மஞ்சள்:-
இதில் உள்ள 'குர்குமின்’ (Curcumin) என்ற வேதிப் பொருள் புற்று செல்லை தடுக்கும் தன்மைகொண்டது. செல்களில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படாமல் தடுக்கும் (Anti inflammatory effect) ஆற்றலும் மஞ்சளுக்கு உண்டு. தொடர்ந்து மஞ்சளைப் பயன்படுத்தும்போது புற்று செல் உருவாகும் தன்மையைக் குறைக்கும்.
புற்றுநோய் வளர்ச்சி மேலும் தூண்டப்படுவதைத் தடுக்கும். காயங்களை ஆற்றவும், அனைத்து விதமான தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படும். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.
குங்குமப்பூ:-
குங்குமப்பூ தொண்டை நோய்களுக்குச் சிறந்த மருந்து. முக்கியமாக இதுவும் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. 'கீமோதெரப்பி’ (Chemo Therapy), ரேடியேஷன் தெரப்பி (Radiation therapy) எடுத்தவர்களுக்கு அதன் பக்க விளைவுகளைத் தடுப்பதற்குக் குங்குமப்பூ பக்கபலமாக இருக்கிறது. இந்திய, அரேபிய, சீனக் கலாசாரங்களில் இது உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இஞ்சி:-
இஞ்சி இல்லாத சமையலே இல்லை. இஞ்சியை வெறும் சுவை, மணத்துக்காக மட்டும் சேர்ப்பது இல்லை. ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே, முந்தைய நாள் செய்த கத்தரிக்காய் குழம்பு முதல் சாம்பார் வரை கெட்டுப்போகாமல் இருப்பதற்குக் காரணமே, இஞ்சி சேர்ப்பதுதான். இஞ்சி ஓர் இயற்கையான பதப்படுத்தும் (preservative) பொருள். பசியைத் தூண்டும். கபத்தைத் தணிக்கக்கூடியது என்பதால்தான் சளி, இருமல் போன்றவற்றுக்கு இஞ்சிக் கஷாயம் தரப்படுகிறது. இஞ்சியை ஆயுர்வேதத்தில் 'ஆர்த்ரகம்’ என்று சொல்வார்கள். 7-ஆம் நூற்றாண்டிலேயே புற்றுநோய்க்கு 'ஆர்த்ரக ரசாயனம்’ என்ற முறை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குடல், ஆசனவாய், சினைப்பை புற்றுநோய்க்கு இது மருந்தாகப் பயன்படும். குறிப்பாகச் சினைப்பை புற்றுநோய்க்கு மிகவும் சிறந்தது.

0 comments:
Post a Comment