்பது, பொதுவான அறிவுரையாகவோ அல்லது, தவறானதொரு அறிவுரையைப் பின்பற்றுதலாகவோ தான் இருக்கும். அதாவது, நமக்கு என்ன செய்வது என்று தெரிந்திருக்கும். ஆனால் எப்படி செய்வது என்று தான் தெரிந்திருக்காது அல்லது எப்படி முறையாக செய்வது என்று தெரிந்திருக்காது.

நீங்கள் இப்போது என்ன செய்வது என்றும், அதனை எப்படி முறையாகச் செய்வது என்றும் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். மேலும், அழகு பற்றிய ரகசியங்களையும், அழகுக்கலை பற்றிய உண்மைகளையும் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். சருமத்தில் எரிச்சல் ஏற்படுத்தும் பொருள்களிலிருந்து, கைக்கால் நகங்களைப் பராமரிப்பது வரை மற்றும் தலைமுடி பராமரிப்பு குறித்து ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய அழகு ரகசியங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சரும க்ளின்சர்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம்


சருமத்தை சுத்தப்படுத்தப் பயன்படுத்தும் க்ளின்சர்கள் ஆரோக்கியமான சருமத்தில் கூட எரிச்சலை ஏற்படுத்தலாம். சருமம் மென்மையானதா அல்லது பிரச்சினை ஏற்படுத்தக்கூடியதா என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். பயன்படுத்தும் க்ளின்சர்கள், சருமத்திற்கு எவ்வித எரிச்சலையோ, இறுக்கத்தையோ தராமல், அழுக்கையும், மிகையான எண்ணெய் பசையையும் கரைத்து, சுத்தம் செய்யுமா என்று மட்டும் பாருங்கள்.

எக்ஸ்ஃபோலியஷனை தவிர்க்க கூடாது


சருமத்தின் மேற்புறத்தில் உள்ள படலத்தை உரித்து சுத்தம் செய்யும் எக்ஸ்ஃபோலியஷன் (Exfoliation) என்னும் முறையினால், சருமப் பராமரிப்புக் க்ரீம்கள் சருமத்தினுள் ஊடுருவி, தனது வேலையை நன்கு செய்ய ஏதுவாக இருக்கும். மேலும் சருமம் பளிச்சென்று பொலிவுடன் திகழும். சருமம் பளபளப்புடன் திகழ எக்ஸ்ஃபோலியஷன் மிக அவசியம். முகத்தில் பருக்களோ, சிவந்த தடிப்புகளோ உள்ளவர்கள், தோல் மருத்துவரின் அனுமதியுடன் சாலிசிலிக் அமிலம் கொண்டு எக்ஸ்ஃபோலியஷன் செய்யவும்.

ரெடினாய்டுகளைப் பயன்படுத்தவும்
ரெடினாய்டுகள் அல்லது ரெடினால்கள், வைட்டமின் ஏ சார்ந்த வேதிப்பொருள்கள் ஆகியவை பருக்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுபவை. ஃபேஷியல் செய்வதற்கு மிகவும் உகந்தவை. இவை, சருமத்தின் மேல்பகுதி, உட்பகுதியை தடிமனாக்கி, இறந்து போன சரும செல்களை நீக்கி, கெராட்டினோசைட்டுகளின் அளவைப் பெருக்கி, மூட்டுக்கள், தசைகள், மற்றும் சருமம் ஆகியவற்றுக்கிடையே உயவுப்பொருளாக பயன்படும், உடலில் இயற்கையாகவே காணப்படும் ஒரு கார்போஹைட்ரேட்டான, கொலாஜென் மற்றும் ஹயலுரானிக் அமிலம் ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்க உதவுகின்றன. ஆனால் ரெடினாய்டுகள் நமது சருமத்தினை மிகவும் மென்மையாக்கி, சூரியவெளிச்சம் பட்டாலே மிகவும் கூச்சப்படச் செய்யும். ஆகவே இதனை இரவில் மட்டும் பயன்படுத்தி அதிக பலனைப் பெறுங்கள்.

சர்க்கரையைப் பயன்படுத்தவும்


ஆரோக்கியமான சருமத்தினைப் பெறவும் பேணவும், முறையாக ஃபேஷியல் செய்து வருவது அவசியம். வீட்டிலேயே ஃபேஷியல் செய்து, தரமான சருமப் பராமரிப்பு நிலையத்தில் பெறத்தக்க காஸ்ட்லியான ஃபேஷியலைப் பெறலாம். இதற்கு எண்ணற்ற வீட்டுப் பராமரிப்பு முறைகள் உள்ளன. முதலில் இயற்கையின் சருமப் பராமரிப்பு கொடையான சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை சருமத்தின் மீது சர்க்கரையினால் வட்டமிட்டு தேய்த்து, (ஸ்க்ரப் செய்து) அதன்பின் இளஞ்சூடான வெந்நீரில் சருமத்தைக் கழுவி, மென்மையான துணியைக் கொண்டு ஒற்றியெடுக்கவும். இதனால் சருமம் பளபளக்கும் அதிசயத்தைக் காணலாம். அதே போல், ஒரு பானையில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு வெளிவரும் நீராவியில், சருமம் சில நிமிடங்கள் படும் வண்ணம் காட்டவும். (நீராவிக்குளியல்)

உடலை ஸ்கரப் செய்யவும்

முகத்தை அடிக்கடி ஸ்கரப் செய்யும் நாம், நமது உடலை ஸ்க்ரப் செய்வது இல்லை. வறண்டு போன பாதங்கள், கால்களிலும், முழங்கைகளிலும் உள்ள வெடித்து உலர்ந்த சருமம், ஆகியவற்றுக்கு ஸ்க்ரப் தேவை. சிறிது தேங்காய் எண்ணெய், கல் உப்பு அல்லது சர்க்கரை மற்றும் துளசி இலைகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசை போல அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பசையை சருமத்தின் மீது நன்கு தேய்க்கவும். ஸ்க்ரப் செய்யவும். பின்னர் நீராவிக்குளியல் மேற்கொள்ளவும். அடிக்கடி இதனை செய்வது உறுதியான பலனைத் தரும்.

நகத்தை அடிக்கடி ஈரப்படுத்திக் கொள்ளவும்


கால் நகங்களையும், கை நகங்களையும் அடிக்கடி ஈரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஷொவர் ஜெல்லை வெதுவெதுப்பான தண்ணீரில் கரைத்து, அதில் கைகளை ஐந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனால் கை நகங்கள் புதிது போலாகும். (மெனிக்யூர் என்றால் கை விரல் மற்றும் நகங்களை அழகு செய்வது என்று பொருள்) மேலும் பெட்ரோலியம் ஜெல்லை பாதங்களில் தடவி அதன்மேல் பிளாஸ்டிக் காகிதம் கொண்டு மூடி வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்துப் பார்த்தால், பாதங்கள் குழந்தையின் பிஞ்சுப் பாதங்கள் போல் ஆகியிருக்கும். (பெடிக்யூர் என்றால் கால் விரல் மற்றும் நகங்களை அழகு செய்வது என்று பொருள்)

தலைமுடியின் ஈரப்பதத்தைப் பேணுங்கள்


சிக்குப் படிந்த அல்லது வறண்ட கூந்தலை ஈரப்பதத்துடன் பேணுவதற்கு, கண்டிஷனர் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. என்னதான் நிலைநிறுத்தும் கண்டிஷனரைப் பயன்படுத்தினாலும், ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தினாலும், அதனை சரியான முறையில் பயன்படுத்துகிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளவும். கண்டிஷனரையோ, ஆலிவ் எண்ணெயையோ தலைமுடியின் நுனியிலிருந்து தடவத் தொடங்க வேண்டும். அதுவும் தலைமுடியின் நடுப்பகுதி வரை தடவ வேண்டும். மயிர்க் கால்களில் தடவக் கூடாது. ஏனெனில் ஸ்கால்ப் ஆனது மயிர்க்கால்களுக்குப் போதுமான எண்ணெயை இயற்கையாகவே உற்பத்தி செய்து கொள்கிறது. ஆகவே இந்த நிலையில் கண்டிஷனர் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவினால், அது ஸ்கால்பின் பணியைச் செய்யவிடாமல் தடுக்கலாம்.

உண்மையிலேயே பொடுகினைத் தடுக்க முயற்சிக்கவும்


பொடுகினைத் தடுக்கும், பொடுகிலிருந்து முற்றிலும் விடுதலை அளிக்கும் என்று விளம்பரப்படுத்தப்படும் ஷாம்புக்கள் அனைத்தும் உண்மையிலேயே பொடுகிலிருந்து விடுதலை அளிப்பவை அல்ல. பெரும்பாலான மக்கள் பொடுகு என்பது வறண்ட ஸ்கால்ப்பினால் வருவது என்று நினைக்கிறார்கள். தலைமுடியை நீரில் சரியாக அலசாமல் இருப்பதினாலோ, தவறான ஷாம்புக்களைப் பயன்படுத்தியதன் காரணமாக தலையில் படிவுகள் படிந்ததினாலோ, ஸ்கால்ப் வறண்டு போகலாம். இம்மாதிரியான நிலைமைக்கு பொடுகை போக்கும் ஷாம்புக்கள் பலன் தராது. பொடுகுத் தொல்லை நீங்கவில்லை என்றால், தலைமுடியை இன்னும் அதிக நேரம் நீரில் நன்றாக அலசவும். மேலும், பயன்படுத்தும் ஷாம்புவை நிறுத்திவிட்டு, தரம் உயர்ந்த ஷாம்புவைப் பயன்படுத்திப் பார்க்கவும்


 குட்டைக் கூந்தல் வயதை அதிகப்படுத்திக் காட்டும்


குட்டைக் கூந்தல் வைத்துக் கொள்வது ஃபேஷனாக இருந்தாலும், குட்டைக் கூந்தல் வயதை அதிகப்படுத்திக் காட்டும். ஆகவே இளமையுடன் தோற்றமளிக்க விரும்பினால் குட்டையான கூந்தல் தான் முதல் எதிரி ஆகும். குட்டைக் கூந்தல் இளமையான தோற்றத்தைத் தராது. எனவே கூந்தலை நீளமாகப் பேணுங்கள். காதுக்கு அருகில் சற்று அதிகமாக முடி இருந்தால், அது கழுத்தின் மென்மைத் தன்மையைக் கூட்டி, இளமை எழிலையும் கூட்டிக் காட்டும். .
+