இயற்கை மருத்துவ குணம் நிறைந்த தாமரை தண்டு
தாமரை பல ஆயிரம் வருடங்களாக இருக்கும் தாவரம்.
தாமரை விதைகள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் கூட முளைக்கும் தன்மை உடையவை.
தாமரை தண்டில் மா சத்து, புரதம், கனியுப்புகள் அதோடு வேதிய பொருட்களும் காணப்படுகின்றதாம்.
தாமரை தண்டு நீரினுள் இருப்பதனால் குளிர்மையானதாக இருக்கும்.
இதை சீனர்கள் தமது ஆயுள் காலத்தினை அதிகரிக்கும் காய்கறிகளில் இதுவே மிக அதிகமாக செல்வாக்கு செலுத்துவதாக நம்புகின்றனர்.
இதனால், இவர்கள் தாமரை தண்டை பல வகையாக சமைத்து உண்ணுவார்கள்.
ஆய்வாளர்களும் இது பல விதமான நோய்களிலிருந்து காத்து ஆயுளை அதிகரிக்க செய்கிறது என கூறுகின்றனர்.
வெள்ளை பூண்டு, இஞ்சி, மிளகாய் ஆகியவற்றை கலந்து எண்ணையில் பொறித்து தாமரை தண்டை சாப்பிடலாம்.
0 comments:
Post a Comment