ஒரு ஆண்மகனின் அழகுக்கு கம்பீரம் சேர்க்கும் வகையிலும், வீரத்தின் அடையாளமாகவும் திகழ்வது மீசை. வெறும் அழகியல் காரணங்களுக்காக மட்டுமில்லாமல், ரயில், பஸ் போன்றவற்றை கட்டிஇழுப்பதற்காகவும் சிலர் அடர்த்தியான நீண்ட மீசையை வளர்த்துள்ளனர்.
ஆனால், உடலியல் ரீதியாகவும் மீசைக்கு முக்கிய பங்குண்டு என்பதை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியின்படி, முகத்தில் அடர்த்தியான மீசை, தாடிகளை வளர்ப்பவர்களுக்கு புற்றுநோய்க்கு காரணமன கதிரியிக்கத்தின் பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளதாக தெரிய வந்துள்ளது.
‘டோசி மெட்ரிக்’ தொழில் நுட்பத்தின் மூலம், தெற்கு குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மீசை வளர்த்திருக்கும் மற்றும் மீசை மழித்திற்கும் ஆண்களிடையே பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில், அவர்களின் முக சருமத்தில் ஏற்படும் சூரியக்கதிர்களின் பாதிப்பு குறித்து கண்காணிக்கப்பட்டதில் பெரிய மீசை வளத்திருப்பவர்களின் சரும பாதிப்பு, மீசையை மழித்துவிட்டிருக்கும் நபர்களின் பாதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி முடிவுகளின்படி முகரோமம் எவ்வளவு நீளமாக உள்ளதோ…. அதற்கேற்ப புற்றுநோய்க்கு எதிரான பாதிப்பிலிருந்து மீசை நம்மை பாதுகாக்கின்றது என்பது தெளிவாகியுள்ளது.
0 comments:
Post a Comment