19/03/2014

Leave a Comment

ஆண்கள் என்றும் இளமையாக இருக்க சூப்பர் 10 டிப்ஸ்..!



பொதுவாக முதுமைத் தோற்றத்தை வெளிப்படுத்துபவையான சரும சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் போன்றவை பெண்களுக்கு நன்கு வெளிப்படையாக தெரியும். ஆனால், ஆண்களுக்கு தெரிய சில நாட்கள் ஆகும். அதுமட்டுமல்லாமல் பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறுவார்கள்.

இப்போது இளமையைத் தக்க வைப்பதற்கு, ஆண்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் என்னவென்று பார்ப்போம்.

01. புகைத்தலை உடன் நிறுத்துங்கள்

இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது புகைப்பிடித்தலை நிறுத்துவது தான். ஏனெனில் புகைப்பிடித்தால், சருமத்தில் சுருக்கங்கள் விரைவில் வருவதோடு, சரும வறட்சியை உண்டாக்கும். மேலும் புகைப்பிடித்தலை நிறுத்துவதால், உடலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஆண்மைத் தன்மை குறைபாடு ஏற்படுவதிலிருந்து விடுபடலாம்.

02. ஷேவிங் செய்யும் போது சில செயல்கள்

ஆண்கள் தொடர்ச்சியாக ஷேவிங் செய்வதால், சருமமானது மிகவும் கடினமாவதோடு, வறட்சி மற்றும் ஒருவித சுருக்கமானது ஏற்படும். ஆகவே எப்போதும் ஷேவிங் செய்யும் போது வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவதோடு, ஷேவிங் செய்த பின்னர் ஷேவிங் லோசனைப் பயன்படுத்த வேண்டும்.

03. திராட்சை ஜூஸ்

ஆண்களின் இளமையானது நீடிக்க வேண்டுமெனில், தினமும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த திராட்சை பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், சருமத்தில் நெகிழ்வுத்தன்னை நீள்வதோடு, இளமை தோற்றத்தை தக்க வைக்கலாம்.

04. அல்க்ககோல் தவிர்த்தல்

முதுமைத் தோற்றத்தை தடுப்பதற்கு ஒரு சிறந்த வழியென்றால், ஆல்கஹால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆல்கஹால் இரத்த நாளங்களை அளவுக்கு அதிகமாக விரிவடையச் செய்து, சரும சுருக்கத்தை ஏற்படுத்தும்.

05. உடற்பயிற்சி

முதுமைத் தோற்றமானது முகத்தில் மட்டும் வெளிப்படுவதில்லை, தசைகளின் மூலம் வெளிப்படும். எனவே தினமும் உடற்பயிற்சியை செய்து வந்தால், தசைகளானது இறுக்கமடைந்து, இளமையான தோற்றத்தைத் தரும்.

06. பால் கொண்டு முகம் கழுவுதல்

வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும், பாலை கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறுவதோடு, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும். அதிலும் இந்த முறையை தினமும் இரண்டு முறை செய்வது நல்லது.

07. மசாச்

முதுமையை தடுக்க வேண்டுமெனில், உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டும். இத்தகைய இரத்த ஓட்டத்தை மசாஜ் செய்வதன் மூலம் அதிகப்படுத்தலாம். இதனால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த ஓட்டமானது சீராக சென்று, இளமையைத் தக்க வைக்கும்.

08. காய்கறிகள்

உணவில் காய்கறிகளின் அளவை அதிகரிக்க வேண்டும். அதிலும் பசலைக் கீரை அல்லது பீன்ஸ் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்தால், சுருக்கங்கள் ஏற்படாமல் இருப்பதோடு, சருமமும் பொலிவோடு இளமையுடன் காணப்படும்.

09. சன் ஸ்கிறீன் க்றீம்கள்

முதுமையை தக்க வைக்க வேண்டுமெனில், அதிகமாக வெயிலில் சுற்றக்கூடாது. ஒருவேளை வெயிலில் செல்வதாக இருந்தால், சன் ஸ்கிரீனை தவறாமல் பயன்படுத்தி செல்ல வேண்டும். ஏனெனில் சூரியக்கதிர்கள் சருமத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, சுருக்கங்களை எளிதில் உண்டாக்கிவிடும்.

10. தண்ணீர்

தினமும் குறைந்தது 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் வறட்சி நீங்கி, உடலும் ஆரோக்கியமாக இளமையுடன் காணப்படும்.

0 comments:

Post a Comment