பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறைந்திடும் என்பது வாழ்க்கையில் ஒவ்வொருவருமே உணர்ந்திருக்கும் வாழ்வியல் யதார்த்தம். அதாவது மானம், கல்வி, அறிவு, தவம், தாளாண்மை, பலம், வன்மை, தானம், முயற்சி, காதல் என்பவையே பசியினால் பறந்திடும் பத்துமாகும். ஆனால் பசிக்கு அளவுடன் புசிக்காதுவிடின் பத்துடன் பதினொன்றாக அரிய உயிரையே பறிகொடுக்கும் பரிதாபம் நமக்கு ஏற்படும்.மனித வாழ்விலே சந்தோஷம் என்றாலே இனிப்பு என்பதே பொருள். ஆனால் அளவுக்கு மீறினால் அமர்தமும் நஞ்சு என்பது ஆன்றோர் வாக்கு. அவ்வாறே இன்மையைக் கொடுக்கும் இந்த இனிப்பு நமது இரத்தத்தில் அதிகமாகும்போது அதுவே நமது உயிரைக் குடிக்கும் விஷமாக மாறுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருந்தால் தான் நமது உடலும் ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.
நம் வயிற்றுப் பகுதியில், கல்லீரலுக்கு சற்று கீழே கணையம் எனப்படும் சுரப்பி காணப்படுகிறது. இதனால் சுரக்கப்படும் இன்சுலின் (Insulin) என்னும் சுரப்பினாலேயே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலையில் பேணப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் மாச்சத்து (Carbohydrate) அதிகமாகும் போது அது குளுக்கோசாக மாறி இரத்தத்தில் கலக்கும்போது இன்சுலினால் சர்க்கரை சமநிலை பேணப்பட மிகுதி சர்க்கரை நமது உடலில் கிளைக்கோசனாக (Glycogen) சேமித்து வைக்கப்படுகிறது. பிறகு உடலுக்குத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இக்கிளைக்கோசன் குளுக்கோசாக மாறி சக்தியைத் தருகிறது. இந்தப் பணி சரிவர நடைபெற வேண்டுமென்றால் நமது கல்லீரலும் எந்தப் பாதிப்பும் இல்லாது நன்கு வேலை செய்ய வேண்டும்.
நீரிழிவு நோய் இன்சுலின் அளவு குறைவதாலும் (Insulin Deficiency) கணையம், கல்லீரல் போன்றவை நோய்க்குட்பட்டு இருக்கும் நிலையில் சுரந்த இன்சுலின் சரிவர உபயோகப்படுத்தப் படாமல் இருப்பதாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி Hyperglycemia என்ற நிலை ஏற்படுகிறது. இதையே நாம் சர்க்கரைநோய் அல்லது நீரிழிவு நோய் என்கிறோம்.
நீரிழிவு நோயின் அறிகுறிகள்
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Polyaria)
2. அடிக்கடி சிறுநீர் கழித்தலால் தாகம் அதிகரித்தல் (Excesssive Thirst)
3. களைப்புத் தன்மை (Weakness)
4. எடை குறைவு (Weight Loss)
5. பசி அதிகரித்தல் (Increased appetite)
6. நாவறட்சி (Dry mouth)
7. காயம் ஏற்பட்டால் விரைவில் ஆறாமை.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள்
ரெட்டினா பகுதி பாதிப்படைவதனால் கண் பார்வையை இழக்கும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு டயபடிக் ரெட்டினோபதி (Diabetic Retinopathy) என்று பெயர். அதிகளவு சிறுநீர் கழிப்பதனாலும் சிறுநீரகங்களின் அதிகளவு செயற்பாட்டின் காரணமாகவும் சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன. இதற்கு டயபடிக் நெவ்ரோபதி (Diabetic Nepropathy) என்று பெயர். இரத்தக்குழாய்கள் சுருக்கமடைவதினால் கை, கால் என்பனவற்றின் இழையங்களுக்குத் தேவையான போஷாக்குச் சரிவரக் கிடைக்கப் பெறாததினால் கலங்களுக்குத் தேவையான போஷாக்கின்மையால் கலங்கள் இறக்கத் தொடங்குகின்றன. இதன் அறிகுறியாக பாதிக்கப்பட்ட பகுதிகள் கறுத்தும் உணர்ச்சியற்றும் போகின்றன.
இதுவே டயபடிக் கங்கரின் (Diabetic Gangrene) என்றழைக்கப்படுகிறது. இதனால் நாம் பாதிப்பேற்படும் உறுப்பை இழக்க வேண்டியும் வரலாம். இது மட்டுமின்றி மாரடைப்பு, இதய நோய்கள் என்பனவும் ஏற்படவும் வாய்ப்புண்டு.
அத்துடன் சர்க்கரை வியாதி கை, கால் நரம்புகள், எலும்புகளையும் பாதிக்கின்றன. இது டயபடிக் நியூரோபதி (Diabetic Neuropathy) எனப்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைப்பிடிப்பு, வலி, எரிச்சல் மற்றும் மூட்டுவலி போன்ற அறிகுறிகள் தெரியும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் மாத்திரைகளை எடுத்த பின்னர் உணவு உட்கொள்ளத் தவறுவதும் அதாவது உண்பதில் நேரந்தவறாமை கடைப்பிடிக்கப்படாமையும், பயத்தினால் சர்க்கரையின் அளவை அளவிற்கு மீறிக் குறைப்பதும் கூட ஆபத்தை விளைவிக்கும். சர்க்கரையின் அளவு குறைந்தால் (Low Blood Sugar) மயக்கம், உடல் வியர்த்தல் போன்றவை ஏற்படும்.
இந்நிலையைத் தவிர்க்க நீரிழிவு நோயாளிகள் எப்போதும் சர்க்கரையோ அன்றி இனிப்புகள் எதாவதோ கைவசம் வைத்திருத்தல் அவசியம். சர்க்கரைக் குறைவை கவனித்து நிவர்த்தி செய்யவிடின் மேலும் குறைந்து கோமா (Coma) நிலை ஏற்படும் அபாயம் உண்டு.
நமது உடலில் சர்க்கரை அதிகமானாலும் சரி, குறைந்தாலும் சரி பாதிப்பு நமக்குத்தான். எனவே நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூலிகைகள், உணவு முறைகள், உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக மேற்கொள்வதன் மூலம் எந்தவிதமான பின்விளைவுகளும் இன்றி நன்றாக வாழலாம் என்பது உறுதி.
தேவையான மூலிகைகள்
வேப்பிலை, வில்வம், அத்தியிலை, முருங்கையிலை, அருகம்புல், நெல்லி, நாவல், சிறுகுறிஞ்சான், கீழாநெல்லி, மாவிலை, வெற்றிலை எல்லா இலைகளையும் நன்கு உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். இதிலிருந்து இரண்டு தேக்கரண்டி தூள் எடுத்து நீரில் கலந்து காலை, மாலை இரவு உணவிற்கு முன்பாக உண்டுவர பலன் கிடைப்பது உறுதி.
உணவு முறைகள்
தானியங்கள், காய்கள், கொட்டை வகைகள், கீரைகள், பழங்கள் ஆகியவை உணவில் அதிகம் இடம் பெற வேண்டும். காய்களில் வெண்டை, வெள்ளரி, புடலங்காய், சுரைக்காய், கொத்தமல்லியிலை, வெங்காயம், முள்ளங்கி, பாகற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கூடியளவு அவித்துச் சாப்பிடுவதைத் தவிர்த்து பச்சையாக உண்பதே சாலச்சிறந்தது. ஆரம்பத்தில் இயற்கை உணவுகளை உண்பது சற்றுக் கடினமாக இருந்தாலும் தொடர்ந்து பின்பற்றும் போது சர்க்கரை வியாதி விரைவில் குணமடைய வாய்ப்புண்டு. இயற்கையுணவுகளினால் இன்சுலின் இயற்கையாக உடலில் அதிகம் உற்பத்தியாகும். மேலும் சர்க்கரை வியாதியினால் உண்டாகும் பக்க விளைவுகளான பார்வைக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, இருதயப் பாதிப்பு, இரத்தக் குழாய்களில் பாதிப்பு, நரம்பு எலும்புகளில் பாதிப்பு என்பவையும் தடுக்கப்படும்.
சாதாரணமாகவே மனிதனாகப் பிறந்த எவரும் கட்டுப்பாடுடன் வாழ்ந்தால் என்றும் நலமாக வாழலாம். கட்டுப்பாடு என்பது உணவில், உடலில், உணர்வில் என்று மூன்றிலும் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
1. அதாவது முதலில் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளல் வேண்டும். அதாவது சுயக்கட்டுப்பாடு (Self Control). தமக்கு வந்திருக்கும் நோயைப் பற்றியே சிந்தித்துப் பயந்து இன்னும் நோயை அதிகரித்துக் கொள்ளாது இது நோயே கிடையாது, இதை என்னால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என உணர்தல் வேண்டும். இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பும் தவிர்க்கப்படும்.
2. தம்மை உணரப் பழகிக் கொள்ள வேண்டும். நம்மை உணர்தல் என்பது நம் அன்றாடப் பழக்க வழக்கங்களில் ஒரு முறைப்பாட்டை உண்டாக்கிக் கொள்ளல் என்று பொருள். அதாவது Systematic எதை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்பது. இதில் மருந்து பாவிக்கும் முறைகள், உணவுமுறைகள் என்பன அடங்கும்.
3. தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளல்.
4. மனம் ஒரு குரங்கு. எனவே அதை அடக்கியாளப் பழகுதல், அதாவது எதையும் சாதிக்கும் ஆர்வம் நம்மை நாம் தன்னம்பிக்கைக்குள் தோய்ப்பதிலிருந்தே ஆரம்பிக்கின்றது. தன்னம்பிக்கையே எந்த ஒரு வெற்றிக்கும் உரமாக அமைகிறது. இதுவே நோயை வெல்வதற்குரிய சக்தியை வழங்குகிறது.
5. மனவுறுதி என்பது அதாவது எதையும் தாங்கக் கூடிய இதயம். அது இயற்கையாகவே நம்மிடத்தில் அமைத்துக் கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
இவையே நாம் நீரிழிவு நோயைக் கொண்டிருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய பயிற்சிகள் ஆகும். இத்தகு பயிற்சிகளை மேற்கொள்வதனாலேயே நாம் இந்த நோயிலிருந்து விடுபடும் உணர்வை (Relax) அடைவதோடு நோயிருப்பினும் நோயற்ற நூற்றாண்டு வாழ்வைப் பெற்றவர்களாவோம். ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு நீரிழிவு நோய் வந்தாலும், அதனை ஒரு நோய் உபாதையாகக் கொள்ளாமல் நோயையே வென்று வாழ்வோமாக…

0 comments:
Post a Comment