14/09/2014

Leave a Comment

காரமான மிளகாய் வகைகளின் சில ஆரோக்கிய நன்மைகள்...!

அமெரிக்காவில் தோன்றி உலகெங்கும் பல்கிப் பெருகியுள்ள மிளகாய் வகையின் ஆதாரமாக இருப்பது தான் மிளகுகளாகும். பார்த்தாலே காரம் தூக்கும் இந்த வண்ணமயமான தாவரத்திலிருந்து பலரும் விலகியிருந்தாலும், அதன் மிளகுத் தூளை - அதுவும் சூடாக சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உள்ளன என்பது உண்மை!

நார்ச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கலோரி குறைவாக உள்ள தாதுப்பொருட்களை கொண்டிருக்கும் மிளகு, எடை குறைப்புக்கு அவசியம் பயன்படுத்த வேண்டிய சைவ உணவாகும். கோஸ்ட் பெப்பர்களைப் போல, மிளகை சூடாக வறுத்து சாப்பிட்டால், அது எடை குறைப்பு முயற்சியை ஊக்குவிப்பதாக இருக்கும். ஏனெனில், உடலின் செயலூக்கத்தை மேம்படுத்தவும் மற்றும் குறைவான உணவை சாப்பிட்டு, கொழுப்பை எரிக்கவும் இது உதவும்.

மிளகு ஒரு மென்மையான மற்றும் பருவ கால சைவ உணவாகும். மிளகுச் செடியை வளர்ப்பதற்கு அதிகமான வெப்பநிலை தேவைப்படும் மற்றும் அது மெதுவாகவே வளரும். இவற்றை உணவுக்காகவும், வாசனைப் பொருளாகவும் மற்றும் அலங்காரத்திற்காகவும் கூட வளர்க்கிறார்கள்.

இப்போது மிளகாய் வகைகளின் ஆரோக்கிய நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

மூளைக்கு வலியை கொண்டு செல்லக்கூடிய கருவியாக இருப்பது மூலப்பொருள் P என்பதாகும். இதுதான் உடலில் எரிச்சலையும் மற்றும் வலியையும் ட்ரைஜெமினல் நரம்பிற்கு கொடுத்து, உடலை உணரச் செய்து வருகிறது. ட்ரைஜெமினல் நரம்பை (Trigeminal Nerve) அடிப்படையாக கொண்டு தான் நமது உடல், உடற்கூடு மற்றும் சுவாச துவாரம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த இயக்கமும் உள்ளது. ஒருமுறை நரம்பின் நார்களுக்குள் இந்த மூலப்பொருள் P புகுந்து கொண்டால், தலைவலி மற்றும் சைனஸிற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும். காரமான மிளகில் உள்ள கேப்சைசின் என்ற மூலப்பொருள் கூட்டுத் தலைவலி, ஒற்றைத் தலைவலி மற்றும் சைனஸ் தலைவலி ஆகியவற்றிற்கு நிவாரணமாக இருக்கும் என்று மருத்துவ பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

மூட்டுவலியால் அவதிப்படுபவர்களின் இரத்தம் மற்றும் மூட்டுகளை இணைக்கும் சினோவியல் திரவம் ஆகியவற்றில் மூலப்பொருள் P-யின் அளவு அதிகரித்து விடுகிறது. கேப்சைசின் கலந்துள்ள கிரீமை சாப்பிடுவதன் மூலமான இந்த மூலப்பொருள் P உற்பத்தியாவதை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.

திறமையான பாக்டீரியா எதிர்ப்பு குணத்தையும் மற்றும் நீண்ட காலத்திற்கு சைனஸ் (Sinusitis) வருவதை தவிர்க்கும் குணத்தையும் கேப்சைசின் பெற்றுள்ளது. இது ஒரு சுத்தமான மற்றும் இயற்கையான வேதிப்பொருளாக இருப்பதால், நாசித் துவாரங்களின் அடைப்புகளை சுத்தம் செய்யவும் மற்றும் சைனஸ் தொடர்பான அலர்ஜிகளையும் சமாளிக்க உதவும். கேப்சைசினை (Capsaicin) தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால், மூக்கடைப்பை நீண்ட நாட்களுக்கு தவிர்த்திட முடியும்

மிளகில் உள்ள கேப்சாய்சின் எரிச்சலுக்கு எதிராக மிகவும் சிறப்பாக செயல்படும் குணத்தைக் கொண்டுள்ளது. மேலும், காரமான மிளகில் வைட்டமின் சி-யும் நிரம்பியுள்ளது. எனவே, காரமான மிளகை வலியுள்ள மூட்டுகளிலும், திறந்திருக்கும் காயங்களிலும் மற்றும் இரத்த இழப்பைத் நிறுத்துவதற்கும் நேரடியாகப் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் பணியை மிளகு செய்வதால், எரிச்சல் மற்றும் வேதனையை குறைத்திட முடியும். பல் வலி இருந்தால், கயென்னே மிளகை எடுத்து எண்ணெயில் போட்டு வதக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு பருத்தி துணியை கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். பெப்டிக் அல்சர், டிஸ்பெப்ஸிய மற்றும் நியோரோபதிகளில் பல்வேறு நபர்களும் காரமான மிளகை பயன்படுத்துகிறார்கள். சிலி மிளகை வைத்து தயாரிக்கப்படக் கூடிய பிளாஸ்டர்கள் மற்றும் மாவு கட்டுகள் உள்ளன. உங்களுக்கு சாதாரண ஜலதோஷமோ, மூச்சுக்குழாய் அழற்சியோ வந்திருந்தால், சிறிதளவு மிளகை எடுத்து சிக்கன் சூப்பில் போட்டு சாப்பிடுங்கள்.

டியூக் பல்கலைக்கழகத்தில் அண்மையில் வாய்வு பிரச்சனைகள் பற்றி செய்யப்பட்ட ஒரு ஆய்வில், கேப்சைசினுக்கு ஒரு குறிப்பிட்ட வகையான குடல்களின் பிரச்சனைகளை சரிசெய்யும் குணம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எரிச்சலூட்டும் குடல் நோய் (Inflammatory Bowel Disease) உண்டாக்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நரம்பு செல் தேவையாக இருப்பதை டியூக் பல்கலைக்கழக குழுவினர் கண்டறிந்துள்ளனர். எரிச்சலின் காரணமாக அடிவயிற்றில் ஏற்படும் வலிகள், அசௌகரியங்கள் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றின் ஒட்டுமொத்த பெயராக எரிச்சலூட்டும் குடல் நோய் உள்ளது.

புற்றுநோய்க்கான செல்களை தானாக அழிந்து விடுமாறு தூண்டும் குணம் கேப்சைசினுக்கு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. புரோஸ்டேட் புற்றுநோய் செல்களில் சுமார் 80 சதவீதத்தையும், புரோஸ்டேட் புற்றுநோய் கட்டிகளையும் கேப்சைசின் கொண்டு குணப்படுத்த முடியும். 5 இல் 1 பகுதியினர் இந்த நோய்க்கு நிவாரணம் பெறமாலேயே இறந்து விடுகின்றனர். மேலும், புரோஸ்டேட் புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கும் பொருட்டாக, கேப்சைசின் மாத்திரைகளை பயன்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று அறிவியல் ஆய்வாளர்கள் சொல்லுகின்றனர்.

ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் வலியை குணப்படுத்தவும் மற்றும் டையாபடிக் நியூரோபதிக்கு நிவாரணம் தரவும் மிதவெப்ப மண்டலத்தைச் சேர்ந்த ஒரு மிளகு வகை உதவுகிறது. மூளைக்கு வலியை கொண்டு செல்லக்கூடிய நியூரோபெப்டைட் என்ற மூலப்பொருள் P-யை தடுக்கக் கூடியதாக அறியப்படுகிறது கேப்சைசின். நரம்புகள் புடைத்துக் கொள்ளவும் கூட இந்த மூலப்பொருள் P காரணமாக இருப்பதால், அதன் காரணமாக தலைவலியும், சைனஸ் அறிகுறிகளும் வரலாம். கூட்டு தலைவலிகள், ஒற்றைத் தலைவலி மற்றும் சைனஸ் தலைவலிகளை கேப்சைசின் மிகச்சரியாக குறைத்து விடுவதை ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.

எரிச்சலுடன் தொடர்புடைய குடல் நோய்க்கு கேப்சைசின் நிவாரணமளிப்பதை டியூக் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. ஹெச்.பைலோரி போன்ற பாக்டீரியாக்களையும் கேப்சைசின் அழித்து விடுவதால், வயிற்று புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகிறது.

காரமான மிளகுகள் உடலின் இயக்கத்தை எளிதில் தூண்டி விடுவதால், கொழுப்புகளை எரிக்கும் தெர்மோஜெனசிஸ் ஏற்படுகிறது என்று 'தி ஜர்னல் ஆஃப் பையலஜிகல் கெமிஸ்ட்ரி' என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரமான மிளகில் உள்ள கேப்சைசின் என்ற வேதிப்பொருள் நமது உடலுக்குள் இருக்கும் கலோரிகளை எரித்திட உதவுகிறது. சிறிதளவு முட்டையுடன் மிளகுத் தூளை சேர்த்து சாப்பிட்டால் நமது உடலின் இயக்கத்தை சுவையுடன் தூண்டிட முடியும்.

கொழுப்புகளின் அளவு, ட்ரைகிளிசரைட்கள் மற்றும் பிளாட்டலெட் அக்ரகேஷன் போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்முடைய இதயத்தைப் பாதுகாக்கும் பணியை கேப்சைசின் செய்கிறது. இரத்தம் உறைவதற்கு அவசியமாக தேவைப்படும் நார்களை நம்முடைய உடல் பிரிப்பதற்கும் கேப்சைசின் உதவுகிறது. அது மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள பல கலாச்சாரங்களில், மிளகை தங்களுடைய உணவில் சாதாரணமாக பயன்படுத்தி வருபவர்கள் யாருக்கும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வரவில்லை என்பது உண்மை. இவ்வாறு மிளகை பயன்படுத்தாக கலாச்சாரங்கள் உள்ள இடங்களில் இதய நோய் சகஜமாக இருப்பதும் உண்மை!

தோட்டங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கப் பயன்படும் பூச்சி விரட்டியாகவும் காரமான மிளகுகள் பயன்படுகின்றன. இதன் முக்கியமான மூலப்பொருளாக கேப்சைசின் உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரத்துடனும் மற்றும் அமெரிக்க வேளாண்மைத் துறையினரும் கேப்சைசின்னை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த அனுமதிக்கின்றனர். 1962-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் கேப்சைசின் பொருள், நாய்களின் தாக்குதலுக்கு எதிர்ப்பு விடுப்பதாக இருந்தது.

புறஊதாக்கதிர்களின் மோசமான தாக்குதல்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கும் பணியை இனிப்பு மிளகுகள் செய்கின்றன. புறஊதாக்கதிர்கள் தோலின் தளத்தை பாதித்து, எரிச்சலைத் தூண்டுகின்றன. மேலும், மூப்படைவதையும், தோல் புற்றுநோய் வருவதையும் தூண்டுகின்றன.

இனிப்பு மற்றும் காரமான மிளகுகள் ஆகிய இரண்டிலுமே வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் பி6, கோலைன் மற்றும் போலியோட் ஆகியவை நிரம்பியுள்ளன. இவற்றில் பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளதால், நார்ச்சத்துக்களை அள்ளித் தரும் ஆதாரங்களாக இவை உள்ளன.

ப்ரீ-ராடிக்கல்களை எதிர்க்கக் கூடிய மற்றும் இதயம், புற்றுநோய் மற்றும் நியூரோ டிஜெனரேட்டிவ் நோய்களுக்கான வாய்ப்பை குறைக்கக் கூடிய பைட்டோ கெமிக்கல்களை இனிப்பு மற்றும் காரமான மிளகுகள் கொண்டுள்ளன.

காரமான உணவினால் வாய்வு தொல்லை ஏற்படும் என்ற எண்ணத்திற்கு தடை போடுங்கள்; சில வகையான வாய்வு பிரச்சனைகளுக்கு தகுந்த நிவாரணமாக காரமான மிளகுகள் உள்ளன. கேப்சைசின் அஜீரணத்தை ஏற்படுத்தும் ஹெ.பைலோரியை அழித்து விடுகிறது. இது போன்ற நேரங்களில், பாதிக்கப்பட்ட வயிற்றை பாதுகாக்கும் வகையில் சாறுகளை உற்பத்தி செய்யவும் கார மிளகு தூண்டும்.

0 comments:

Post a Comment