நோமோஃபோபியா அப்படியெனில் என்னவென்று யோசிக்குறீர்களா? அது வேறொன்றும் இல்லை. இது ஒரு வகையான பய வியாதி தான். சாதாரணமாக ஃபோபியா என்றால் காரணமின்றி தேவையில்லாமல் மனதில் எழும் ஒருவித பயம் என்று அர்த்தம். அந்த ஃபோபியாவில் நிறைய வகைகள் உள்ளன. அவை பூச்சிகளைப் பார்த்து பயப்படுவது, பொது இடங்களில் பேச பயப்படுவது என்பன.
அவற்றில் ஒன்றான நோமோஃபோபியா என்றால் தற்போது அனைவரிடமும் இருக்கும் மொபைலை எங்கேனும் தவறிவிட்டாலோ அல்லது மறந்து வீட்டில் வைத்து விட்டு, பின் அதனை நினைத்து வருத்தப்படுவது தான் நோமோஃபோபியா. கடந்த பல வருடங்களாக இந்த வியாதியானது பலரிடம் அதிகம் காணப்படுகிறது.
ஏனெனில் தற்போது நமது டெக்னாலஜி அதிகம் வளர்ந்துவிட்டது. அதனால் அவற்றை மக்கள் தெரிந்து கொள்ள அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். பின் அவை மிகவும் பிடித்து, அவற்றின் பயன்பாடு அதிகமாகிவிட்டது. சில நேரங்களில் அவை இல்லாமல் எந்த ஒரு காரியமும் செய்ய முடியாத நிலையில் உணர்கின்றனர். ஆகவே இந்த மொபைலைப் பற்றி மேற்கொண்ட ஒரு ஆய்வில், தங்களிடம் வைத்திருக்கும் மொபைல் போனில் 66 சதவீத மக்கள், இந்த நோமோஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சரி, உங்களுக்கும் நோமோஃபோபியா இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நோமோஃபோபியாவின் அறிகுறிகள்...
* இரவில் படுக்கும் போது மொபைலை தொலைத்துவிடுவது போல் கனவுகள் வந்து, அதனால் மனம் பதறி உடனே எழுந்து மொபைல் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, பின்னர் தூங்கினால், இந்த நோய் உள்ளது என்பதை அறியலாம்.
* தூங்கும் போது மொபைலை அருகில் வைத்துக் கொண்டே தூங்குவது. அவ்வாறு ஒரு நாள் கூட தவறாமல், அந்த மொபைலை படுக்க போகும் போது கையில் எடுத்துக் கொண்டு, தலையணைக்கடியில் வைத்துக் கொண்டோ அல்லது அருகில் வைத்துக் கொண்டோ தூங்கும் பழக்கம் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் இந்த நோயால் பைத்தியம் கூட பிடிக்க நேரிடும்.
* செல்போனானது வீட்டில் எங்கேனும் வைத்துவிட்டு, பின் அது ஏதோ ஒரு பேப்பரின் அடியில் இருக்க, ஆனால் அது நமது கண்களுக்கு தெரியாமல் இருந்து, தொலைந்துவிட்டது என்று மனம் முடிவு செய்துவிட்டால், அப்போது உடனே முகம், உடல் முழுவதும் வியர்க்க ஆரம்பிக்கும். மேலும் மனம் சிறிது அப்செட்டில் இருக்கும். இப்படியிருந்தால், அது இந்நோய்க்கான அறிகுறி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
* குளிக்கும் போது கூட மொபைலை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றால், இதுவும் நோமோஃபோபியாவிற்கு ஒருவித அறிகுறி.
* சிலர் ஒன்றுக்கு இரண்டு மொபைல் போன்கள் வைத்திருப்பார்கள். ஏனெனில் ஒரு மொபைலில் சார்ஜ் அல்லது தொலைந்துவிட்டாலோ, மற்றொன்றை பயன்படுத்தலாம் என்று முன்பே யோசித்து, அவர்களுடனே வைத்திருப்பார்கள். இத்தகைய அறிவு இந்த நோய் இருப்பவர்களுக்குத் தான் அதிகம் இருக்கும்.
* சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் போது, மொபைலில் சார்ஜ் குறைந்தால், நன்கு பேசிக் கொண்டிருப்பவர்களின் மனநிலையிலும் சார்ஜ் குறையும். பின்னர் மொபைலுக்கு சார்ஜ் போட்டால் தான், இவர்களது மனமும் சற்று பிரகாசிக்கும்.
மேற்கூறியவற்றில் நான்கு அறிகுறிகள் இருந்தாலும், இந்த நோய் உங்களுக்கு உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.
0 comments:
Post a Comment