04/09/2014

Leave a Comment

தொப்பை குறைய உதவும் ஒர்க்அவுட் - சொல்லப்போறேன் கேளுங்க..!

தொப்பை குறைய நிறைய பயிற்சிகள் இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனை தரக்கூடியவை.  ஆனால் அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி பலன் தராது. இந்த பயிற்சி செய்து மிகவும் எளிமையானது. வீட்டில் இருந்தபடியே இந்த பயிற்சியை செய்யலாம்.

தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. மேலும் இந்த பயிற்சி கால் முட்டிகளுக்கும், கைகளுக்கு நல்ல வலிமையைத்தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். கால்களை ஒரு அடி அகலமாக வைக்கவும். கைகயை தலையின் பின்புறமாக கொண்டு சென்று இரு கை விரல்களையும் இணைத்து கொள்ளவும்.

இப்போது முன்புறமாக குனிந்து வலது கைமுட்டியால் இடது கால் முட்டியை தொட முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் அனைவருக்கும் இவ்வாறு தொட வராது. பயிற்சியை தொடர்ந்து செய்ய செய்ய தொட முடியும். இப்போது இடது கைமுட்டியால் வலது கால் முட்டியை தொட வேண்டும்.

ஆரம்பத்தில் மெதுவாகவும், ஒரு வாரம் பழகிய பின்னர் வேகமாகவும் செய்ய வேண்டும். 15 முறை செய்த பின்னர் 5 விநாடிகள் ஓய்வு எடுத்து பின் மறுபடியும் பயிற்சியை செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் 20 நிமிடம் செய்ய வேண்டும்.

நன்கு பழகிய பின்னர் எண்ணிக்கையின் அளவையும், நேரத்தையும் கூட்டிக் கொள்ளலாம்.  இந்த பயிற்சியை செய்ய ஆரம்பித்த ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

கால் முட்டிவலி உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி நல்ல பலனை தரும். முகுது பகுதியில் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள், முகுது வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.

0 comments:

Post a Comment