திருப்பூரில் நடந்த விழாவில் நடிகர் சிவக்குமார் பேசியதாவது:–
உலகிற்கு நம்மை அறிமுகப்படுத்திய பெற்றோர்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.
மகாபாரதத்தில் அர்ஜுனனின் மகனான அபிமன்யு, போர் களத்தில் துரோணர் வகுத்த பத்மவியூகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று அபாரமாக போரிட்டான். பத்ம வியூகத்துக்கு உள்ளே சென்ற அவனால், மீண்டும் வெளியே வரமுடிய வில்லை.
இதற்கு காரணம், அபிமன்யுவின் தாயார் சுபத்திரை கருவுற்று இருந்த போது பத்ம வியூகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே செல்வது எப்படி என்று அர்சுனன் கூறிக்கொண்டு இருந்ததை கருவில் இருந்த அபிமன்யு கேட்டுக்கொண்டு இருந்தான்.
ஆனால் வெளியே வருவது பற்றி கூறிய போது சுபத்திரை தூங்கி விட்டாள். கருவில் இருந்த குழந்தையும் தூங்கி விட்டது. அதனால் அபிமன்யுவுக்கு பத்மவியூகத்தை விட்டு வெளியே வர தெரிய வில்லை.
அறிவியல் அறிஞர்கள் கூட, தாயின் செய்கைகள், கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் என்கினறனர். எனவே, கருவுற்ற தாய்மார்கள் இனிய இசையையும், நல்ல தகவல்களையும் கேட்க வேண்டும்.
இவ்வாறு நடிகர் சிவக்குமார் பேசினார்.
0 comments:
Post a Comment