17/08/2014

Leave a Comment

சரும பராமரிப்பிற்கு உதவும் இயற்கை பொருட்கள் - இதோ உங்களுக்காக..!

பெண்கள் எப்போதுமே தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இயற்கை பொருட்களை கொண்டு, நம் சருமத்தை பாதுகாக்க முடியும். அதற்காக நமது முன்னோர்கள் பல வழிமுறைகளை பின்பற்றியுள்ளனர். இயற்கை பொருட்களை கொண்டு, பெண்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் சருமத்தை பாதுகாக்கலாம்.

நெல்லிக்காய்:- வைட்டமின் சி சத்து உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். பொடுகு மற்றும் இதர முடி சம்பந்தமான பிரச்னைகளை நீக்க முடியும். வைட்டமின் ''சி'' உள்ள எண்ணெயை வாங்கி பயன்படுத்தும் போது தலைமுடிகளில், சிறந்த மாற்றங்களை நம்மால் காண முடியும்.

கடலைமாவு:- முகத்தில் உள்ள இறந்த திசுக்களை உரித்து எடுக்க இந்திய பெண்கள் கடலை மாவு பயன்படுத்துகிறார்கள். கடலைமாவுடன் பால் அல்லது கிரீம் ஆகியவற்றை சேர்த்து சோப் போல் பயன்படுத்தலாம். மேலும், கடலைமாவில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து பேஸ் பேக்காவும் பயன்படுத்தலாம். இந்த பேஸ் பேக்கால் சரும ஈரப்பதத்தை காக்கிறது.

ஆலிவ் ஆயில்:- ஆலிவ் ஆயிலைக்கொண்டு மசாஜ் செய்து வந்தால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்கலாம். இதனால் சருமம் நன்கு ஈரப் பசையுடன் வறட்சியடையாமல் இருக்கும். இதனால் முகம் நீண்ட நேரத்திற்கு பொலிவுடன் காணப்படும்.

மஞ்சள்:- மஞ்சள் கிருமி நாசனிகளில் ஒன்றாகும். சரும படை, தேமல், தொற்று, எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.

ஆப்பிள்:- ஆப்பிள் முகத்தில் உள்ள பிம்பிள்ஸ் மற்றும் கொப்புளங்கள், புண் போன்றவை நீக்கும். அதற்கு அதனை மாஸ்க் போல் செய்ய வேண்டும். அதற்கு ஆப்பிள் துண்டுகளை முகத்தில் தேய்க்க வேண்டும். இல்லையென்றால், 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு பேஸ்ட் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். பிறகு 10 முதல் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகமானது மென்மையாக இருக்கும்.

குங்குமப்பூ:- குங்குமப்பூ வறண்ட சருமம் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி சரும நிறத்தை மேம்படுத்தி நல்ல வெளிர் நிறத்திற்கு, தோலை கொண்டு வரவும் உதவுகிறது. பாலில் குங்குமப்பூ சேர்த்து கலந்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கருமை நிறம் படிப்படியாக மறையும். விரைவில் முகம் வெண்மை நிறத்தை அடையும்.

மலர்ந்த ரோஜா:- புதிதாக மலர்ந்த ரோஜா இதழ்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரோஸ் தண்ணீரை கரு வளையங்களை போக்கவும், டோனராகவும் பயன்படுத்தலாம். இதை பல பெண்கள் அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை முகத்திலிருந்து நீக்க பயன்படுத்துகிறார்கள். விளக்கெண்ணெய்யை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால் நீர்சத்து இல்லாமல் காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வரலாம்.

விளக்கெண்ணெய்:- சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து இளமை தோற்றத்தில் காணப்படும். சருமத்தில் சுருக்கங்கள் அண்டாது. மேற்கண்ட பொருட்கள் அனைத்து வாங்கிக்கொண்டு வீட்டிலேயே சிகிச்சை மேற்கொள்ளலாம். இதற்கு உதவி தேவையில்லை, நீங்களே செய்ய முடியும். இவை அனைத்தும் இயற்கை பொருட்கள். இந்த சிகிச்சை செய்தால், 1 மாத காலத்தில் நிச்சயமாக பலன் கிடைக்கும். பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்பில்லை. குறைவான செலவிலேயே சருமத்தை மெருகூட்டலாம்.

0 comments:

Post a Comment