23/08/2014

Leave a Comment

'ஹாஃப் பாயில்' முட்டை ஆரோக்கியமானதா..?

நினைவு தெரிந்த நாள் முதல் காலை உணவில் முட்டையை சேர்த்து கொள்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள அதிமுக்கிய புரதம், ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம். சுவாரஸ்யமாக இந்த பழக்கத்தை முன்னதாக கொண்டு வந்தது ரோமானியர்கள் ஆகும். ஊட்டச்சத்து நிறைந்த மற்ற உணவுகளை விட முட்டைகளையே அவர்கள் விரும்பினார்கள். ஆனாலும் கூட, முட்டைகளை தினமும் உட்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்ற பயத்தில் இந்த வளமையான சக்தி வாய்ந்த உணவை உண்ண பலரும் பயம் கொள்கிறார்கள். இருப்பினும் இதனை தினமும் உட்கொண்டு வந்தால் கொழுப்புகள் குறையும் என்பதே உண்மையாகும்.

முட்டையின் மஞ்சள் கருவில் லசித்தின் என்ற வெண்கருக்கொழுப்பு உள்ளது நிரூபிக்கப்பட்ட தகவலாகும். இது கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால், திசு தடிமனாதலுக்கு எதிராக சிறப்பாக செயல்படும். ஒரு முட்டையில் 186 மில்லிகிராம் அளவிலான கொலஸ்ட்ரால் இருக்கக்கூடும். ஆனாலும் கூட அதனை தினசரி அடிப்படையில் உண்ணுவதை எண்ணி வருத்தப்பட தேவையில்லை. உங்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முட்டை அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் என்ற பயமின்றி தினமும் ஒரு முட்டையை கண்டிப்பாக உண்ணலாம்.

நம் மன வளர்ச்சிக்கு தேவையான கொலஸ்ட்ராலை முட்டையின் மஞ்சள் கரு வழங்கிய போதிலும், மூளை வளர்ச்சிக்கு அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பமிலங்கள் அடங்கிய சல்பர் அவசியம். மறுபுறம், முட்டையின் மஞ்சள் கருவில் பையோஃபிளேவோனாயிடுகள் மற்றும் பாஸ்ஃபேட்டிதில் கோலின் மற்றும் சல்பர் போன்ற மூளை கொழுப்புகள் அடங்கியுள்ளது.

பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு (ஹாஃப் பாயில்) முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும். அதற்கு காரணம் அரை வேக்காடு முட்டையிலிருந்து நம் உடலுக்கு தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் நீங்குவதில்லை. முட்டையை உங்கள் உணவில் இருந்து முழுவதுமாக நீக்குவதற்கு பதில் அதனை புத்திசாலித்தனமாக உட்கொண்டால் ஆரோக்கியத்தை அளிக்கும்.

முட்டை என்பது வளமையான அளவிலான புரதத்தை கொண்டுள்ளது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே போல் அதிகமாக சமைப்பதால் ஊட்டச்சத்து அதற்கேற்ப நீங்கிவிடும். அதனால் முட்டையை அரை வேக்காட்டில் உண்ணுவது சிறந்த வழியாகும். சரி, அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா? வாங்க பார்க்கலாம்!

அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா? முட்டையின் மஞ்சள் கரு அரை வேக்காட்டுடன் இருப்பதால் அரை வேக்காடு முட்டை நல்ல ஆரோக்கியத்தை தரும். முட்டையின் மஞ்சள் கருவை அப்படியே பச்சையாக உட்கொண்டால் அதிக பயனை அளிப்பதால் சிலர் அதை விரும்புவார்கள். ஆனாலும் கூட உணவு நச்சு அல்லது சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவால் உடல் நலம் பாதிப்படையாமல் இருக்க முட்டையை அரை வேக்காட்டுடன் சமைத்துக் கொள்வது நல்லது. மேலும் அதனை போதுமான அளவில் சமைத்து உட்கொண்டால், அவை போதிய ஊட்டச்சத்துக்களை உங்களுக்கு வழங்கிவிடும். அதற்கு அதனை சிறிது நேரத்திக்கு வேக வைத்தாலே போதும், அடம் பிடிக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து விடும். முழுவதுமாக வேக வைத்த முட்டையை போல் அல்லாமல் அரை வேக்காடு முட்டையில் நீல-பச்சை சல்பர் பிரிக்கப்படமாட்டாது.

குறைந்த அளவிலான கலோரிகள் கொண்ட நொறுக்குத் தீனி வேண்டுமா? அப்படியானால் அரை வேக்காடு முட்டையே சிறந்தது. அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை உங்கள் கலோரிகளை அதிகரிப்பதில்லை. பொறித்த முட்டை போன்ற இதர முட்டை வகைகளுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டையில் கலோரிகளின் அளவு குறைவே. அரை வேக்காடு முட்டையில் 78 கலோரிகளும், 5.3 கிராம் கொழுப்புகளும் மட்டுமே அடங்கியுள்ளது. இதில் 1.6 கிராம் சாச்சுரேட் ஆகிவிடும். நீங்கள் தினசரி உண்ணும் இதர உணவுகளுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டையில் கலோரிகள் குறைவே. எண்ணெய் அல்லது வெண்ணெயில் சமைத்த முட்டையுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக விளங்குகிறது. பொறித்த முட்டையில் பொதுவாக, 90 கலோரிகளும், 6.83 கிராம் கொழுப்பும் (இதில் 2 கிராம் சாச்சுரேட் ஆகிவிடும்) அடங்கியுள்ளது.

அனைத்து வித அதிமுக்கிய அமினோ அமிலங்கள் அடங்கிய வெகு சில உணவுகளில் முட்டையும் ஒன்றாகும். அதனால் அரை வேக்காடு முட்டை உங்களை ஆரோக்கியத்துடன் வைத்திடும். முட்டையில் கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அடங்கியுள்ளது. அரை வேக்காடு முட்டை இந்த அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை அழிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

பெண்களுக்கு தினமும் 700 மைக்ரோ கிராம் அளவிலான வைட்டமின் தேவைப்படுகிறது. இதுவே ஆண்களுக்கு என்றால் 900 மைக்ரோ கிராம் ஆகும். ஒரு அரை வேக்காடு முட்டை உண்ணுவதால் கிட்டத்தட்ட 74 மைக்ரோ கிராம் கிடைத்துவிடுகிறது. இதனால் உங்கள் இலக்கையும் சுலபமாக அடைந்து விடுகிறீர்கள். இந்த ஊட்டச்சத்தினால் உங்கள் கண்கள் திறம்பட செயல்படும். இனி காலை உணவிற்கு பொறித்த முட்டை என்ற சம்பிரதாயத்தை மாற்றி, ஆரோக்கியமான வாழ்விற்கு அரை வேக்காடு முட்டையை உண்ணுங்கள். அரை வேக்காடு முட்டை ஆரோக்கியத்தை தருகிறதா? ஆம், அதில் அதிமுக்கிய வைட்டமின் ஏ ஊட்டச்சத்து உள்ளதால் சருமம், பற்கள் மற்றும் எலும்புகளை பராமரிக்கும்.

ஒரு பெரிய அரை வேக்காடு முட்டை கிட்டத்தட்ட 0.56 மைக்ரோ கிராம் வழங்குகிறது. அதில் 2.4 மைக்ரோகிராம் அளவிலான வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின்கள் ஆரோக்கியமான மெட்டபாலிசத்திற்கு தேவையானதாகும். உங்கள் உடலில் உள்ள கலோரிகளை ஆற்றல் திறனாக மாற்ற இந்த ஊட்டச்சத்துக்கள் உதவுவதால், அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதாக விளங்குகிறது. நம் நரம்பியல் அமைப்பு சரியாக செயல்படவும் வைட்டமின் பி12 உதவுகிறது.

அரை வேக்காடு முட்டையில் வெள்ளை கரு நன்றாக வெந்திருக்கும். ஆனால் மஞ்சள் கருவோ அரை வேக்காட்டுடன் வழிந்து ஓடுகிற நிலையில் இருக்கும். வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்களுக்கு அரை வேக்காடு முட்டை பரிந்துரைக்கப்படுவதில்லை. அதனால் வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனை தவிர்க்க வேண்டும். வலுவான உடல்நலத்தை கொண்டுள்ளவர்களுக்கு தான் அரை வேக்காடு முட்டை ஆரோக்கியத்தை அளிக்கும். பொறித்த முட்டையுடன் ஒப்பிடுகையில் கண்டிப்பாக அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதே.

0 comments:

Post a Comment