22/08/2014

Leave a Comment

டிடி ஊசி எதற்காக போட வேண்டும் - இதைப்படிங்க..!

உடம்பில் ஒரு கீறல் விழுந்தாலும் உடனே ஓடி போய் ஏதாவது ஒரு டிடி ஊசி போடுவோம். இந்த ஊசி எதற்கு, இது எத்தனை வருடத்திற்கு ஒரு முறை செலுத்த வேன்டும் என்பது உங்களில் பலருக்கும் தெரியாது.

முதலில் டெட்டனஸ் ஊசி இரண்டு வகைப்படும். ஒன்று – dtap (Diphtheria and Pertussis) இன்னும் ஒரு வகை Tdap (Tetanus Boosters). முதலில் கூறிய dtap வகை குழந்தைகளுக்கு பிறந்த 2 மாதம் / 4 மாதம் / 6 மாதம் / 12 – 18 மாதம் / 4 – 6 வயது வரை இந்த வகை ஊசிகளை உங்கள் குழந்தைக்கு தவறாமல் போட்டால் Clostridium Tetani also known as Lockjaw என்னும் நோய் வராது.

10 – 12 வயது வந்தவுடன் tdap (Tetanus Boosters) வகை ஊசிகளை 10 வருடத்திர்க்கு ஒரு முறை செலுத்தினால் இந்த வகை பாக்டீரியாக்கள் உடம்பில் வராது. இந்த ஊசி போட்டு 5 வருடம் ஆன பின்னரும் ஒரு காயம் ஏற்பட்டு திறந்த புண் இருக்குமாயின் இன்னொரு முறை போடுவது நல்லது.

ஆனால் அப்படி இல்லையெனில் 8-10 வருடத்திற்க்கு போட்டால் மிகவும் நல்லது. பெரியவர்களுக்கு டெட்டனஸ் ஒவ்வாமையாகலாம் என்பதையும் அறிந்து இந்த ஊசியை செலுத்த வேண்டும்.. கடந்த பத்து வருடத்தில் ஒரு முறை கூட டெட்டனஸ் பூஸ்ட்டர் போடவில்லை எனில் ஒரு முறை செலுத்துங்கள், இந்த வேக்சின் நல்லது.

0 comments:

Post a Comment