24/03/2014

Leave a Comment

பெண்களுக்கு ஏற்படும் Cervical Cancer அண்டவிடாமல் பாதுகாக்க..!



பெண்களுக்கு ஏற்படும் Cervical Cancer அண்டவிடாமல் பாதுகாக்கிறது முலாம் பழம்.

முலாம் பழம் கோடை காலத்தில் மிக எளி தாக கிடைக்கக் கூடியது. இது அதிகப்படியான சத்துக்கள் அடங்கியுள்ள ஒரு நீர்ப்பழம். பல உடல் உபாதைகளுக்கும் அருமருந்தாக இருக்கிறது.

முலாம் பழத்தில் fibre என்று சொல்லக்கூடிய நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளதால் மலசிக்கலை போக்குகிறது.

இதில் பொட்டாசியம் உள்ளதால் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குஇரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் இதய நோய், புற்று நோய் வராமல்பாதுகாக்கிறது. மிக முக்கியமாக Stroke எனப்படும் பக்கவாதத்தை வராமல் பாதுகாக்கிறது.

இது நீர்ப்பழம் என்பதால் இதை உண்பதால் உடம்பின் உஷ்ணத்தைகுறைக்கிறது.

அல்சர், சிறுநீர் சம்பந்தமான நோய், உணவு செரிப்புதன்மை குறைதல் போன்ற பிரச்சினைகள் போக்குறதர்க்கும் இது உபயோகமாகிறது.

இதில் Folic Acid உள்ளதால் கர்ப்பமான பெண்கள் சாப்பிட வேண்டியஅருமருந்து இது.

இந்த பழம் கிட்னியில் உள்ள கல்லை கரைக்கக்கூடியது. மேலும் முதுமைகாலத்தில் ஏற்ப்படும் எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.

பெண்களுக்கு ஏற்படும் Cervical Cancer மற்றும் osteoporosis எனப்படும் நோய்களை அண்டவிடாமல் பாதுகாக்கிறது.

இந்த பழத்தினை உண்டால் உடல் உள்ளுறுப்புகள் பாதுகாப்பாக இருப்பதோடு அழகும் மேம்படும். இதில் அதிகமாக வைட்டமின் ஏ மற்றும்வைட்டமின் சி உள்ளதால் சருமம் ஆரோக்யமாகவும், தோல் மினு மினுப்புகூடும்.

இப்பழத்தில் புரதம், சர்க்கரைச் சத்து, இரும்பு, கால்ஷியம், வைட்டமின் "ஏ', "சி' என்று பலவிதச் சத்துகள் இதில் அடங்கியுள்ளன. முலாம்பழத்தைக் கரைத்து அதில் மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை அரைத்து லேசாய் உப்பு கலந்து குடித்தால் வயிறு சுத்தமாகிவிடும்.

உடல் சோம்பலை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது. உடல் எடை குறைக்க இது உதவுகிறது

முலாம் பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்:

முலாம் பழம் (நறுக்கியது) – ஒரு கப்,
தேன் – 3 டீஸ்பூன்,
ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

• முலாம் பழத்தை நன்றாக அடித்துக் கொண்டு, அதனுடன், தேன், ஏலக்காய்ப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.

0 comments:

Post a Comment