11/08/2014

Leave a Comment

கொத்து, பிரைட்ரைஸ் சாப்பிடுகிறவர்களா நீங்கள்..? - எச்சரிக்கை..!

கொத்து மற்றும் பிரைட்ரைஸ் சாப்பிடுவதால் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம், கொழும்பில் வாழும் 20 தொடக்கம் 50 வயதுக்குட்டபட்ட 200 பேரிடம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது கொழும்பில் வசிப்பவர்களை விட தொழில் நிமித்தம் கொழும்பிற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோரே கொத்து மற்றும் பிரைட்ரைஸ் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்கின்றனர்.

ஆய்வு செய்யப்பட்டவர்களில் 50 வீதமானோருக்கு கொலஸ்ட்ரோல் மற்றும் ஈரல்பாதிப்பு போன்ற நோய்கள் இதனால் ஏற்பட்டுள்ளன.
இதற்குக் காரணம் இவ் உணவுகளுக்கு அதிகமாக உபயோகப்படுத்தப்படும் கொழுப்பு நிறைந்த பாம் ஒயில் ஆகும்.
மேலும் இவ் உணவுகள் கடைகளில் திறந்வெளியில் வைத்து இரவு நேரங்களில் தயாரிக்கப்படுகின்றன இவ்விடங்கள் எப்போதும் சுகாதாரமற்ற முறையிலேயே காணப்படும்.

மேலும் இவ்வாறான இடங்களில் அதிகமான கரப்பான், பல்லி போன்ற பூச்சிகள் அதிகமாக காணப்படுகின்றன. சிலவேளைகளில் உணவுகள் வைத்திருக்கும் பைகளுக்குள் சென்று இவை இருக்க வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதால் இவைகளையும் சேர்த்து கொத்து, பிரைட்ரைஸ் உணவுகளுடன் சமைத்து வழங்குகின்றனர்.

இதனை அறியாமல் வாங்கி உண்ணுபவர்களுக்கு நோய்கள் ஏற்படுவது மாத்திரம் அல்லாது ஆயுட்காலம் குறையும் வாய்ப்பும் அதிகமாக இருப்பதாக இவ்வாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

0 comments:

Post a Comment