08/09/2014

Leave a Comment

புகைப்பிடிப்பதை கைவிடுவதனால் என்ன நடக்கும் என்று தெரியுமா..?

"நுரையீரல் பஞ்சு போன்று மென்மையானது. அதனை சரிவர பாதுகாக்க வேண்டும்..." என்ன இதை அடிக்கடி கேட்ட மாதிரி இருக்கா? நம்ம குட்கா முகேஷ் தான் ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும் முன்னதாக இதை நமக்கு சொல்கிறார் அல்லவா? இதை நாம் கிண்டல் செய்தாலும் கூட. இது தான் நிதர்சனமான உண்மை.

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு ஆபத்தை விளைவித்து, அதற்கு அடிமையாக்கிவிடும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த பழக்கம் பல பேருடைய டென்ஷன் மற்றும் அழுத்தத்தை நீக்க உதவுகிறது. இந்த பழக்கத்தை கைவிட நினைத்த பல பேர், இதற்கு மாற்று பொருளாக நிக்கோட்டின் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். வெகு சிலராலேயே இந்த பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்த முடிகிறது. சரி, இந்த பழக்கத்தை கைவிடுவதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதனால், உடலுக்கு உடனடி நன்மைகள் முதல் நீண்ட கால நன்மைகள் வரை பல கிடைக்கும். அதில் முதன்மையானது, அதிகமாக உள்ள இரத்த அழுத்தம் 20 நிமிடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

இரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு மெதுவாக குறைந்து, 8 மணி நேரத்தில் ஆக்ஸிஜன் அளவு சீராக மாறிவிடும்.

2 நாட்களில் உடம்பில் பரவியுள்ள நிக்கோட்டின் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் பொருட்களின் மீதான சுவை மற்றும் மனம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

4 நாட்களில் உடலில் உள்ள மூச்சு குழாய்கள் அனைத்தும் அமைதியாகி, ஆக்கத் திறனை அதிகரிக்கும்.

2 வாரங்களில் இரத்த ஓட்டம் முன்னேறி, அடுத்த 10 வாரங்களில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

9 மாதங்களில் அனைத்து சுவாசக் கோளாறுகளும் சரி ஆகும். மேலும் சுவாசப்பையின் கொள்ளளவு 10% அதிகரிக்கும்.

5 வருடங்களில் இதயமும், நுரையீரலும் புகைப்பிடிக்காதவரை போலவே இயங்கத் தொடங்கிவிடும். அதனால் நெஞ்சு வலி மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயம் குறையும்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால், அசிடிட்டி, செரிமானமின்மை மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். மேலும் வயிற்றுப் பொருமல், லேசான வயிற்று போக்கு, மலச்சிக்கல் மற்றும் குமட்டலும் ஏற்படும்.

தீய நஞ்சுத் தன்மையால் உடல் இனி மாசுபடாததால், சுவாச அமைப்பு மீண்டும் மீளவுயிர்ப்பிக்கும். இது சைனஸ், சளி, தொண்டை புகைச்சல் மற்றும் தொண்டை கட்டுதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இனி இதயம் வேகமாக துடிக்க தேவையில்லை. இயல்பான இரத்த ஓட்டமாக மாறும் போது, விரல்களில் சிலிர்ப்பு, தலைச்சுற்று, தசை இறுக்கம் மற்றும் நீர் தேங்குதல் போன்ற பக்க விளைவுகளை உடம்பில் ஏற்படுத்தும்.

இரத்த நாளங்கள் சம்பந்தமான தொகுப்புகளை சுருங்கச் செய்யும் தன்மையை கொண்டவை நிக்கோட்டின். அதனால் இதயம் இயல்பு நிலையை விட, அதிகமாக துடிக்க வேண்டியிருப்பதால், அது வலுவிழந்து போகும். மேலும் புகைப்பழக்கத்தை கைவிடுவதால், இப்போது இதயம் இயல்பு நிலைக்கு திரும்பும். அதனால் சோர்வு மற்றும் தலைச்சுற்று ஏற்படும்.

தூங்கும் முறையில் கூட மாற்றங்களை காணலாம். லேசாக கண் அயரும் நேரத்தில் கண் அசைவு இருந்து கொண்டே இருக்கும். மேலும் கெட்ட கனவுகளும் வந்து கொண்டே இருக்கும். மன அழுத்தத்தை நீக்கும் புகைப்பழக்கத்தை நீங்கள் கைவிடுவதால், பகலில் ஏற்படும் டென்ஷன் மற்றும் பிரச்சனைகளை இவ்வகை கனவுகள் தான் கையாளும். அதனால் சிறிது எரிச்சலும் கூட ஏற்படும்.

முடிவில், இதையெல்லாம் தாண்டி இந்த பழக்கத்தை கைவிட்டால், அது உங்கள் உயிரை காக்க போவது உறுதி. இந்த பழக்கத்தை கைவிட்டால், அந்த மாற்றத்தை உடல் ஏற்றுக்கொள்ள சிறிது காலம் பிடிக்கும். ஆனால் அதனால் கிடைக்க போகும் பயன்களை எண்ணும் போது இவை எல்லாம் துட்சமே.

0 comments:

Post a Comment