Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

03/10/2014

ரைஸ் ஸ்டிக்ஸ் உப்புமா - சமைக்கலாம் வாங்க..!

தேவையான பொருட்கள் : 

ரைஸ் ஸ்டிக்ஸ் (Rice sticks) - ஒரு bundle ல் பாதி
வெங்காயம் - 1
பீன்ஸ்-10,
கேரட்-1
சிறியது பச்சை மிளகாய் -1
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை சாறு - சிறிது
கொத்துமல்லி இலை - சிறிதளவு


தாளிக்க: 

எண்ணெய்
கடுகு
உளுந்தம் பருப்பு
கடலைப் பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை: 

• ரைஸ் ஸ்டிக்ஸ் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து ஒரு 20 நிமிடம் வைக்கவும். அப்போதுதான் ஊறி சாஃப்டாக இருக்கும். பிறகு நீரை வடித்துவிட்டு ஒரு இட்லிப் பாத்திரத்தில் வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து உதிர்த்துவிடவும்.

• வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி கேரட்,பீன்ஸ் இவற்றை மிக மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும்.

• ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

• அடுத்து கேரட்,பீன்ஸ் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சிறிது உப்பு சேர்த்து, காய் வேக சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்.

• காய் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள ரைஸ் ஸ்டிக்ஸ் போட்டு கிளறிவிடவும். எல்லாம் கலந்து  ரைஸ் ஸ்டிக்ஸ் நன்றாக சூடேறியதும் எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி தூவி இறக்கவும்.
+

01/10/2014

மறந்து போன மருத்துவ உணவுகள்....?




                                               பிரண்டைச் சத்துமாவு

 தேவையானவை:

நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ,

புளித்த மோர் – ஒரு லிட்டர்,

கோதுமை – ஒரு கிலோ,

கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம்.


செய்முறை:


பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும்.

பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும்.

இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.


மருத்துவப் பயன்:


உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும்.
+

25/09/2014

கரண்டி ஆம்லெட் - எப்படிச் செய்வது..?


விருதுநகரின் மற்றுமொரு சிறப்பு கரண்டி ஆம்லெட். வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் முட்டைப் பிரியர்களுக்கு இது நல்ல மாற்று. செய்வது சுலபம், சுவையோ அதிகம்.

என்னென்ன தேவை..?

முட்டை-1

சின்ன வெங்காயம் - கைப்பிடி

கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத் தூள் - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது..?

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் ஒரு குழிக் கரண்டியில் சிறிதளவு எண்ணெய் தடவி அதில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.

பிறகு மிளகுத் தூள் தூவி, கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும். சிறிது நேரத்தில் திருப்பிப் போட்டு எடுக்கவும். ஓட்டல்களில் ஒவ்வொருவருக்கும் இதுபோன்று செய்துகொடுக்க நேரமாகும் என்பதால், தற்போது தோசைக் கல்லிலேயே குழிகள் அமைக்கப்பட்டு அதிலேயே கரண்டி ஆம்லெட் சுடச்சுடத் தயார் செய்யப்படுகிறது.
+

25/08/2014

டீ - யில் இத்தனை வகையா...? டீ பிரியர்களே உங்களுக்காக...!



சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் சுறுசுறுப்பும், புத்துணர்வும், உற்சாகமும் அளிக்கவல்ல ஒரு சுவையான பானம் தேநீர். சுவையான தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். ஒரு கப் தேநீர் தயாரிக்க 1/2 கப் நீரில் 1/2பால் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அருந்தவும். சில வித்தியாசமான சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளை பார்ப்போம்.

மசாலா டீ:

ஏலக்காய் 6, கிராம்பு-6, சோம்பு 1 டீஸ்பூன், தனியா 1/2 ஸ்பூன் ஜாதிக்காய் சிறு துண்டு சுக்கு சிறு துண்டு, பட்டை சிறிது இவற்றை நைஸாக பொடி செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்தும் இந்த பொடியையும் தேயிலையுடன் சேர்த்துப் போட்டு கொதித்ததும் சீனி, பால், சேர்த்து வடிகட்டி அருந்தவும். இது குளிர்காலத்திற்கு சூடு கொடுக்கும் அருமையான தேநீர்.

ரோஸ் டீ:

தேநீர் கொதிக்கும் போது புத்தம் புது ரோஜா இதழ்கள் சிலவற்றை போட்டு தேநீர் தயாரிக்கவும். ரோஜா பூ இதழ்களை ஒரு டப்பாவில் போட்டு வைத்தும் தேவையான போது உபயோகிக்கலாம்.

கோகோ டீ:

 குழந்தைகள் சாக்லேட் மணம் கொண்ட கோகோ டீயை மிக விரும்புவர். டீ தயாரிக்கும் போது தேவையான கோகோ பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு பரிமாறவும்.

இஞ்சி டீ:  அஜீரணம் வயிற்று கோளாறுகளை நீக்க வல்லது இஞ்சி டீ. இஞ்சியை தோலை சீவி விட்டு நன்கு நசுக்கி டீ கொதிக்கும் போது சேர்த்து தேநீர் தயாரிக்கவும்.

ஏலக்காய் டீ:

ஏலக்காய்களை தோலுடன் பொடி செய்து தேநீரில் சேர்த்து கொதிக்க விடவும். இனிப்புகள் செய்ய ஏலப்பொடி செய்யும் போது ஏலக்காய் தோலை எரியாமல் சேகரித்து வைத்த உபயோகப்படுத்தலாம்.

எலுமிச்சை டீ:

நீரை கொதிக்கவிட்டு தேயிலைப்போட்டு நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டவும். ஆறியதும் அதில் தேவையான எலுமிச்சை சாறு பிழியவும். தேவையான சர்க்கரை சேர்த்து சில ஐஸ்கட்டிகளைப் போட்டு பால் இல்லாமல் குடிக்கவும்.

புதினா டீ:

சில புதினா இலைகள், துளசி இலைகள், இவற்றுடன் சிறுதுண்டு இஞ்சியை நசுக்கி போட்டு 4,5 மிளகைப்பொடி செய்து போட்டு நீரில் கொதித்ததும் தேயிலை, சீனி, பால், கலந்து வடிகட்டி அருந்தவும்.. இது ஜலதோஷம் இருமல் இவற்றிற்கு உடனடி நிவாரணம் அளிக்கும்.

தேநீர் நம் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலமளிக்கும் டானிக். நரம்பு, தசை, மண்டலங்களை சுறுசுறுப்பாக்கி புத்துணர்வு தருகிறது. காபி அருந்துவதைவிட தேநீர் அருந்துவது நல்லதே! அளவோடு அருந்த வேண்டும். அளவுக்கு மீறினால் நரம்புகளையும் வயிற்றையும்  பாதிக்கும். மிக சூடாக அருந்தும் தேநீர் வயிற்றின் உட்சுவர்களை புண்ணாக்கும்.
+

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் உணவுகள்...!



உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.

இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.

இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான். இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர்.


ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக் குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.


அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும். இப்போது அப்படி, உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து, ஆரோக்கியமாக வாழுங்கள்.
பார்லி : தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.
கத்திரிக்காய் : கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.

மீன் :

மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.

ஆப்பிள் :

ஆப்பிள்களில் வைட்டமின் `சி’ மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.

நட்ஸ் :

நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

டீ :

அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

வெங்காயம் :

வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஓட்ஸ் : ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.

முழு தானியங்கள் :

முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

சிட்ரஸ் பழங்கள் :

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

பசலைக் கீரை :

 பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை.

ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.


சோயா பொருட்கள் : சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது.

பூண்டு :

பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.

வெண்டைக்காய் :

கத்திரிக்காயைப் போன்றே வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.


ரெட் ஒயின் :

ரெட் ஒயினானது அதிகப்படியாக நார்ச்சத்து நிறைந்த திராட்சைகளால் செய்யப்படுவதால், இதனை உட்கொண்டால், இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதனால் தான் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.


சாக்லெட் :

சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.

பீன்ஸ் :

அனைத்து காய்கறிகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லா விட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.

மிளகாய் :

மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. சொல்லப்போனால், மிளகாயும் பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் மிளகாயிலும் அல்லியம் என்னும் பொருள் உள்ளது.

மார்கரைன் :

 இது வெண்ணைக்கு நல்ல மாற்றாக இருந்தாலும், இதில் ஸ்டெரால்ஸ் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது.

அவகேடோ :

இதுவரை அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான் நினைத் திருக்கிறோம்.

ஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.
+

24/08/2014

ரத்த சோகையா..? வாரம் ஒரு முறை வாழைக்காய் வறுவல் சாப்பிடுங்க..!

வாரம் ஒரு முறை வாழைக்காயை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.
வாழைக்காயில் இரும்புச் சத்து, போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பி, சி
உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகையைத் தடுக்க உதவும்.

அதிலும் அதனை வறுவல் போன்று செய்து சாப்பிட்டால் மிகவும் சூப்பராக இருக்கும். பலர் இதனை சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும் என்று சாப்பிடமாட்டார்கள்.

ஆனால் இதனை சமைக்கும் போது, அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து வாயு பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.

ஆகவே வாழைக்காயை அஞ்சாமல் சாப்பிடுங்கள்.

இதோ வாழைக்காய் மிளகு வறுவல்,

தேவையான பொருட்கள்: 

  • வாழைக்காய் – 1, 
  • மஞ்சள் தூள் 1 சிட்டிகை, 
  • மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், 
  • உப்பு - தேவையான அளவு, 
  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், 
  • பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை, 
  • கடுகு - 1 டீஸ்பூன், 


அரைப்பதற்கு

  • தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், 
  • இஞ்சி - 1/2 இன்ச், 
  • பூண்டு - 4-5, 
  • மிளகு - 2-3 டீஸ்பூன் 


செய்முறை: 

முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சற்று நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை நீரில் போட்டு பாதியாக வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 3 நிமிடம் கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

பின் அதில் லேசாக தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வாழைக்காயை வேக வைத்து இறக்கினால், வாழைக்காய் மிளகு வறுவல் ரெடி!!!
+

நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கும் தண்டுக்கீரை..!

உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்பவை கீரைகள். பல வகை கீரைகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டாலும், தண்டுக்கீரைக்கு தனி மகத்துவம் உண்டு. விதை, தண்டு, இலை என எல்லா பாகங்களும் ருசிக்கப்படும் ஒரே கீரை வகை இதுதான். சிறப்புமிக்க தண்டுக்கீரையின் சத்துக்களை பார்க்கலாம்.....

* தண்டுக்கீரை அமரன்தாசியீயா என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் அம ரன்தஸ் ஸ்பைனஸ் ஆகும். தண்டுக்கீரையில் 70-க்கும் அதிகமான வகைகள் உலகமெங்கும் விளைகிறது.

* சமைத்த தண்டுக்கீரையில் வைட்டமின்- ஏ மற்றும் வைட்டமின்-சி சத்துக்கள் கணிசமாக நிறைந்துள்ளன.

* பி-குழும வைட்டமின்களான தயமின், நியாசின் மற்றும் ரீபோபிளேவின் போன்றவை அதீத அளவில் உள்ளன. இவை உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்பு பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன.

* கால்சியம், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாது உப்புகளும் இதில் உள்ளன. இவை உடலை நோய் காரணிகளிடமிருந்து காப்பதுடன், பல்வேறு சத்துக்களை வழங்கி உடல்செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

* லியூசின் மற்றும் திரியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் தண்டுக்கீரையில் காணப்படுகின்றன. இவை உடலில் புரதப் பொருளை சீரான விகிதத்தில் அதிகரிக்கச் செய்கின்றன.

* உடலின் பருமனை அதிகரிக்கச் செய்யும் காரணிகளான சர்க்கரை (1.69 கிராம்) மற்றும் கார்போஹைட்ரேட் (62.25 கிராம்) குறைவான அளவுகளிலே உள்ளன. இதனால் தண்டுக் கீரையை தினசரி உணவோடு சேர்த்துக் கொள்வதால் மாரடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

* நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் பல்வேறு 'ஆன்டி-ஆக்ஸிடெண்ட்' பொருட்கள் இதில் இருக்கின்றன. இவை ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களை வளப்படுத்துவதன் மூலம் நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கின்றன.
+

இட்லி மற்றும் தோசைக்கு பொருத்தமாக இருக்கும் சட்னிக்கள்..!

பெரும்பாலான வீடுகளில் காலையில் இட்லி அல்லது தோசை தான் காலை உணவாக இருக்கும். அப்படி இட்லி அல்லது தோசை செய்யும் போது, பலர் என்ன சட்னி செய்வதென்று தெரியாமல் தினமும் ஒரே மாதிரியான சட்னியை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இங்கு இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற அருமையான மற்றும் பொருத்தமாக இருக்கும் சில சட்னி ரெசிபிக்களை தமிழ் போல்ட் ஸ்கை செய்முறையுடன் பட்டியலிட்டுள்ளது.

அவற்றை பார்த்து, அவற்றில் பிடித்ததை காலை வேளையில் செய்து சாப்பிடுங்கள். முக்கியமாக இந்த சட்னிக்கள் அனைத்துமே ஆரோக்கியமானவையும், வித்தியாசமானவையும் கூட. சரி, இப்போது இட்லி மற்றும் தோசைக்கு பொருத்தமாக இருக்கும் சட்னிக்களைப் பார்ப்போமா!!!

முட்டைக்கோஸ் கொண்டு பொரியல், கூட்டு என்று தான் செய்வோம். ஆனால் அதனைக் கொண்டு அருமையான சுவையில் சட்னி செய்ய முடியும் என்பது தெரியுமா? ஆம், முட்டைக்கோஸ் சட்னியானது தோசை, இட்லி போன்றவற்றிற்கு மிகவும் ருசியாக இருக்கும்.

ஆந்திராவில் கோங்குரா சட்னி மிகவும் பிரபலமானது. கோங்குரா என்றால் தமிழில் புளிச்ச கீரை. இந்த புளிச்ச கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடல் வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும். அதிலும் சட்னி செய்து சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

வீட்டில் பச்சை பட்டாணி உள்ளதா? உங்கள் குழந்தை பச்சை பட்டாணி சாப்பிட மறுக்கிறார்களா? அப்படியானால் குழந்தைகளுக்கு தோசை சுடும் போது, அவர்களுக்கு பச்சை பட்டாணியைக் கொண்டு சட்னி செய்து கொடுங்கள்.

இதுவரை எத்தனையோ சட்னிக்களை முயற்சி செய்திருப்பீர்கள். ஆனால் முந்திரி சட்னியை செய்ததுண்டா? இது மிகவும் அருமையான மற்றும் ஈஸியான சட்னி. அதுமட்டுமின்றி இது மிகவும் ஆரோக்கியமான ரெசிபியும் கூட.

காலையில் இட்லிக்கு மிகவும் சுவையான சட்னி அல்லது துவையல் செய்ய நினைத்தால், தேங்காய் வடகத் துவையலை செய்யுங்கள். இது மிகவும் சுவையுடன் இருப்பதால், எத்தனை இட்லி சாப்பிடுகிறோம் என்பதே தெரியாதது. ஏனெனில் அந்த அளவில் ருசியாக இருக்கும்.

பலருக்கு செலரி கீரையை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அத்தகையவர்களுக்காக அந்த கீரையை எப்படி செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் என்று தான் பார்க்கப் போகிறோம். செலரி கீரையை காலையில் தோசை, இட்லி, சாதம் போன்றவற்றிற்கு ஏற்றவாறு அதனை சட்னியாக செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

சற்று வித்தியாசமாக வீட்டில் கொள்ளு பருப்பு இருந்தால், அதனைக் கொண்டு சட்னி செய்து சாப்பிடுங்கள். இந்த சட்னியானது சுவையாக இருப்பதுடன், ஆரோக்கியமானதும் கூட. மேலும் மதிய வேளையில் இட்லி எடுத்து சென்றால், அதற்கு அருமையாகவும் இருக்கும்.

+

23/08/2014

'ஹாஃப் பாயில்' முட்டை ஆரோக்கியமானதா..?

நினைவு தெரிந்த நாள் முதல் காலை உணவில் முட்டையை சேர்த்து கொள்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள அதிமுக்கிய புரதம், ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம். சுவாரஸ்யமாக இந்த பழக்கத்தை முன்னதாக கொண்டு வந்தது ரோமானியர்கள் ஆகும். ஊட்டச்சத்து நிறைந்த மற்ற உணவுகளை விட முட்டைகளையே அவர்கள் விரும்பினார்கள். ஆனாலும் கூட, முட்டைகளை தினமும் உட்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்ற பயத்தில் இந்த வளமையான சக்தி வாய்ந்த உணவை உண்ண பலரும் பயம் கொள்கிறார்கள். இருப்பினும் இதனை தினமும் உட்கொண்டு வந்தால் கொழுப்புகள் குறையும் என்பதே உண்மையாகும்.

முட்டையின் மஞ்சள் கருவில் லசித்தின் என்ற வெண்கருக்கொழுப்பு உள்ளது நிரூபிக்கப்பட்ட தகவலாகும். இது கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால், திசு தடிமனாதலுக்கு எதிராக சிறப்பாக செயல்படும். ஒரு முட்டையில் 186 மில்லிகிராம் அளவிலான கொலஸ்ட்ரால் இருக்கக்கூடும். ஆனாலும் கூட அதனை தினசரி அடிப்படையில் உண்ணுவதை எண்ணி வருத்தப்பட தேவையில்லை. உங்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முட்டை அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் என்ற பயமின்றி தினமும் ஒரு முட்டையை கண்டிப்பாக உண்ணலாம்.

நம் மன வளர்ச்சிக்கு தேவையான கொலஸ்ட்ராலை முட்டையின் மஞ்சள் கரு வழங்கிய போதிலும், மூளை வளர்ச்சிக்கு அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பமிலங்கள் அடங்கிய சல்பர் அவசியம். மறுபுறம், முட்டையின் மஞ்சள் கருவில் பையோஃபிளேவோனாயிடுகள் மற்றும் பாஸ்ஃபேட்டிதில் கோலின் மற்றும் சல்பர் போன்ற மூளை கொழுப்புகள் அடங்கியுள்ளது.

பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு (ஹாஃப் பாயில்) முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும். அதற்கு காரணம் அரை வேக்காடு முட்டையிலிருந்து நம் உடலுக்கு தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் நீங்குவதில்லை. முட்டையை உங்கள் உணவில் இருந்து முழுவதுமாக நீக்குவதற்கு பதில் அதனை புத்திசாலித்தனமாக உட்கொண்டால் ஆரோக்கியத்தை அளிக்கும்.

முட்டை என்பது வளமையான அளவிலான புரதத்தை கொண்டுள்ளது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே போல் அதிகமாக சமைப்பதால் ஊட்டச்சத்து அதற்கேற்ப நீங்கிவிடும். அதனால் முட்டையை அரை வேக்காட்டில் உண்ணுவது சிறந்த வழியாகும். சரி, அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா? வாங்க பார்க்கலாம்!

அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா? முட்டையின் மஞ்சள் கரு அரை வேக்காட்டுடன் இருப்பதால் அரை வேக்காடு முட்டை நல்ல ஆரோக்கியத்தை தரும். முட்டையின் மஞ்சள் கருவை அப்படியே பச்சையாக உட்கொண்டால் அதிக பயனை அளிப்பதால் சிலர் அதை விரும்புவார்கள். ஆனாலும் கூட உணவு நச்சு அல்லது சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவால் உடல் நலம் பாதிப்படையாமல் இருக்க முட்டையை அரை வேக்காட்டுடன் சமைத்துக் கொள்வது நல்லது. மேலும் அதனை போதுமான அளவில் சமைத்து உட்கொண்டால், அவை போதிய ஊட்டச்சத்துக்களை உங்களுக்கு வழங்கிவிடும். அதற்கு அதனை சிறிது நேரத்திக்கு வேக வைத்தாலே போதும், அடம் பிடிக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து விடும். முழுவதுமாக வேக வைத்த முட்டையை போல் அல்லாமல் அரை வேக்காடு முட்டையில் நீல-பச்சை சல்பர் பிரிக்கப்படமாட்டாது.

குறைந்த அளவிலான கலோரிகள் கொண்ட நொறுக்குத் தீனி வேண்டுமா? அப்படியானால் அரை வேக்காடு முட்டையே சிறந்தது. அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை உங்கள் கலோரிகளை அதிகரிப்பதில்லை. பொறித்த முட்டை போன்ற இதர முட்டை வகைகளுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டையில் கலோரிகளின் அளவு குறைவே. அரை வேக்காடு முட்டையில் 78 கலோரிகளும், 5.3 கிராம் கொழுப்புகளும் மட்டுமே அடங்கியுள்ளது. இதில் 1.6 கிராம் சாச்சுரேட் ஆகிவிடும். நீங்கள் தினசரி உண்ணும் இதர உணவுகளுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டையில் கலோரிகள் குறைவே. எண்ணெய் அல்லது வெண்ணெயில் சமைத்த முட்டையுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக விளங்குகிறது. பொறித்த முட்டையில் பொதுவாக, 90 கலோரிகளும், 6.83 கிராம் கொழுப்பும் (இதில் 2 கிராம் சாச்சுரேட் ஆகிவிடும்) அடங்கியுள்ளது.

அனைத்து வித அதிமுக்கிய அமினோ அமிலங்கள் அடங்கிய வெகு சில உணவுகளில் முட்டையும் ஒன்றாகும். அதனால் அரை வேக்காடு முட்டை உங்களை ஆரோக்கியத்துடன் வைத்திடும். முட்டையில் கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அடங்கியுள்ளது. அரை வேக்காடு முட்டை இந்த அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை அழிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

பெண்களுக்கு தினமும் 700 மைக்ரோ கிராம் அளவிலான வைட்டமின் தேவைப்படுகிறது. இதுவே ஆண்களுக்கு என்றால் 900 மைக்ரோ கிராம் ஆகும். ஒரு அரை வேக்காடு முட்டை உண்ணுவதால் கிட்டத்தட்ட 74 மைக்ரோ கிராம் கிடைத்துவிடுகிறது. இதனால் உங்கள் இலக்கையும் சுலபமாக அடைந்து விடுகிறீர்கள். இந்த ஊட்டச்சத்தினால் உங்கள் கண்கள் திறம்பட செயல்படும். இனி காலை உணவிற்கு பொறித்த முட்டை என்ற சம்பிரதாயத்தை மாற்றி, ஆரோக்கியமான வாழ்விற்கு அரை வேக்காடு முட்டையை உண்ணுங்கள். அரை வேக்காடு முட்டை ஆரோக்கியத்தை தருகிறதா? ஆம், அதில் அதிமுக்கிய வைட்டமின் ஏ ஊட்டச்சத்து உள்ளதால் சருமம், பற்கள் மற்றும் எலும்புகளை பராமரிக்கும்.

ஒரு பெரிய அரை வேக்காடு முட்டை கிட்டத்தட்ட 0.56 மைக்ரோ கிராம் வழங்குகிறது. அதில் 2.4 மைக்ரோகிராம் அளவிலான வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின்கள் ஆரோக்கியமான மெட்டபாலிசத்திற்கு தேவையானதாகும். உங்கள் உடலில் உள்ள கலோரிகளை ஆற்றல் திறனாக மாற்ற இந்த ஊட்டச்சத்துக்கள் உதவுவதால், அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதாக விளங்குகிறது. நம் நரம்பியல் அமைப்பு சரியாக செயல்படவும் வைட்டமின் பி12 உதவுகிறது.

அரை வேக்காடு முட்டையில் வெள்ளை கரு நன்றாக வெந்திருக்கும். ஆனால் மஞ்சள் கருவோ அரை வேக்காட்டுடன் வழிந்து ஓடுகிற நிலையில் இருக்கும். வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்களுக்கு அரை வேக்காடு முட்டை பரிந்துரைக்கப்படுவதில்லை. அதனால் வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனை தவிர்க்க வேண்டும். வலுவான உடல்நலத்தை கொண்டுள்ளவர்களுக்கு தான் அரை வேக்காடு முட்டை ஆரோக்கியத்தை அளிக்கும். பொறித்த முட்டையுடன் ஒப்பிடுகையில் கண்டிப்பாக அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதே.

+

பேபி கார்ன் பெப்பர் ஃபிரை - ஆரோக்கிய சமையல்

தேவையான பொருட்கள்: 

  • பேபி கார்ன் – 10  பெரிய 
  • வெங்காயம் – ஒன்று, 
  • பூண்டு – 8 பல், 
  • பச்சை மிளகாய் – ஒன்று, 
  • வெங்காயத்தாள் – 4, 
  • ஆலிவ் ஆயில் – சிறிதளவு, 
  • மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை, 
  • உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: 

• பேபி கார்னை வட்ட வடிவமாக வெட்டி வைக்கவும்.

• வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும்.

• வாணலியில் சிறிதளவு ஆலிவ் ஆயில் விட்டு, நறுக்கிய பூண்டு, வெங்காயம், நறுக்கிய பேபி கார்ன், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.

• வெந்தவுடன் வெங்காயத்தாள், மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

• இது மிகவும் சுவையாக இருக்கும்.
+

நினைவாற்றலை அதிகரிக்கும் புடலங்காய்..!

புடலங்காய் இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. இது  சுவை மிகுந்த காயாகும்.  இதனை தென்னிந்தியாவில் உணவில் அதிகம் சேர்க்கின்றனர்.

புடலையின் உட்பகுதியில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். புடலங்காயில் நன்கு முற்றியதையே உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள புடலங்காயை பயன் படுத்த வேண்டும்

• ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டது. காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு

• தேகம் மெலிந்து இருபவர்கள் அடிக்கடி புடங்கையே உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும்.

• அஜீரண கோளாரை எளிதில் சீராக்கி நல்ல பசியை உண்டாக்கும்.

• குடல் புண்ணை ஆற்றும். தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்

• இதில் நார்சத்து அதிகம் இருப்பதால் மலசிக்கலை போக்கும் தன்மை உடையது.

• மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.

• நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து நியாபக சக்தியை அதிகரிகிறது.

• பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைப்படுதலை குணபடுத்தும். கருப்பைக் கோளாறையும் குணபடுத்தும். கண் பார்வையை அதிகரிக்க செய்யும்.

• இதில் அதிகம் நீர்ச்சத்து இருப்பதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

• வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.
+

20/08/2014

உணவுப்பொருட்களை கெடாமல் பாதுகாக்கும் எலுமிச்சை..!

வீட்டிலுள்ள குளிர்சாதன பெட்டியில் நாம் பல்வேறு பொருட்களை வைப்பது வழக்கம். பெரும்பாலும் உள்ளே வைக்கப்பட்ட பொருட்கள் கிருமிகளால் தாக்கப்படுவதால் துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது.

அந்நிலையில் பஞ்சினை சிறிய பந்துபோல் சுருட்டி அதை எலுமிச்சை சாற்றில் நனைத்து அல்லது ஸ்பாஞ்சை எலுமிச்சை சாற்றில் நனைத்து குளிர்சாதனப் பெட்டிக்குள் சில மணி நேரங்கள் வைத்திருக்க துர்நாற்றம் விலகும்.

* வெண்மை நிறமுடைய காய்கறிகளை சமைக்கும் போது அவை எளிதில் செம்மையாக மாறுவது இயற்கை. உதாரணம் காலிபிளவர். இவற்றை சமைப்பதற்கு முன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றைப் பரவலாகப் படும் படி தெளித்து வைத்திருந்து சமைத்தால் அவற்றின் வெண்மை நிறம் மாறாமல் இருக்கும்.

* காய்கறிகளை நறுக்க உபயோகப்படும் பலகை வெங்காயம், பூண்டு, இறைச்சி ஆகியவற்றை நறுக்கியதால் ஏற்பட்ட நாற்றம் போக எலுமிச்சம்பழத்தை துண்டித்து ஒரு பகுதியைக் கொண்டு அப்பலகையை நன்கு தேய்ப்பதாலோ அல்லது எலுமிச்சை சாறு கொண்டு தேய்த்துக் கழுவுவதாலோ நாற்றம் நீங்கப் பெறும்.

* சமையல் அறையில் எறும்புகள், பூச்சிகள் துளையிட்டு பெருகுவதால் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை உள்ளே விடலாம்.

* கடைகளில் வாங்கும் காய்கறிகள், பழங்கள் ஆகியவை அவற்றின் மேல் படிந்துள்ள அழுக்காலும், அவற்றிற்கு இடப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் உரங்கள் ஆகியவற்றாலும் விஷத்தன்மை வாய்ந்ததாக இருப்பது இயற்கை.

இதைப் போக்க ஒரு தெளிப்பானில் சிறிது எலுமிச்சை சாற்றை ஊற்றி காய்கறிகள், கீரைகள், கனிகள் இவற்றின் மீது தெளித்து சிறிது நேரம் வைத்திருந்து கழுவிவிட்டுப் பயன்படுத்துவதால் அவற்றின் மீதுள்ள நச்சுக்கள், கிருமிகள் விலகி நல்ல மணத்தையும் பெற்று விடும்.

* நவநாகரீக உலகில் சிறுவர் மட்டுமின்றி பெரியவர்களும் டப்பாக்களிலும், பைகளிலும் அடைத்து வைக்கப்பட்ட ரசாயனக்கலவை மிக்க உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவது வழக்கத்தில் உள்ளது. இதுதவிர்க்க இயலாததாகவும் மாறிவிட்டது.

இந்த உணவுப் பொருட்களுக்கு இடப்பட்ட செயற்கை வண்ணங்களும், நீண்ட நாள் உபயோகத்தில் இருக்கும் பொருட்டு கலக்கப்பட்ட ரசாயனப் பொருள்களாலும் ரத்தத்தில் நச்சுப்பொருட்கள் சேர்ந்து உடலையும், சீரண உறுப்புகளையும் கெடுக்கின்றன.

இதைத் தவிர்க்க அடிக்கடி எலுமிச்சை சாறு குடிப்பது நலம். இதனால் ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்கள் நீங்கி ரத்தம் சுத்தமாகி ஆரோக்கியம் நிலைபெறுகிறது. இது போன்ற வேறு பல மருத்துவ குணங்கள் எலுமிச்சையில் நிறைந்திருக்கிறது.
+

19/08/2014

இரவில் நன்றாகத் தூங்க...! - உயர் ரத்த அழுத்தம் குறைய...! - இதப்படிங்க..!

இரவில் நன்றாகத் தூங்க...!


ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் சி-யும், பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது.

பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.

இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும்.

பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.



சமையலில் ஏலக்காய் சேர்ப்போம்...!


சாதாரண வாசனைப் பொருள் என்று நாம் நினைக்கும் ஏலக்காயின் மருத்துவப் பயன்கள் மிக அதிகம்.

1.5 கிராம் ஏலக்காய் வீதம் ஒரு நாளைக்கு இரண்டு முறை என 12 வாரங்களுக்கு ஏலக்காயை எந்த விதத்திலாவது உணவில் சேருங்கள்.

உயர் ரத்த அழுத்தம் சராசரிக்கு வந்துவிடும் என்கிறது 2009&ம் ஆண்டு வெளியான இந்தியன் ஜர்னல் ஆஃப் பயோகெமிஸ்ட்ரி அண்ட் பயோஃபிசிக்ஸ். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கொடுக்கப்படும் மாத்திரை எப்படி செயல்படுகிறதோ, அந்தச் செயலை ஏலக்காய் செய்கிறது.

+

முட்டைகோஸ்ஸின் மருத்துவக் குணங்கள் - இதோ உங்களுக்காக...!

முட்டைகோஸ்ஸின் மருத்துவக் குணங்கள்:-


முட்டைகோஸ்ஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன.. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.

மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். குறிப்பாக முட்டைகோஸை சாப்பிடும் போது, அதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்து சாப்பிட கூடாது. இல்லாவிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

எனவே எப்போது இதனை சாப்பிட்டாலும் அளவாக வேக வைத்து சாப்பிடுவது நல்லது. சொல்லப்போனால், அதனை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது. முட்டைகோஸ் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்… முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன.

எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.

ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது. உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட் குளுட்டமைன், அவைகளை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.
+

17/08/2014

மூன்று வேளை உணவும் பயன்களும் - இதோ உங்களுக்காக..!

காலை:- காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட் டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப் பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம். சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலா ம் என்று நினைப்பதுண்டு.

தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை. காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதியம்:- மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வ தால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும். காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதியஉணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள். மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள்,திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.

இரவு:- இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக் கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவ தாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது . இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.

மற்றொரு ஆய்வு::- பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது. 
+

16/08/2014

தயிர் சாதமா..? பிரியாணியா..? - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!

உலகம் முழுவதும் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு நோய்களின் தன்மைக்கேற்ப சில உணவுக் கட்டுப்பாடுகளை அறிவுறுத்திவருகின்றனர்.

இந்த உணவுக் கட்டுப்பாடுகளில் மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுப் பொருட்கள் நமக்குச் சுவையிலோ அல்லது வேறு வகையிலோ பிடிக்காமல் போய்விட்டால், அதற்கு இணையான அல்லது சம அளவு சத்துக்களைக் கொண்ட, நமக்குப் பிடித்த மாற்று உணவு ஏதும் இருக்காதா என்ற ஏக்கத்துடன் பிற உணவுப் பொருட்களைத் தேடத் தொடங்குகிறோம்.

உதாரணத்துக்கு மருத்துவர் தயிர் சாதம் சாப்பிடச் சொன்னால், மனது பிரியாணியின் பின்னால் செல்லும். மருத்துவர் பரிந்துரைத்த உணவுப் பொருளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன - நமக்குப் பிடித்த உணவுப் பொருளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்று ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறோம். நம் தேடலை எளிதாக்குகிறது ஓர் இணையதளம்.

ஒப்பிட்டு அறியலாம்

இந்த இணையதளத்தில் இரண்டு காலிப் பெட்டிகள் இருக்கின்றன. ஒரு காலிப் பெட்டியில் மருத்துவர் பரிந்துரைத்த உணவுப் பொருளின் பெயரை உள்ளீடு செய்துகொள்ளலாம். அடுத்த காலிப் பெட்டியில் நமக்குப் பிடித்தமான உணவுப் பொருளை உள்ளீடு செய்யலாம்.

அதன் பிறகு கீழுள்ள ஒப்பிடு (Compare) என்னும் பெட்டியை க்ளிக் செய்தால், புதிய பக்கம் ஒன்று பார்வைக்குக் கிடைக்கிறது. இப்பக்கத்தில் நாம் உள்ளீடு செய்த இரண்டு உணவுப் பொருட்களின் சத்துப் பொருட்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் பரிமாறப்படும் அளவு (Serving) மற்றும் அந்த அளவுக்கேற்ப உணவுப் பொருளிலுள்ள கலோரிகள் (Calories), மாவுச் சத்து (Carbohydrates), கொழுப்புச் சத்து (Fat), புரதச் சத்து (Protein) போன்ற அளவுகள் நமக்குக் கிடைக்கும்.

இதன் கீழ்ப்பகுதியில் குறிப்பிட்ட உணவுப் பொருளின் வேறு சில வகைகளும் அவற்றின் கலோரி அளவும் கொடுக்கப்பட்டிருக்கும்.

உங்களுக்குப் பிடித்த இரண்டு உணவுப் பொருட்களின் சத்துக்களை ஒப்பிட்டு அறிந்துகொள்ள விரும்பினால் http://www.twofoods.com/ என்னும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.
+

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் மைதா சீடை செய்முறை - இதோ உங்களுக்காக...!

கிருஷ்ணனுக்கு சீடையும் மிகவும் இஷ்டம். எனவே பலர் கிருஷ்ண ஜெயந்தி அன்று சீடை செய்வார்கள். உங்களுக்கு சீடையை பக்குவமாக செய்யத் தெரியாதெனில், தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ள மைதா சீடை ரெசிபியை படித்து செய்து பாருங்கள். நிச்சயம் இது எளிமையான செய்முறையைக் கொண்டிருப்பதுடன், சுவையாகவும் இருக்கும்.

சரி, இப்போது அந்த மைதா சீடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா...!

தேவையான பொருட்கள்:-

  • மைதா - 1 
  • கப் பொட்டுக்கடலை - 2 
  • டேபிள் ஸ்பூன் வெண்ணெய் - 3 
  • டீஸ்பூன் எள் - 1 
  • டீஸ்பூன் சீரகம் - 1/4 
  • டீஸ்பூன் பேக்கிங் சோடா - 1/4 
  • டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு 
  • எண்ணெய் - தேவையான அளவு 
  • தண்ணீர் - தேவையான அளவு 

செய்முறை:-

முதலில் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் மைதா மாவை போட்டு கட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 15 நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும்.

பின்னர் அதனை இறக்கி, ஒரு தட்டில் போட்டு கையால் உதிர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை சல்லடை கொண்டு ஒரு முறை சலித்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் பொட்டுக்கடலை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

 அதனையும் சலித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா, பொட்டுக்கடலை மாவு, உருக வைத்த வெண்ணெய், சீரகம், எள், உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து, பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின் அதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள சீடைகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மைதா சீடை ரெடி...!
+

15/08/2014

கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக்: சி.எஸ்.இ. எச்சரிக்கை..!

விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வில் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எந்த விதமான வழிகாட்டுதலும் இல்லாத நிலையில், கறிக்கோழிகளுக்கு அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் கொடுக்கப்படுகிறது, இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட தினசரி நோய்கள் பலவற்றுக்கு பல்வேறு ஆன்ட்டி பயாடிக்குகள் பயன்படுகின்றன. ஆனால், கறிக்கோழியில் அதிகம் ஆனட்டி பயாடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுகும் ஆன்ட்டி பயாடிக்கினால் குணப்படுத்த முடியக்கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. காரணம், அந்த மருந்துகள் நம் உடலில் அளவுக்கு அதிகமாகி வேலை செய்யாமல் விரயமாகி விடுகிறது.

இந்தியாவில் நடத்தப்பட்ட இந்த மிகப் பெரிய ஆய்வில், பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோழிக்கறியில் 40% மாதிரிகளில் அளவுக்கு அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சிக்கன் கறி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது,

பரிசோதனைச் சாலையின் தலைமை இயக்குனர் சுனிதா நரைன் கூறும்போது, "ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது, கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை" என்று அவர் எச்சரித்துள்ளார்.

பரிசோதனை முடிவுகள்:-டெல்லியிலிருந்து 70 சிக்கன் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கோழிகளின் லிவர், தசை மற்றும் கிட்னி பரிசோதனை செய்யப்பட்டது. பொதுவாக கோழிவளர்ப்பில் 6 ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது: ஆக்சிடெட்ரா சைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், டெட்ராசைகிளின் வகையறாவான டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின், சிப்ரோபிளாக்சசின், நியோமைசின் ஆகியவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கூறிய ஆன்ட்டி பயாடிக் மருந்துகளில் 5 வகை மருந்துகள் அனைத்து சிக்கன்களிலும் காணப்பட்டன. கிலோவுக்கு 3.37-131.75 மைக்ரோகிராம் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் படிவுகள் சிக்கன் கறியில் இருப்பது தெரியவந்தது.

குர்கவான் பகுதியிலிருந்து பெற்ற சிக்கன் கறி மாதிரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட (ஆக்சிடெட்ராசைக்ளின், டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின்) மருந்துகளின் படிவுகள் அதிக அளவில் காணப்பட்டுள்ளது.

கோழிகளின் வாழ்நாளில் 35 முதல் 42 நாட்களுக்குள் ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் காரணமில்லாமல் வெறும் எடையை அதிகரிக்கவும் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக இந்த ஆய்வாளரகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஆய்வு ஒரு சிறு அளவை மட்டுமே காண்பித்துள்ளது. இன்னும் அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் முறையற்று பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், சிக்கன் கறி சாப்பிடுபவர்களுக்கு ஆன்ட்டி பயாடிக் மருந்துகளையும் தடுக்கும் பாக்டீரியாக்களின் ஆதிக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதனையும் சி.எஸ்.இ. ஆய்வாளர்கள் ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். 2002ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டுவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான நோயாளிகளுக்கு சிப்ரோபிளாக்சசின், ஆக்சிடெட்ரா சைக்ளின், டாக்சிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.

சிப்ரோபிளாக்சசின் என்ற ஆன்ட்டி பயாடிக் மூக்கு முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களையும் எதிர்க்கும் மருந்தாகும். இதன் பலனை மனித உடல் இழக்கும்போது டைபாய்டு உள்ளிட்ட பிற கிருமித் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக மாறிவிடும், உண்மையில் இந்தியாவில் இது அதிகரித்திருப்பதாக சி.எஸ்.இ. எச்சரித்துள்ளது.

எனவே இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் தாறுமாறாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்று சி.எஸ்.இ. தெரிவித்துள்ளது
+

14/08/2014

ஆரோக்கியமான குழந்தைக்கு சில உணவு பழக்கங்கள்….!

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்றுமகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது.

இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பினிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. இதனால் ரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்கவேண்டும். உற்சாகத்தை அதிகரிக்கும்: இது மனதிற்கு உற்சாகம் தரும் காய்கறி. சற்றே சோம்பலாகவோ, மன அழுத்தம் ஏற்படுவதுபோல உணர்ந்தாலோ பீட்ரூட் ஜூஸ் சாப்பிடலாம்.

இது மனதை உற்சாகப்படுத்தும், மகிழ்ச்சி ஏற்படும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களை பாதுகாக்கும். குழந்தைகளுக்கு கண்நோய் ஏற்படாமல் தடுக்கும். கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே கர்ப்பிணிகளுக்கு சாலட், ஜூஸ், சூப் போன்றவைகளை செய்தும் கொடுக்கலாம்.
+

மீன் சாப்பிட்டா ஸ்கின் கேன்சர் வராதாம்..! - தெரியுமா உங்களுக்கு...?

மீன் பிரியரா நீங்கள் அப்போ உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, மீன் சாப்பிடும் நபர்களுக்கு வாய் புற்றுநோய், சருமபுற்றுநோய் வர வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதற்கு காரணம் மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த கொழுப்பு அமிலங்கள் இறந்த செல்களை புதுப்பிக்கின்றனவாம். சருமம் பொலிவடைகிறது என்கின்றனர் நிபுணர்கள் லண்டன் பல்கலைக்கழகம், குயின் மேரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதனை பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபித்துள்ளனர்

ஒமேகா 3 அமிலம்:-மீன் உணவில் , கெட்ட கொழுப்பு அறவே இல்லை. புரதச் சத்து அதிகமாக உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த அமிலம் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது.

சருமப்புற்றுநோய்:-பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. சருமப்புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு தருகிறது

மார்பகப்புற்றுநோய்:-மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

இதயத்துக்கு பாதுகாப்பு:-கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எந்தவித இதயக்கோளாறுகளும் ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள்.

குழந்தைகளுக்கு மீன்:-மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது

மூளை சுறுசுறுப்பாகும்:-மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது. அதனால் , வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது என்கின்றனர் நிபுணர்கள்
+