மூலம், ஆசனவாய் வெடிப்பு, பவுத்ரம் போன்றவைகளின் அறிகுறியே பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும். அதனால்தான் இந்த நோய்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோய் குறைவு.
ஆனால் மலக்குடல் புற்றுநோய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆண்களை அதிகம் தாக்குகிறது. இரும்பு சத்து பற்றாக்குறை கொண்ட ரத்தசோகை இருந்தால் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவைகளில் எதிலும் புற்றுநோய் இருக்கலாம். பெற்றோருக்கு குடல் புற்று நோய் இருந்தால், பிள்ளைகளையும் அது தாக்க அதிக அளவு வாய்ப்பிருக்கிறது.
இந்த வகை நோய்கள் இருந்தால், அவைகளை கண்டறியும் பரிசோதனை முறைகள் என்ன?
மலக்குடல், ஆசன வாய் பகுதிகளில் எத்தகைய நோய் இருக்கிறது, எந்த அளவுக்கு அது பாதித்திருக்கிறது என்பதை டாக்டரே விரலை பயன்படுத்தி பரிசோதிப்பார். பிராக்ட்டாஸ்கோபி முறையில் பெருங்குடலில் கேமிராவை நுழைத்தும் பரிசோதிக்கலாம்.
‘கொலோனோஸ்கோபி‘ முறையில் பரிசோதனையும் செய்யலாம். அது வழியாக சிகிச்சையும் கொடுக்கலாம். இரண்டு மீட்டர் நீள கேமிரா இணைப்பு பெருங்குடலுக்குள் செல்லும்.
அதன் மூலம் பரிசோதனையும், சிகிச்சையும் மேற்கொள்ளப்படும். அறிகுறிகளைக் கண்டு தொடக்க நிலையிலே சிகிச்சை பெறுவது நல்லது. இல்லாவிட்டால் அறுவை சிகிச்சை, லேப்ராஸ்கோபி முறை சிகிச்சைகள் தேவைப்படும்.
அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கு மூல நோய் ஏற்படும் என்பது சரியா?
சரியல்ல. அதிக உடல் சூடு கொண்டவர்களை மேற்கண்ட நோய்கள் தாக்கும் என்பதும் சரியல்ல. தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது, உணவு முறை முரண்பாடுகள், வாழ்க்கை முறை முரண்பாடுகள், மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள்தான் இத்தகைய நோய்களுக்கு காரணமான இருக்கின்றன.
தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இதர தொழில்துறைகளில் பணியாற்றும் இளம் தலைமுறையினர் இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கை முறைகளை சரிசெய்து வருமுன் காப்பதும், வந்த உடன் சரியான சிகிச்சைகள் பெறுவதுமே இந்த நோய்களிடம் இருந்து தப்பிக்க சிறந்த வழி.

0 comments:
Post a Comment