17/08/2014

Leave a Comment

வீட்டில் எறும்புகள் வருவதைத் தடுக்கலாம் - இதைப்படிங்க...!

மசாலாப் பொருட்கள் மசாலாப் பொருட்களான மிளகு தூள், மஞ்சள் தூள், பட்டைத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை எறும்புகள் வரும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.

வெள்ளரிக்காய் எறும்புகளை கொல்வதற்கு உதவும் பொருட்களில் ஒன்று தான் வெள்ளரிக்காய். அதற்கு வெள்ளரிக்காயை எறும்புகள் வரும் இடத்தில் வைத்தால், எறும்புகள் வராமல் தடுக்கலாம்.

டால்கம் பவுடர் இது மிகவும் சிறப்பான ஒரு எறும்புக் கொல்லிப் பொருள். அதற்கு எறும்புகள் உள்ள இடத்தில் டால்கம் பவுடரை தூவி விட வேண்டும்.

கிராம்பு சர்க்கரை டப்பாவில் 1-2 கிராம்புகளை போட்டு வைத்தால், எறும்புகள் சர்க்கரை டப்பாவில் வராமல் இருக்கும்

பூண்டு பூண்டுகளை தட்டி, அதனை எறும்புகள் உள்ள இடத்தில் வைத்தால், நொடியில் எறும்புகள் அனைத்தும் மாயமாய் மறைந்துவிடும்.

எலுமிச்சை சாறு எறும்புகள் மொய்க்கும் இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றினால், இனிமேல் எறும்புகள் வராமல் இருக்கும். அதிலும் வீட்டை மாப் கொண்டு துடைக்கும் போது, எலுமிச்சை சாறு கலந்த நீரில் நனைத்து துடைத்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம் 

0 comments:

Post a Comment