03/10/2014

1 comment

புகைபிடிக்கும் பழக்கத்தை தடுக்கும் வாழைப்பழம்

அதிகமாகப் புகை பிடிப்பவர்களுக்கு புகைப் பிடிக்கும் பழக்கத்தை தடுக்கும் சக்தி வாழைப்பழத்தில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் பி மற்றும் தாது உப்புக்கள் (மினரல்ஸ்) உடலாலும், மனதாலும், பழக்கப்பட்டுப் போன `நிக்கோடின்' என்னும் நச்சுத் தன்மையைக் குறைக்க உதவுகின்றன.

வாழைப்பழம் குடலில் சேரும் அமிலத் தன்மையைச் சமப்படுத்த வல்லது. இதனால் நெஞ்செரிச்சலிலிருந்து மாபெரும் நிவாரணத்தை தருகிறது. வாழைப் பழத்தோடு மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவதால் இருமல் விரைவில் குணமாகும். பழுத்த நேந்திரம் பழமாக இருந்தால் இன்னும் விரைவில் குணம் தரும்.

வாழைப் பழத்தோலை பாலுண்ணிகளின் மீது பழச் சதைப்பகுதியை கட்டிவைக்க நாளடைவில் சுருங்கி உதிர்ந்து விடும். கொசுக் கடியால் நமைச்சல் கண்டபோது கடிவாயில் வாழைப்பழத் தோலின் சதைப்பகுதி கொண்டு சிறிது நேரம் தேய்ப்பதால் அரிப்பு அடங்குவதோடு தடிப்பாக வீக்கம் காணுவதும் மறையும்.

வாழைப்பழத் தோல்களை காயவைத்து எரித்துப் பொடித்து வைத்துக் கொண்டு புண்களின் மேற்பூச்சு மருந்தாகப் போடுவதால் புண்கள் விரைவில் ஆறிவிடும். வலிகண்ட இடத்தில் வாழைப்பழ தோலை சிறிது நேரம் கட்டி வைப்பதால் வலி சீக்கிரத்தில் குறைவதாக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.

ஒரு செல்லுக்கும் இன்னொரு செல்லுக்கும் இடையே ஆன மின்சாரத் தொடர்பு அறுபடுவதோ அல்லது தடைபடுவதோ தான் வலிக்குக் காரணம் என்றும் வாழைப்பழத் தோலை அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டுவதால் துண்டிக்கப்பட்ட தொடர்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வலி குறைகிறது.

வாழைப்பழத் தோலை தோல் நோய் மற்றும் ரத்தக் கசிவு கண்ட இடத்தில் மேல் வைத்துக் கட்டுவதாலோ அல்லது லேசாகத் தேய்த்து விடுவதாலோ விரைவில் குணம் ஏற்படும். வாழைப்பழத் தோலில் வீக்கத்தை கரைக்ககூடிய சக்தியும் அரிப்பைப் போக்க கூடிய சக்தியும் நுண்கிருமிகளை அழிக்கக் கூடிய சக்தியும் அடங்கியுள்ளன.

வாழைப் பூச்சாற்றுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து உள்ளுக்குக் கொடுப்பதால் ரத்தக் கசிவு, வெள்ளைப் போக்கு வயிற்றுக் கடுப்பு மாத விடாய்க் கால வலி ஆகியன தணியும்.

இளம் வாழைப் பூவை எடுத்து பாத்திரத்தில் இட்டு பிட்டவியலாக்கிச் சாறு பிழிந்து போதிய சுவைக்கான பனங்கற் கண்டு சேர்த்து உள்ளுக்குக் கொடுக்கப் பெரும்பாடு என்னும் அதிரத்தப் போக்கு கட்டுக்குள் வரும். இதனால் ஏற்படும் வலியும், ரத்த சோகையும் குணமாகும்.

1 comment:

  1. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete