21/08/2014

Leave a Comment

எண்ணெய் தேய்ச்சா கூந்தல் அடர்த்தியா வளருமா..?

* வாரம் ஒருமுறை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்பு சீயக்காய் போட்டு நன்றாக தேய்த்து குளிக்கவும்.

* தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து, அதனுடம் தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து 30 நிமிடம் ஊற வைத்த பின் கூந்தலை கழுவவும்.  இவ்வாறு வாரம் இருமுறை செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு வாரமும்,தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும் ஆலிவ் எண்ணையையும் சம அளவில் எடுத்து தடவி மசாஜ் செய்து கொள்ளவும். அடுத்த நாள் எப்பொழுதும் போல் தலைக்கு குளிக்க வேண்டும். (கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்யவேண்டும். பலன் கிடைக்கும்!!!!!!!!!!!!)

* தினமும் தலையை நன்றாக வாரி பின்னிக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போதும், வேலைக்கு செல்லும் போது மட்டும் தலையை உங்கள் விருப்பம் போல் வாரி கொள்ளலாம். ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் தினமும் எண்ணெய் வைத்து பின்னல் போட்டு கொள்ள வேண்டும். இந்த முறைகளை தொடர்ந்து செய்து வந்தால் கூந்தல் உதிர்வது நின்று நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

0 comments:

Post a Comment