30/07/2014

Leave a Comment

பாலக் ரைஸ் செய்முறை இதோ உங்களுக்காக..!


தேவையானவை: 

பாஸ்மதி அரிசி - 200 கிராம்,
பாலக் கீரை - ஒரு கட்டு
வெங்காயம் - 1,
பூண்டு பேஸ்ட் - கால் டீஸ்பூன்,
இஞ்சி - அரை டீஸ்பூன்,
சோம்பு - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3,
கிராம்பு - 2,
நெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: 

• பாலக்கீரையை நன்றாக அலசி பொடியாக நறுக்கி வைக்கவும்.

•  வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்

• இஞ்சியை தோல் சீவி துருவிக் கொள்ளவும். • ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.

• அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, உதிராக வடித்துக் கொள்ளவும்.

• கடாயில் நெய் விட்டு சோம்பு, கிராம்பு தாளித்து பூண்டு பேஸ்ட், இஞ்சித் துருவல், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

• சிறிது வதங்கியவுடன் வெங்காயம், கீரை சேர்த்து மேலும் வதக்கி, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, வடித்த சாதத்துடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

0 comments:

Post a Comment